சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள்

பின்வரும் உரையாடலில், நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு இயற்கையைச் சார்ந்த சமுதாயத்தை அமைப்பதே தீர்வு என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களிடையே விளக்குகிறார்.

ஸ்ரீல பிரபுபாதர்: இக்காலத்திலுள்ள அரசியல்வாதிகள் ஏழை மக்களை தங்களது சுயநலனிற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் மக்கள் துன்பப்படுகிறார்கள். ஒருபுறம் போதிய மழை இல்லாததால் உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படுகிறது, மறுபுறம் அரசாங்கத்தினால் அதிக அளவில் வரிகள் விதிக்கப்படுகின்றன. இத்தகைய துன்பங்களை மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும்போது, அவர்கள் காலப்போக்கில் வீட்டை விட்டு வெளியேறி காட்டிற்குச் சென்றுவிடுவர்.

ஆத்ரேய ரிஷி தாஸ்: இன்றைய உலகில் அரசு பணத்தை மட்டும் வசூலிக்கின்றதே தவிர, மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொரு மனிதரும் அவரவர் திறனுக்கேற்ற வேலையைப் பெறச் செய்வது அரசின் கடமையாகும். வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கக் கூடாது, அது சமுதாயத்திற்கு மிகவும் அபாயகரமான பிரச்சனையாகும். ஆனால் அரசோ விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை நகரத்திற்கு ஈர்க்கின்றது. “அதிகமான மக்கள் நிலங்களில் பணிபுரிந்து என்ன பயன்? அதற்கு பதிலாக மிருகங்களைக் கொன்று அவற்றைச் சாப்பிடலாம்” போன்ற கருத்துக்களை இன்றைய அரசாங்க அலுவலர்கள் முன்வைக்கின்றனர். அவர்கள் கர்மா எனப்படும் பாவச் செயல்களின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதால், இது சுலபமானதாகத் தோன்றலாம்.” பசுவைச் சாப்பிட முடியும் எனும்பொழுது, ஏன் நிலத்தை உழுவதற்கு கஷ்டப்பட வேண்டும்?” என்ற மனப்பான்மை இன்று உலகெங்கிலும் நிலவுகிறது.

ஆத்ரேய ரிஷி தாஸ்: ஆம். விவசாயிகளின் பிள்ளைகள் விவசாயத்தை விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: மேலும் கீழும் (துணிகள்) ஏதும் இல்லாத அறிவுகெட்ட தன்மையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தலைவர்கள் அதனை விரும்புகின்றனர். ஓட்டல்களில் கல்லூரி மாணவிகளை தேர்ந்தெடுத்து விருந்தினர்களை மகிழ்விக்க உபயோகிக்கின்றனர்–அவர்கள் அதனை விரும்புகின்றனர். உலகெங்கிலும் வாழும் மக்கள் களங்கமடைந்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில், நல்ல அரசை மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மக்களில் சிலர்தானே அரசின் பொறுப்பை ஏற்கின்றனர், அவர்கள் மாசுபடிந்தவர்கள் ஆயிற்றே.

ஆகையால், எங்கெல்லாம் ஹரே கிருஷ்ண மையம் உள்ளதோ, அங்கெல்லாம் மக்களுக்கு பயிற்சி தர கல்லூரிகளை உடனே நிறுவ வேண்டும். முதலில் அவர்களது தங்களது இயற்கை திறமைக்கு ஏற்ப ஏதாவது ஒரு பிரிவில் (அறிவு, நிர்வாகம், விவசாயம், உடல் உழைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில்) பயிற்சியளிக்கப்பட வேண்டும். மேலும், நாம் விதிக்கக்கூடிய ஆன்மீகப் பணிகளைச் செய்து அவர்கள் ஒவ்வொருவரும் ஆன்மீக உணர்வு நிலைக்கு உயர்த்தப்படுவர்–ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரித்தல், தன்னிலை உணர்த்தும் விஞ்ஞானமான பகவத் கீதையை கேட்டறிதல், அனைத்தையும் கிருஷ்ணருக்காக அர்ப்பணித்தல் போன்ற பக்திச் செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். அப்போது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டாக மாறிவிடும்.

