நந்த கிராமம்

August, 2017|தீர்த்த ஸ்தலங்கள்|

கிருஷ்ணர் நந்த மஹாராஜருடனும் அன்னை யசோதையுடனும் கோகுலத்தில் வளர்ந்து வந்த சமயத்தில், கம்சன் அவரைக் கொல்வதற்காக பூதனை, சகடாசூரன், திருணாவர்தன் முதலிய பல அசுரர்களை அனுப்பினான். கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் வதம் செய்தபோதிலும், பிள்ளைப் பாசத்தில் மூழ்கியிருந்த நந்த மஹாராஜர் அசுரர்களின் தொடர் தொல்லைகளால் கலக்கமுற்று, கிருஷ்ணரின் பாதுகாப்பைக் கருதி கோகுலத்திலிருந்து இடம்பெயர்ந்து, சாட்டிகரா, திக், காம்யவனம் ஆகிய இடங்களில் சில காலம் வசித்தார். காம்யவனத்திலும் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே நந்த மஹாராஜர் தமது பரிவாரங்களுடன் நந்த கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார்.

கொவ்வூர்

June, 2017|தீர்த்த ஸ்தலங்கள்|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது அவரது நித்திய சகாக்களும் அவருடன் இணைந்து தோன்றினர். அவர்களுள் இராமானந்த ராயர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய பக்தராகத் திகழ்ந்தார். அவர் ஒடிஸாவில் பவானந்த ராயருடைய ஐந்து மகன்களில் ஒருவராகத் தோன்றினார். இராகவேந்திர புரியின் சீடராகக் கருதப்படும் இவர் இயற்கையாகவே ஒரு தூய பக்தராக இருந்தார். முன்பு வித்யா நகரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ராஜமுந்திரி மாகாணத்தின் ஆளுநராக பிருதாபருத்ர மன்னரின் கீழ் அவர் பணியாற்றி வந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற பிறகே இராமானந்த ராயர் மஹாபிரபுவின் லீலைகளினுள் வருகிறார்.

குருக்ஷேத்திரம் – பகவத் கீதை பிறந்த பூமி

December, 2016|தீர்த்த ஸ்தலங்கள்|

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும் திருத்தலம். பகவத் கீதையின் பிறப்பிடமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற லீலைகளைப் புரிந்திருக்கிறார். பதினெட்டு நாள்கள் நீடித்த மஹாபாரதப் போர், குருக்ஷேத்திரத்தில் அரங்கேறியது என்பதை அனைவரும் அறிவர். இப்புண்ணிய பூமியை தர்மக்ஷேத்திரம் என்றும் அழைப்பதுண்டு. குருக்ஷேத்திரத்தில் தற்போது காணப்படும் முக்கிய இடங்களைப் பற்றி சற்று [...]

ரைவதக மலை

August, 2015|தீர்த்த ஸ்தலங்கள், பொது|

பகவான் கிருஷ்ணர் துவாரகையில் வாழ்ந்தபோது தம்முடைய குடும்பத்துடனும் நகரவாசிகளுடனும் இந்த ரைவதக மலைக்குச் சென்று மகிழ்வதுண்டு. பலராமர் த்விவிதா என்ற கொரில்லா அசுரனைக் கொன்றதும், அர்ஜுனன் சுபத்ராவைக் கடத்தியதும், மற்றும் பாகவதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள இதர சில நிகழ்ச்சிகளும் இந்த ரைவதக மலையைச் சுற்றி நடந்த நிகழ்வுகளாகும். முன்னொரு காலத்தில் நாரத முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி 84,000 பிராமணர்கள் இங்கேயே தங்கியதாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.

மங்களகிரி

June, 2015|தீர்த்த ஸ்தலங்கள்|

மங்களகிரி என்னும் சிறுநகரம் இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். இந்நகரத்தின் பெயர் காரணம், அங்கு வீற்றிருக்கும் பகவான் நரசிம்மதேவரே. இம்மலையைச் சுற்றி மூன்று நரசிம்ம பகவான் திருக்கோயில்கள் அமைந்துள்ளன: பகவான் லக்ஷ்மி நரசிம்மரின் திருக்கோயில் மலை அடிவாரத்திலும், பானக நரசிம்மரின் திருக்கோயில் மலையின் பாதி உயரத்திலும், கண்டல நரசிம்மரின் திருக்கோயில் மலை உச்சியிலும் அமைந்துள்ளன. இம்மலை இந்தியாவின் எட்டு மஹா-க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாலும், லக்ஷ்மிதேவி இங்கு தவம் புரிந்த காரணத்தினாலும் தோட்டா-கிரி என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மலையின் மங்களத்திற்கு இதர சில விஷயங்களையும் காரணங்களாக பாரம்பரியம் கூறுகின்றது.

