ஆன்மீக குருவிற்கான பரிசோதனை – 1

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஏன் ஆன்மீக குரு?

ஆன்மீக வாழ்வினுள் நுழைவதற்கு பரம புருஷரின் கருணை, ஆன்மீக குருவின் கருணை ஆகிய இரண்டு விஷயங்கள் அவசியம் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வலியுறுத்தியுள்ளார்:

ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ
குரு க்ருஷ்ண ப்ரஸாதே பாய் பக்தி லதா பீஜ

உயிர்வாழிகள் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலை மாற்றி, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாறி, ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு மாற்றி பிரபஞ்சந்தோறும் திரிந்து கொண்டுள்ளனர். ஆத்மா எவ்வாறு ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறுகிறது என்னும் அறிவு நவீன கால கல்வியாளர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். இதனை நாங்கள் “பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்” என்னும் நூலில் விளக்கியுள்ளோம்.
உங்களை இந்த கிரகத்திலிருந்து எண்ணற்ற ஆன்மீக கிரகங்களைக் கொண்ட வைகுண்ட லோகத்திற்கு குருவினால் மாற்ற முடியும். ஆன்மீக வானின் மிகவுயர்ந்த லோகம் கிருஷ்ணருடைய லோகம், அது கோலோக விருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் எவ்வாறு கோலோக விருந்தாவனம் எனப்படும் கிருஷ்ண லோகத்திற்கு நேரடியாக மாற்றம் பெறுவது என்னும் தகவலை வழங்குவதற்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் முயற்சி செய்கிறது. இதுவே எங்களது குறிக்கோள்.

இந்த ஜடவுலகத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் என்ன வேற்றுமை? ஆத்மா என்னும் முறையில் நீங்கள் நித்தியமானவர்கள் என்றபோதிலும், இந்த ஜடவுலகில் நீங்கள் உங்களுடைய உடலை மாற்றியே ஆக வேண்டும். அஜோ நித்ய: ஷாஷ்வதோ ’யம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே, உங்களுடைய ஜடவுடல் அழியும்போது நீங்கள் அழிவதில்லை, ஆனால் மற்றோர் உடலுக்கு நீங்கள் மாறியாக வேண்டும். அந்த உடலானது 84 இலட்சம் வகையான உயிரினங்களில் எதுவாகவும் இருக்கலாம். ஒன்பது இலட்சம் வகையான நீர்வாழ்வன உள்ளன, இருபது இலட்சம் வகையான தாவரங்கள் உள்ளன, பதினொரு இலட்சம் வகையான பூச்சிகள் உள்ளன, பத்து இலட்சம் வகையான பறவைகள் உள்ளன, முப்பது இலட்சம் வகையான மிருகங்கள் உள்ளன. இவற்றைக் கடந்து நீங்கள் மனிதப் பிறவியை அடைகிறீர்கள். தற்போது இந்த உடல் மாற்றம் என்னும் சுழற்சியைத் தொடர்வதா அல்லது மிகவுயர்ந்த லோகமான ஆன்மீக வானத்திற்கு இடம்பெயர்வதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அஃது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாகும். உங்களுக்கு இந்த மனிதப் பிறவி கொடுக்கப்பட்டுள்ளது, இங்கே நீங்கள் உங்களுடைய விருப்பத்தைத் தீர்மானிக்க முடியும்.

இது பகவத் கீதையில் (9.25) உறுதிப்படுத்தப் பட்டுள்ளது:

யாந்தி தேவ வ்ரதா தேவான்பித்ரூன் யாந்தி பித்ரு வ்ரதா
பூதானி யாந்தி பூதேஜ்யாயாந்தி மத் யாஜினோ ’அபி மாம்

