கோபி வல்லபபுர்

2016-10-28T00:42:59+05:30June, 2016|தீர்த்த ஸ்தலங்கள்|

இன்றைய இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபுர் மாவட்டத்தில் அமைந்திருப்பதே கோபி வல்லபபுர் என்னும் திருத்தலம். வெளியுலக மக்களுக்கு பரவலாக அறியப்படாதபோதிலும், கௌடீய வைஷ்ணவர்களுக்கு மத்தியில் கோபி வல்லபபுர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாகும். கரக்புரிலிருந்து சுமார்ƒ200 கி.மீ. தொலைவில், ஒடிசா மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தை வைஷ்ணவர்கள் "குப்த விருந்தாவனம்" என்றும் அழைப்பதுண்டு.

திருப்புல்லாணி

2018-12-06T14:03:36+05:30April, 2016|தீர்த்த ஸ்தலங்கள்|

இராமசந்திர பகவானிடம் விபீஷணன், சமுத்திர ராஜன், சுகர் மற்றும் சரணர் இவ்விடத்தில் சரணடைந்த காரணத்தினால், இத்திருத்தலம் சரணாகதி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.

நாசிக்

2016-10-28T00:43:11+05:30December, 2015|தீர்த்த ஸ்தலங்கள்|

நாசிக் என்னும் பெயரானது நாஸிக என்னும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது, நாஸிக என்றால் "மூக்கு" என்று பொருள். இங்குதான் லக்ஷ்மணர் இராவணனின் தங்கையான சூர்பனகையின் மூக்கை அறுத்தார்.

ஸ்ரீ புவனேஷ்வர்

2016-10-28T00:43:14+05:30October, 2015|தீர்த்த ஸ்தலங்கள்|

பகவான் ஸ்ரீ கௌராங்கர் (சைதன்ய மஹாபிரபு) விஜயம் செய்து தமது லீலைகளை அரங்கேற்றிய இடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுவுடன் அழைத்துச் செல்லும் பகவத் தரிசன யாத்திரை சேவாதாரிகளுக்கு எனது முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அயோத்தியா பகவான் இராமசந்திரரின் திருத்தலம்

2016-10-31T20:30:09+05:30April, 2015|தீர்த்த ஸ்தலங்கள்|

அயோத்தியாவாசிகள் இன்றும் ஸ்ரீ இராமரின் நினைவில் வாழ்கின்றனர். எங்கு சென்றாலும், இராம நாமம் தெளிவாக ஒலிக்கின்றது. அயோத்தியாவில் தங்கும் அனைவரும் இராமாயணம் நமக்கு வழங்கியிருக்கும் நல்ல அறிவுரைகளையும் பக்தி மார்க்கத்தையும் நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது.

ஏகசக்ரா

2018-06-11T13:35:12+05:30February, 2015|தீர்த்த ஸ்தலங்கள்|

இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும் திருத்தலம். ஆதி குருவான பலராமர் கலி யுகத்தில், 1474இல் நித்யானந்த பிரபுவாக அவதரித்த இத்திருத்தலத்தை தற்போது பீர்சந்திரபூர் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. மஹாபாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏகசக்ரா என்றவுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வனவாசத்தின்போது பகாசுரன் என்னும் அசுரனை கொன்றது நினைவுக்கு வரும். குருக்ஷேத்திரப் போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மரை கொல்வதற்கு தேரின் சக்கரத்தை கையிலேந்தி பிறகு அந்த சக்கரத்தை வீசி எறிந்தபோது, அந்த ஒரு சக்கரம் விழுந்த இடமே ஏகசக்ரா என்று பெயரிடப்பட்டது. ஏகசக்ராவில் அமைந்துள்ள திருத்தலங்களை அறிவதற்கு முன் நித்யானந்த பிரபுவின் தெய்வீக தன்மையையும் லீலைகளையும் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம்.

SUBSCRIBE NOW
close-link