அயோத்தியா பகவான் இராமசந்திரரின் திருத்தலம்

April, 2015|தீர்த்த ஸ்தலங்கள்|

அயோத்தியாவாசிகள் இன்றும் ஸ்ரீ இராமரின் நினைவில் வாழ்கின்றனர். எங்கு சென்றாலும், இராம நாமம் தெளிவாக ஒலிக்கின்றது. அயோத்தியாவில் தங்கும் அனைவரும் இராமாயணம் நமக்கு வழங்கியிருக்கும் நல்ல அறிவுரைகளையும் பக்தி மார்க்கத்தையும் நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது.

ஸ்ரீ முஷ்ணம்

December, 2014|தீர்த்த ஸ்தலங்கள்|

இன்றைய இந்தியாவின் தமிழக மாநிலத்தில் விருத்தகாசி என்றழைக்கப்படுகிற விருத்தாசலத்திலிருந்து 20 கிமீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ்ரீ முஷ்ணம் என்னும் திருத்தலம். ஆதி வராஹ பெருமாள் திவ்யமான பன்றி ரூபத்தில் தோன்றியதால் இவ்விடம் வராஹ க்ஷேத்திரம் என்று போற்றப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு தென்னிந்திய பயணத்தின் போது தரிசித்த இவ்விடத்தை விருத்தகோலா என்றும் அறியப்படுகிறது, வராஹ பெருமாள் சுயம்புவாக தோன்றியதால் சுயம்வ்யக்த க்ஷேத்திரம் என்றும் இவ்விடம் புகழப்படுகிறது. இத்திருக்கோயிலின் வரலாற்றை அறிவதற்கு முன் வராஹ அவதாரத்தின் பின்னணியை சற்றேனும் தெரிந்து கொள்வது அவசியம்.

இராமகேலி

October, 2014|தீர்த்த ஸ்தலங்கள்|

இராமகேலி என்னும் பெயரை இந்த ஊர் பெற்றதற்கு பகவான் இராமரின் வருகை காரணமாகிறது. இராமசந்திரரின் பத்தினியான சீதா தேவியின் ஏரியை வந்தடைந்தோம், இங்கே அவள் தனது தாயிற்கு பிண்டம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள மரமானது ஐயாயிரம் வருடங்கள் பழமையானதாகக் கூறப்படுகிறது. வருடத்தில் ஒருமுறை பீகாரிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து பிண்டம் கொடுக்கின்றனர். பாலபிக்ஷா என்று அறியப்படும் மரத்தினை வழிபடுகின்றனர். இது நிச்சயமாக நான் பார்த்த மரங்களிலேயே மிகப்பெரியதாகத் தோன்றுகிறது, இதன் மாபெரும் கிளைகள் பூமிவரை இறங்கியுள்ளன.

மலைகளின் மன்னன் கோவர்தனம்

August, 2014|தீர்த்த ஸ்தலங்கள்|

இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில், மதுராவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அழகான மலையாக அமைந்திருப்பதே கோவர்தனம் என்னும் திருத்தலம். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து தோன்றிய கோவர்தன மலையானது விருந்தாவனத்தின் மணிமகுடம் என்றும் அறியப்படுகிறது.

புஷ்கரம்

June, 2014|தீர்த்த ஸ்தலங்கள்|

மஹாபாரதம், இராமாயணம், பத்ம புராணம், மற்றும் இதர வேத இலக்கியங்களிலும் புஷ்கரின் பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. “புஷ்கரம், மதுரா, துவாரகை போன்ற ஸ்தலங்களில் உபவாசமிருந்து, மனதைக் கட்டுபடுத்தி இந்த இலக்கியங்களை ஆராய்ந்தறிபவன் எல்லா பயத்திலிருந்தும் விடுபடுவான்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (12.12.61) கூறுகிறது.