உயர்ந்த லோகங்களுக்கு ஏற்றம்பெற விரும்புபவர்கள், அதாவது தேவ லோகத்திற்கு (ஸ்வர்கத்திற்கு) ஏற்றம்பெற்று அங்கே உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் நீண்ட ஆயுளையும் அடைய விரும்புபவர்கள் தேவர்களை வழிபடலாம், அல்லது நீங்கள் உங்களை பூதங்கள் வாழக்கூடிய லோகத்திற்கோ, பித்ருக்கள் வாழக்கூடிய லோகத்திற்கோ, கிருஷ்ணர் வாழக்கூடிய லோகத்திற்கோ மாற்றிக்கொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியம். இவையனைத்தும் உங்களுடைய செயல்களை அடிப்படையாகக் கொண்டதே. ஆனால் இந்த ஜடவுலகினுள் இருக்கும் வரை ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கும் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கும் நீங்கள் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த சுழற்சி ஸம்ஸார என்று அழைக்கப்படுகிறது. இந்த சுழற்சியை நிறுத்துவதற்கு குரு அவசியம்.

 ஒருவர் அனுப்பும் பணத்தினை நேர்மையுடன் எடுத்துச் சென்று வழங்கும் தபால்காரரைப் போன்று, ஆன்மீக குருவானவர் கிருஷ்ணரின் கருணையினை மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்.

போர் போன்ற வாழ்க்கை

இந்த ஜட உலகமானது தாவாநல அல்லது காட்டுத் தீக்கு ஒப்பிடப்படுகிறது. காட்டிற்கு யாரும் தீ மூட்டுவதில்லை; ஆயினும், காட்டுத் தீ இயற்கையாக நிகழ்வதை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம். அதுபோலவே, யாரும் துன்பப்பட விரும்புவதில்லை, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறார்கள்; ஆனால் துன்பத்தை ஏற்கும்படி அனைவரும் பலவந்தப்படுத்தப்படுகிறார்கள். இந்த ஜடவுலகில் நமது நினைவிற்கெட்டாத காலந்தொட்டு இன்றைய தருணம் வரை பல்வேறு போர்கள் நிகழ்ந்துள்ளன. போர்களைத் தடுப்பதற்கு மக்கள் பல்வேறு வகையான வழிமுறைகளை உருவாக்கியுள்ளபோதிலும், உலகப் போர்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளன.
நான் இளைஞனாக இருந்தபோது, முதல் உலகப்போர் முடிந்த பின்னர், 1920இல் லீக் ஆஃப் நேசன்ஸ் என்னும் அமைப்பானது உலக மக்களிடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. யாரும் போரை விரும்பவில்லை, ஆனால் மீண்டும் காட்டுத்தீபோல் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. தற்போது அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையினை உருவாக்கியுள்ளனர்; ஆயினும், போர் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது. வியட்நாம் போர், பாகிஸ்தான் போர் என பல்வேறு போர்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. நீங்கள் உங்களால் முடிந்தவரை மிகவும் அமைதியாக வாழ்வதற்கு முயற்சி செய்யலாம், ஆனால், இயற்கை அதனை அனுமதிக்காது. நிச்சயம் போர் என்பது நிகழும். போர் போன்ற சூழ்நிலை எப்போதுமே இருக்கிறது, நாடுகளுக்கிடையில் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதர்களுக்கிடையிலும் நிகழ்கிறது, அண்டை வீட்டார்களுக்கிடையில் நடைபெறுகிறது, கணவன் மனைவிக்கிடையில் நிகழ்கிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிகழ்கிறது. இதுபோன்ற போர் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே உள்ளன.

