பக்குவமான சமுதாய அமைப்பு

2018-06-11T14:08:27+05:30October, 2016|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

நமது உடலில், மூளை, கைகள், வயிறு, கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளதுபோல, இந்த சமுதாயமும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இஃது இயல்பானதாகும். ஆனால் தலையை வெட்டிவிட்டால் உடலினால் என்ன பயன்? அஃது ஒரு பிணம். அதுபோலவே, பிராமணப் பண்பாடு இல்லாத இன்றைய சமுதாயம் தலையற்ற சமுதாயமாகும். மிக சக்தி வாய்ந்த பாதுகாப்புத் துறையும் (சத்திரியர்களும்), அனைத்து வசதிகளும் கொண்ட பொருளாதாரத் துறையும் (வைசியர்களும்), எண்ணிலடங்காத தொழிலாளர்களும் (சூத்திரர்களும்) இன்றைய சமுதாயத்தில் இருக்கலாம். ஆனால் தலைப் பாகம் (பிராமணர்களின் பிரிவு) இல்லாததால், இன்றைய சமுதாயம் உயிரற்ற உடலாகவே செயல்படுகிறது. இதனால்தான் அனைவரும் துன்பப்படுகிறார்கள்.

மக்களாட்சி-பிரச்சனைகளும் தீர்வுகளும்

2018-10-29T18:11:53+05:30May, 2016|ஞான வாள்|

"மக்களால் மக்களுக்காக" என்று கூறப்படும் மக்களாட்சியின் முக்கிய அங்கம் தேர்தல். தற்போது தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அனைத்து மக்களும் தேர்தல் செய்திகளை மிகமிக ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருவாயில், ஆன்மீக இதழில் தேர்தல் பற்றிய கட்டுரையா என்று சிலர்

வர்ணாஷ்ரம தர்மம்

2016-10-31T18:31:24+05:30March, 2015|வர்ணாஷ்ரம தர்மம்|

ஒருமுறை ஓர் இந்து அமைப்பின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது, அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இந்து மதத்தில் அனைத்து விஷயங்களும் விஞ்ஞானபூர்வமானவை, ஆனாலும் ஒரு விஷயத்தால் அதன் புகழ் மங்கி வருகிறது, அது வர்ணாஷ்ரம தர்மம், அதை மட்டும் தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என கூறினார்.

பக்குவமான சமுதாய அமைப்பு

2016-12-03T14:38:24+05:30July, 2013|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

உலகெங்கிலும் உள்ள மனித சமுதாயம், நான்கு வர்ணங்களாகவும் (ஜாதிகளாகவும்), நான்கு ஆஷ்ரமங்களாகவும் (வாழ்வின் பருவங்களாகவும்) பிரிக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகளின் பிரிவு, போர் புரிவோரின் பிரிவு, விவசாயம் செய்வோரின் பிரிவு, தொழிலாளர்களின் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளாகும். இவை ஒருவரின் தொழிலுக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு பிரிக்கப்பட்டுள்ளன, பிறப்பினால் அல்ல. மாணவப் பருவம், இல்லற பருவம், ஓய்வு பெற்ற பருவம், பக்திப் பருவம் ஆகிய நான்கும் வாழ்வின் பருவங்களாகும். மனித சமுதாயத்தின் சிறப்பான நன்மைக்கு இப்பிரிவுகள் அவசியம்; இல்லையெனில் எந்த சமூக அமைப்பும் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைய முடியாது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிலும், பரம அதிகாரியான முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

SUBSCRIBE NOW
close-link