திருக்குறளின் வழியாக பகவத்கீதையின் ஞானம்

2017-01-09T18:48:07+00:00June, 2016|பகவத் கீதை|

செம்மொழி இலக்கியமாகிய திருக்குறளை இயற்றிய வள்ளுவர் முழுமுதற் கடவுளையே ஆதிபகவன் என்று குறிப்பிடுகிறார். குறைந்த கண்ணோட்டமுடைய சிலர் ஆதியை நூலாசிரியரின் தாயென்றும் பகவனைத் தந்தையென்றும் கூறுவர்.

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

2018-10-29T16:32:42+00:00May, 2016|பகவத் கீதை|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும். வாழும் வழிமுறை, அறநெறி ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும்

குறளின் குரல், ஆத்ம ஞானம் – திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

2017-07-11T13:35:32+00:00April, 2016|பகவத் கீதை|

தமிழ் மொழியின் முக்கியமான நூல்களில் ஒன்று: திருக்குறள். திருக்குறளின் நோக்கம் மனிதர்களை நன்னெறியிலே செலுத்தி இறையருள் பெற வைக்க வேண்டும் என்பதே. திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தின் மூன்று குறள்களில் (1, 5, 6) இறைவனின் சிறப்பான நிலையையும் அவரை நாடும் சிறப்பையும் சொல்லி, மீதி ஏழு குறள்களிலே சரணாகதி தத்துவத்தைக் கூறுகிறார் வள்ளுவர்.

தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும்

2016-12-27T15:29:33+00:00July, 2010|பொது|

தொன்றுதொட்டு சீரும் சிறப்புமாகத் திகழும் நம் தமிழ் மொழி, செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்று அதனைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கலைஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் என பற்பல சான்றோர்களைப் பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் போற்றிப் புகழும் இத்தருணத்தில், செம்மொழியான தமிழ் மொழி மெல்லமெல்ல கரைந்து வருவது எவராலும் மறுக்க முடியாத கசப்பான உண்மை. கடையேழு வள்ளல்களைக் கண்ட தமிழ்த்தாய், தற்போது ஈகைத் தன்மையே இல்லாதவர்களைக் காண்கிறாள். கண்ணகியையும் கோப்பெருந்தேவியையும் கண்ட தமிழ்த்தாய், தற்போது கற்பற்ற மங்கையர்கள் பாராட்டப்படுவதைக் கேட்கிறாள். இனிமையான பக்திப் பாடல்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்த்தாய், தற்போது கொச்சையான ஆபாசமான பாடல்களால் சிதறடிக்கப்படுகிறாள். ஏன் இந்த சீர்கேடு? இந்த சீர்கெட்ட நிலை குறித்து சற்று அலசிப் பார்ப்போம்.