காட்டுத் தீயை அணைக்கும் குரு

இவை தாவா நல, காட்டுத்தீ என்று அழைக்கப்படுகின்றன. யாரும் காட்டிற்குச் சென்று தீ மூட்டுவதில்லை, ஆனால் தானாகவே காய்ந்த மூங்கிலின் உராய்வினால் காட்டில் நெருப்பு பற்றிக்கொள்கிறது. அதுபோலவே நாம் துக்கத்தை விரும்பாதபோதிலும், நம்முடைய உறவுகள் எதிரிகளை உருவாக்குகின்றன, அங்கே சண்டையும் போரும் நிகழ்கின்றது. இது ஸம்சார தாவாநல என்று அழைக்கப்படுகிறது. இந்த காட்டுத்தீயானது தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது. உங்களை இந்தத் தீயிலிருந்து விடுவிக்கக்கூடிய அங்கீகாரம் பெற்ற நபர், குரு அல்லது ஆன்மீக ஆசிரியர் என்று அழைக்கப்படுகிறார்.
அவர் உங்களை எவ்வாறு விடுவிக்கின்றார்? அவருடைய வழிமுறை என்ன? மேற்கூறிய அதே உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். காட்டில் நெருப்பு பற்றிக்கொள்ளுமெனில், தீயணைப்பு படையினரை அங்கே அனுப்பி நீரினை வாளியில் ஊற்றி நெருப்பினை அணைக்க இயலாது. அது சாத்தியமல்ல. காட்டுத்தீயை எவ்வாறு அணைக்க இயலும்? வானத்திலிருந்து மழை பொழிந்தால் மட்டுமே காட்டில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பினை அணைக்க முடியும். வானத்திலிருந்து வரும் மழையானது உங்களுடைய விஞ்ஞான அறிவைச் சார்ந்தது அல்ல. அந்த மழையானது முழுமுதற் கடவுளின் கருணையைச் சார்ந்ததாகும். எனவே, ஆன்மீக குருவானவர் அத்தகு மேகத்திற்கு ஒப்பிடப்படுகிறார். மேகத்திலிருந்து மழை நீர் பெருக்கெடுத்து வருவதுபோல, ஆன்மீக குருவானவர் பரம புருஷ பகவானின் கருணையைப் பொழிபவராகத் திகழ்கிறார். மேகமானது கடலிலிருந்து நீரை கிரகிக்கின்றது, அதற்கென்று சொந்த நீர் எதுவும் இல்லை. அதுபோலவே ஆன்மீக குருவானவர் பரம புருஷ பகவானிடமிருந்து கருணையைப் பெறுகிறார், அவரிடம் சொந்தக் கருணை என்று ஏதும் கிடையாது, அவர் முழுமுதற் கடவுளின் கருணையைத் தாங்கி வருகிறார். இதுவே ஆன்மீக குருவின் தகுதியாகும்.

 நம்முடைய உலக வாழ்க்கை யாரும் பற்ற வைக்காமல் எரியக்கூடிய காட்டுத் தீக்கு ஒப்பிடப்படுகிறது; ஆன்மீக குருவானவர் அந்த காட்டுத் தீயினை அணைக்கும் மழை மேகத்திற்கு ஒப்பிடப்படுகிறார்.

தபால்காரராகத் திகழும் ஆன்மீக குரு

“நான் கடவுள், என்னால் உங்களுக்கு கருணையை வழங்க முடியும்,” என்று ஆன்மீக குரு ஒருபோதும் கூறுவதில்லை. அவ்வாறு கூறுபவர் ஆன்மீக குருவல்ல, அவர் ஏமாற்றுக்காரர். “நான் கடவுளின் சேவகன்; நான் அவருடைய கருணையைக் கொண்டு வந்துள்ளேன். அதனை எடுத்துக் கொண்டு திருப்தியடையுங்கள்,” என்றுதான் ஆன்மீக குரு கூறுகிறார். இதுவே ஆன்மீக குருவின் பணியாகும். அவர் ஒரு தபால்காரரைப் போன்றவர். தபால்காரர் பெருமளவிலான பணத்தை உங்களுக்கு வழங்கும்போது, அஃது அவருடைய சொந்தப் பணமல்ல. அந்தப் பணமானது வேறு ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் நேர்மையுடன் அதனை உங்களுக்கு வழங்குகிறார். “ஐயா, இங்கே உங்களுக்குரிய பணம் வந்துள்ளது. இதனை எடுத்துக்கொள்ளுங்கள்.” இவ்வாறாக, அவர் வழங்கும் பணம் அவருடைய பணம் அல்ல என்றபோதிலும், நீங்கள் அவர்மீது திருப்திகொள்கிறீர்கள்.
அதுபோலவே, நாம் அனைவரும் பௌதிக வாழ்க்கை எனும் காட்டுத்தீயினால் துன்பப்பட்டுக் கொண்டுள்ளோம். ஆனால் ஆன்மீக குரு முழுமுதற் கடவுளின் செய்தியைக் கொண்டு வந்து நம்மை விடுவிக்கின்றார். நீங்கள் அதனை ஏற்றுக் கொண்டால் திருப்தியடைவீர்கள். இதுவே ஆன்மீக குருவின் தொழிலாகும்.

