மேல்கோட்டை

2017-02-06T18:53:54+00:00December, 2012|தீர்த்த ஸ்தலங்கள்|

மேல்கோட்டை, மைசூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீபாத இராமானுஜாசாரியரைப் பின்பற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களால், உலகின் மிக முக்கியமான நான்கு புனித ஸ்தலங்கள் என்று கருதப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இராமானுஜர் ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் மேல்கோட்டையில் தங்கி, விக்ரஹ வழிபாட்டிற்குரிய உயரிய தரத்தை வகுத்துக் கொடுத்தார், இஃது இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

அங்கோர் வாட்

2017-02-04T17:16:26+00:00October, 2012|தீர்த்த ஸ்தலங்கள்|

இஃது ஒரு கோயில் நகரம், இதன் முக்கிய கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மஹாவிஷ்ணுவின் திருக்கோயில். இருப்பினும், பௌத்த மதத்தின் ஆதிக்கத்தினால், விஷ்ணு கோயிலைச் சுற்றி பல்வேறு பௌத்த மத கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், காலப்போக்கில் இவ்வெல்லா கோயில்களும் பராமரிப்பின்றி பல்வேறு பிரச்சனைகளால் கைவிடப்பட்டன.

விருந்தாவனம், கிருஷ்ணரின் லீலா பூமி

2017-02-04T10:29:23+00:00August, 2012|தீர்த்த ஸ்தலங்கள்|

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை.

கோவிந்தனின் இல்லம்

2017-01-12T17:58:47+00:00October, 2011|தீர்த்த ஸ்தலங்கள்|

கோவிந்தஜியின் தோற்றத்தைக் கேள்வியுற்ற பகவான் சைதன்யர், பூரியிலிருந்து விருந்தாவனத்திற்குச் சென்ற காஷீஸ்வர பண்டிதரிடம் மற்றுமொரு கிருஷ்ண விக்ரஹத்தினைக் கொடுத்தனுப்பினார். கௌர கோவிந்தர், அதாவது “பொன்னிற கோவிந்தர்” என்றழைக்கப்பட்ட அவ்விக்ரஹத்தினை காஷீஸ்வர பண்டிதர் கோவிந்தஜியின் அருகிலேயே பிரதிஷ்டை செய்தார்.

துவாரகை

2016-12-26T11:49:56+00:00August, 2011|தீர்த்த ஸ்தலங்கள்|

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பூமியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபோது, தன்னுடைய லீலையின் பெரும்பாலான காலத்தை துவாரகை என்ற நகரத்தில்தான் கழித்தார். 16,108 உருவங்களாக தன்னை விரிவாக்கம் செய்தது, 16,108 அரண்மனைகளை தன்னுடைய 16,108 இராணியர்களுக்காக உண்டாக் கியது போன்றவை உட்பட பல்வேறு அற்புதமான லீலைகளை அவர் நிகழ்த்தினார். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் ஓர் எளிய இடையர் குலச் சிறுவனாக வாழ்ந்தார்; ஆனால், துவாரகையில் செல்வச் செழிப்புமிக்க இளவரசராக வாழ்ந்தார். துவாரகை என்றால் “பரமனை அடைவதற்கான வாயில்,” அல்லது “வாயில்கள் நிறைந்த நகரம்” என்பது பொருள். செல்வச் செழிப்புமிக்க நகரத் திற்கு பல வாயில்கள் இருப்பது பாரம்பரிய வழக்கம், இஃது அந்நகரத்தைப் பாதுகாப்பதில் அரசருக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்துவதாகும். ஆனால் இன்றைய துவாரகையில், இஸ்கானின் பாதயாத்திரையின் நினை வாகவும் ஸ்ரீல பிரபுபாதரின் நூற்றாண்டு விழாவின் நினைவாகவும் 1988ஆம் ஆண்டு அந்நகரத்தின் முகப்பில், ஸ்ரீல பிரபுபாதர் நுழைவாயில் நிறுவப்படும் வரை, வேறு வாயில்கள் ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

சித்திரகூடம்

2017-01-06T17:53:28+00:00April, 2011|தீர்த்த ஸ்தலங்கள்|

பகவான் ஸ்ரீ இராமர் தன் பத்தினி சீதாதேவியுடனும் தம்பி இலட்சுமணருடனும் சித்திரகூட வனத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர்கள் இங்கு எவ்வாறு வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் போன்ற தகவல்கள் இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யிருந்தது. அவர் இலட்சுமணருடனும் சீதாதேவியுடனும் வனத்தில் நுழைந்தபோது, எங்கே தங்க வேண்டும் என்பதை பரத்வாஜ முனிவரிடம் வினவினார். பரத்வாஜ முனிவர் தன்னுடைய ஆஷ்ரமத்தில் இருந்து பத்து மைல் தொலைவிலுள்ள சித்திரகூடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

மதுராவில் வசித்தல்

2017-02-23T11:57:15+00:00March, 2010|தீர்த்த ஸ்தலங்கள்|

கவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது வசிப்பிடத்தைப் பற்றி பகவத் கீதையில் (15.6) பின்வருமாறு கூறுகிறார்: “எனது அந்த உயர்ந்த இருப்பிடம், சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.” அத்தகு சிறப்புமிக்க கோலோக விருந்தாவனத்தை, பிரம்ம சம்ஹிதையில் (5.29) பிரம்மதேவர் பின்வருமாறு விவரிக்கின்றார்: “விலை மதிப்பற்ற சிந்தாமணிக் கற்களால் அமைக்கப்பட்டுள்ள முழுமுதற் கடவுளின் வசிப்பிடத்தில், விரும்பியதை வழங்கும் கற்பக மரங்கள் நிறைந்துள்ளன. சுரபிப் பசுக்களை பராமரிக்கும் ஆதி புருஷரான கோவிந்தர் அங்கு இலட்சக்கணக்கான கோபியர்களால் தொண்டு செய்யப் படுகிறார்.”

SUBSCRIBE NOW
close-link