புஷ்கரம்

June, 2014|தீர்த்த ஸ்தலங்கள்|

மஹாபாரதம், இராமாயணம், பத்ம புராணம், மற்றும் இதர வேத இலக்கியங்களிலும் புஷ்கரின் பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. “புஷ்கரம், மதுரா, துவாரகை போன்ற ஸ்தலங்களில் உபவாசமிருந்து, மனதைக் கட்டுபடுத்தி இந்த இலக்கியங்களை ஆராய்ந்தறிபவன் எல்லா பயத்திலிருந்தும் விடுபடுவான்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (12.12.61) கூறுகிறது.

இராம கிரி

April, 2014|தீர்த்த ஸ்தலங்கள்|

இராம கிரியில் வீற்றுள்ள இராமர் கோயிலின் புனித தன்மையால் உந்தப்பட்டு, அந்த சூழ்நிலையை உபயோகித்து நான் அனுகரனிடம் பின்வருமாறு சற்று பிரச்சாரம் செய்தேன்: “பகவான் இராமர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாடு என்பது உலகிலுள்ள அனைவருக்குமானது.

பண்டரிபுரம்

February, 2014|தீர்த்த ஸ்தலங்கள்|

மஞ்சள் மற்றும் இதர நிற உடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விட்டலர் வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார். வலது கரத்தில் தாமரையும் இடது கரத்தில் சங்கும் வைத்துள்ளார். அவரது மார்பில் பிருகு முனிவரின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அவரது காதுகள் மகர குண்டலத்தினாலும் நெற்றி திலகத்தினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மிக அருகில் செல்லும் யாத்திரிகர்கள் அவரது புன்சிரிப்பினால் கவரப்பட்டு அதனை வாழ்வின் பக்குவமாக கருதுகின்றனர்.

பிரயாகை

December, 2013|தீர்த்த ஸ்தலங்கள்|

வெள்ளை நிற கங்கை நதியும், கருநீல நிற யமுனை நதியும், கண்களுக்குப் புலப்படாமல் பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதியும் ஒன்று கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகின்றது. அமிர்தத் துளிகள் இந்த சங்கமத்தில்தான் சிதறியது என்பதால், இவ்விடத்தில்தான் கும்பமேளாவின் நீராடும் சடங்கு கொண்டாடப்படுகின்றது. காடுகள், இமயமலையின் குகைகள், மற்றும் இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து யாத்ரீகர்கள், யோகிகள், சாதுக்கள் என பலரும் இங்கு வந்து நீராடியுள்ளனர். நாங்கள் மழைக்காலம் முடிந்த தருணத்தில் சென்றதால், கங்கை, யமுனை என இரு நதிகளிலும் நீர்பெருக்கு அதிகமாக இருந்தது. படகில் ஏறி திரிவேணி சங்கமத்தை அடைந்த நாங்கள், அங்கே இரண்டு படகுகளுக்கு இடையில் மூன்றடி ஆழத்தில் மரத்தினால் கட்டப்பட்டிருந்த தளத்தில் நின்றபடி புனித நீராடினோம்.

அலர்நாத்

October, 2013|தீர்த்த ஸ்தலங்கள்|

புரியில் பிறந்த ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத்தை மிகவும் நேசித்தார். இவ்விடம் விருந்தாவனத்திற்கு சமமானது என்றும், இங்குள்ள சிறிய ஏரியானது ராதா குண்டத்திற்கு சமமானது என்றும் அவர் கூறினார். அந்த ஏரியின் கரையில் சைதன்ய மஹாபிரபு ஓய்வெடுப்பதுண்டு. 1929இல் ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத் கோயிலைப் புதுப்பிப்பதற்கும் சுற்றுசுவர் கட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். இப்பணியை முடிப்பதில் அவர் எந்த அளவிற்கு பெரும் ஆர்வம் கொண்டார் என்றால், அதற்காக அவர் அங்கு வேலை செய்தவர்களுக்கு பீடி சுருட்டிக் கொடுத்துள்ளார். மேலும், வாமனர், நரசிம்மர், மற்றும் வராஹரின் சிற்பங்களை அவர் கோயிலின் வெளிச்சுவற்றில் பதித்தார்.

ரெமுணா

August, 2013|தீர்த்த ஸ்தலங்கள்|

ரெமுணா என்பது ஒடிஸா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம், ஆனால் எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் சுறுசுறுப்பான இடமாகக் காணப்படுகிறது. இவ்வூர் முழுவதுமே க்ஷீர-சோரா கோபிநாதரின் கோயிலை மையமாக வைத்துதான் செயல்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இங்குள்ள மக்கள் பக்தர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆனந்தம் கொள்கின்றனர். இது ரெமுணாவின் நீண்ட காலப் பண்பாட்டை நினைவுபடுத்துகிறது. மாதவேந்திர புரியும் பகவான் சைதன்யரும் எவ்வளவு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்கள் என்பதை சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேல்கோட்டை

December, 2012|தீர்த்த ஸ்தலங்கள்|

மேல்கோட்டை, மைசூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீபாத இராமானுஜாசாரியரைப் பின்பற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களால், உலகின் மிக முக்கியமான நான்கு புனித ஸ்தலங்கள் என்று கருதப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இராமானுஜர் ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் மேல்கோட்டையில் தங்கி, விக்ரஹ வழிபாட்டிற்குரிய உயரிய தரத்தை வகுத்துக் கொடுத்தார், இஃது இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

அங்கோர் வாட்

October, 2012|தீர்த்த ஸ்தலங்கள்|

இஃது ஒரு கோயில் நகரம், இதன் முக்கிய கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மஹாவிஷ்ணுவின் திருக்கோயில். இருப்பினும், பௌத்த மதத்தின் ஆதிக்கத்தினால், விஷ்ணு கோயிலைச் சுற்றி பல்வேறு பௌத்த மத கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், காலப்போக்கில் இவ்வெல்லா கோயில்களும் பராமரிப்பின்றி பல்வேறு பிரச்சனைகளால் கைவிடப்பட்டன.

விருந்தாவனம், கிருஷ்ணரின் லீலா பூமி

August, 2012|தீர்த்த ஸ்தலங்கள்|

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை.

கோவிந்தனின் இல்லம்

October, 2011|தீர்த்த ஸ்தலங்கள்|

கோவிந்தஜியின் தோற்றத்தைக் கேள்வியுற்ற பகவான் சைதன்யர், பூரியிலிருந்து விருந்தாவனத்திற்குச் சென்ற காஷீஸ்வர பண்டிதரிடம் மற்றுமொரு கிருஷ்ண விக்ரஹத்தினைக் கொடுத்தனுப்பினார். கௌர கோவிந்தர், அதாவது “பொன்னிற கோவிந்தர்” என்றழைக்கப்பட்ட அவ்விக்ரஹத்தினை காஷீஸ்வர பண்டிதர் கோவிந்தஜியின் அருகிலேயே பிரதிஷ்டை செய்தார்.