 

Title

ஸம்சார தாவாநல-லீட-லோகா த்ராணாய காருண்ய-கனாகனத்வம் ப்ராப்தஸ்ய கல்யாண-குணார்ணவஸ்ய வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

இஃது ஆன்மீக குருவிற்கான பிரார்த்தனையாகும், “ஐயா, நீங்கள் முழுமுதற் கடவுளின் கருணையை கொண்டு வந்துள்ளீர்; எனவே, நாங்கள் உங்களுக்கு மிகவும் கடன்பட்டவர்கள். நீங்கள் எங்களை விடுவிப்பதற்காக வந்துள்ளீர், இதனால் நாங்கள் எங்களுடைய மரியாதைக்குரிய வந்தனங்களை தங்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.” இதுவே மேற்கூறிய ஸ்லோகத்தின் பொருளாகும், உங்களுடைய இதயத்தினுள் கொழுந்து விட்டெரியும் நெருப்பினை அணைப்பதற்கான செய்தியினை ஆன்மீக குரு கொண்டு வருகிறார், இதுவே அவருடைய முதல் தகுதியாகும். இதுவே ஆன்மீக குருவிற்கான முதல் பரிசோதனையாகும்.
ஒவ்வொருவரின் இதயத்திலும் கவலை என்னும் காட்டுத் தீ எரிந்து கொண்டுள்ளது. இதுவே பௌதிக வாழ்க்கையின் இயற்கையாகும். ஒவ்வொருவரும் கவலையுடன் உள்ளனர், யாரும் அதிலிருந்து விடுபட்டவர்கள் அல்ல. சிறிய பறவைகூட கவலையுடன் உள்ளது. நீங்கள் ஒரு சிறிய பறவைக்கு தானியங்களை வழங்கினால், அஃது அதனை அமைதியுடன் உண்ணாது. அஃது இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்தபடி “யாரேனும் என்னைக் கொல்ல வருகிறார்களா?” என்ற எண்ணத்துடன் உண்ணும். இதுவே பௌதிக வாழ்க்கை. பௌதிக உலகில் உள்ள ஒவ்வொருவரும்–ஜனாதிபதியான திரு. நிக்சன் உட்பட ஒவ்வொருவரும்–கவலையுடன் உள்ளனர். மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது. எங்களுடைய நாட்டில் காந்திகூட கவலை நிறைந்தவராக இருந்தார். எல்லா அரசியல்வாதிகளும் கவலையுடனே உள்ளனர். அவர்கள் மிகப்பெரிய பதவியுடன் இருக்கலாம், ஆனால் பௌதிக வாழ்க்கை என்னும் கவலை அங்கே இருக்கத்தான் செய்கிறது. எனவே, நீங்கள் கவலையற்ற வாழ்வினை விரும்பினால், ஆன்மீக குருவிடம் புகலிடம் பெறுதல் அவசியமாகும். அந்த குருவின் உபதேசங்களினால் நீங்கள் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்–இதுவே குருவிற்கான பரிசோதனையாகும். இதனைக் கொண்டு உங்களால் குருவைக் கண்டறிய முடியும். வெறும் பெயருக்காக அல்லது நாகரிகத்திற்காக குருவைத் தேடுவதற்கு முயற்சிக்க வேண்டாம். வீட்டில் நாயை வைத்துக்கொள்வது நாகரிகம் என்று மக்கள் நினைக்கின்றனர்; அதுபோல குருவை வைத்துக்கொள்வது நாகரிகம் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய இதயத்திலுள்ள கவலை என்னும் காட்டுத்தீயினை அணைக்கக்கூடிய குருவை நீங்கள் ஏற்க வேண்டும். இதுவே குருவிற்கான முதல் பரிசோதனையாகும்.

இஃது ஆன்மீக குருவிற்கான பிரார்த்தனையாகும், ஐயா, நீங்கள் முழுமுதற் கடவுளின் கருணையை கொண்டு வந்துள்ளீர்; எனவே, நாங்கள் உங்களுக்கு மிகவும் கடன்பட்டவர்கள். நீங்கள் எங்களை விடுவிப்பதற்காக வந்துள்ளீர், இதனால் நாங்கள் எங்களுடைய மரியாதைக்குரிய வந்தனங்களை தங்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.” இதுவே மேற்கூறிய ஸ்லோகத்தின் பொருளாகும், உங்களுடைய இதயத்தினுள் கொழுந்து விட்டெரியும் நெருப்பினை அணைப்பதற்கான செய்தியினை ஆன்மீக குரு கொண்டு வருகிறார், இதுவே அவருடைய முதல் தகுதியாகும். இதுவே ஆன்மீக குருவிற்கான முதல் பரிசோதனையாகும்.

ஒவ்வொருவரின் இதயத்திலும் கவலை என்னும் காட்டுத் தீ எரிந்து கொண்டுள்ளது. இதுவே பௌதிக வாழ்க்கையின் இயற்கையாகும். ஒவ்வொருவரும் கவலையுடன் உள்ளனர், யாரும் அதிலிருந்து விடுபட்டவர்கள் அல்ல. சிறிய பறவைகூட கவலையுடன் உள்ளது. நீங்கள் ஒரு சிறிய பறவைக்கு தானியங்களை வழங்கினால், அஃது அதனை அமைதியுடன் உண்ணாது. அஃது இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்தபடி யாரேனும் என்னைக் கொல்ல வருகிறார்களா?” என்ற எண்ணத்துடன் உண்ணும். இதுவே பௌதிக வாழ்க்கை. பௌதிக உலகில் உள்ள ஒவ்வொருவரும்ஶீஜனாதிபதியான திரு. நிக்சன் உட்பட ஒவ்வொருவரும்ஶீகவலையுடன் உள்ளனர். மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது. எங்களுடைய நாட்டில் காந்திகூட கவலை நிறைந்தவராக இருந்தார். எல்லா அரசியல்வாதிகளும் கவலையுடனே உள்ளனர். அவர்கள் மிகப்பெரிய பதவியுடன் இருக்கலாம், ஆனால் பௌதிக வாழ்க்கை என்னும் கவலை அங்கே இருக்கத்தான் செய்கிறது. எனவே, நீங்கள் கவலையற்ற வாழ்வினை விரும்பினால், ஆன்மீக குருவிடம் புகலிடம் பெறுதல் அவசியமாகும். அந்த குருவின் உபதேசங்களினால் நீங்கள் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்ஶீஇதுவே குருவிற்கான பரிசோதனையாகும். இதனைக் கொண்டு உங்களால் குருவைக் கண்டறிய முடியும். வெறும் பெயருக்காக அல்லது நாகரிகத்திற்காக குருவைத் தேடுவதற்கு முயற்சிக்க வேண்டாம். வீட்டில் நாயை வைத்துக்கொள்வது நாகரிகம் என்று மக்கள் நினைக்கின்றனர்; அதுபோல குருவை வைத்துக்கொள்வது நாகரிகம் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய இதயத்திலுள்ள கவலை என்னும் காட்டுத்தீயினை அணைக்கக்கூடிய குருவை நீங்கள் ஏற்க வேண்டும். இதுவே குருவிற்கான முதல் பரிசோதனையாகும்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

2 Comments

  1. shoban natrayan August 12, 2016 at 5:02 pm - Reply

    மெயில் மூலம் அனுப்புவது இலவசமா

    • Tamil BTG Staff April 25, 2017 at 9:15 pm - Reply

      Yes

Leave A Comment