அதே சமயத்தில், மக்கள் வெவ்வேறு விதமான அறிவுத் திறனை பெற்றிருப்பதால், நடைமுறை விஷயங்களை நிர்வகிக்கும் பொருட்டு, பல்வேறு சமூகப் பிரிவுகளை அமைத்து அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். மிகுந்த அறிவும் புத்தியும் உடையவர்கள், பிராமணர்களாக ஆக வேண்டும்–பூஜாரிகள், ஆசிரியர்கள், மற்றும் அறிவுரையாளர்களாக ஆக வேண்டும். நிர்வாகத் திறமையும் பிறரைக் காக்கும் திறமையும் பெற்றவர்கள், சத்திரியர்களாக வேண்டும். உற்பத்தி செய்து பசுக்களைப் பாதுகாக்கும் வர்த்தகப் பிரிவினர்கள், வைசியர்களாவர். மேலும், இவர்கள் அனைவருக்கும் உதவி புரிபவர்கள், கலைஞர்கள், மற்றும் சிறு வியாபாரம் செய்பவர்கள் சூத்திரர்கள் ஆவார்கள், இவர்கள் உடல் உழைப்பைக் கொண்டு வாழ்பவர்கள்.

உங்களது உடலமைப்பில் உள்ளதுபோல சமூக அமைப்பிலும் பல்வேறு பிரிவுகள் தேவை. அனைவருமே மூளையாகவும் (அறிவாளிகளாகவும்) கைகளாகவும் (நிர்வாகத்தினராகவும்) செயல்பட விரும்பினால், வயிற்றுப் பகுதியின் (விவசாயிகளின்) பணியைச் செய்வது யார்? அல்லது கால்களின் (உழைப்பாளிகளின்) பணியைச் செய்வது யார்? அனைத்து விதமான பணிகளும் தேவைப்படுகின்றன. மூளை, கைகள், வயிறு, கால்கள் என அனைத்துமே தேவைதான். ஆகவே, சமூக அமைப்பு என்னும் உடலை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். மேன்மை பொருந்திய கடவுளின் இயற்கையான சமூக பிரிவுகளை மக்கள் உணர உதவ வேண்டும். சிலர் மூளையாகவும் சிலர் கைகளாகவும் சிலர் வயிறாகவும் சிலர் கால்களாகவும் செயல்படுவர். நமது முக்கிய குறிக்கோள் என்னவெனில், சமூக அமைப்பை குறையற்றதாக வைத்துக் கொள்வதேயாகும்.

ஒவ்வொருவரும் அவரவரது இயல்பிற்கேற்ப பணியில் ஈடுபடுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அது முக்கியம். உண்மை என்னவெனில், எல்லாவிதமான பணிகளையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் முக்கிய நோக்குடன் மக்கள் தங்களது இயற்கையான பணியில் ஈடுபட்டால் அஃது இறைவனுக்கு செய்யும் பக்தி சேவையாகிறது. உதாரணமாக, நீங்கள் நடக்கும் பொழுது உங்களது மூளையும் வேலை செய்கிறது. “அந்த வழியாகப் போ,” “இந்த வழியாகப் போ,” “கார் வருகிறது, இந்த பக்கம் வந்து விடு” என மூளை யானது கால்களுக்குச் சொல்கிறது. கால்களின் வேலையும் மூளையின் வேலையும் வித்தியாசமானதாக இருந்தாலும், சாலையை பாதுகாப்புடன் கடப்பது என்பதே அவற்றின் ஒரே குறிக்கோள் என்பதை இதிலிருந்து உணரலாம். அதே போன்று, கிருஷ்ணருக்காக பணிபுரிவதில் அனைவரும் உதவ வேண்டும் என்பதே சமூக அமைப்பின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும்.

சத்ஸ்வரூப தாஸ்: இந்த மாதிரி கல்லூரிகள் பொதுமக்களுக்காக நடத்தப்படுமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அனைவருக்காகவும்தான். பொறியியல் கல்லூரி அனைவருக்காகவும் உள்ளதே. மக்கள் இதற்கான பயிற்சியை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. உலகெங்கிலும் உள்ள மக்கள், தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதால், கிருஷ்ண உணர்வின் கல்லூரிகள் தற்போது முக்கிய தேவையாக உள்ளன. குழந்தைகள் கிருஷ்ண உணர்வின் ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்து, பின்னர் வளரும்போது கிருஷ்ண உணர்வின் கல்லூரிகளில் இணைந்து, தங்களது பணியிலும் பக்தி சேவையிலும் விருத்தியடையலாம்.

ஆத்ரேய ரிஷி தாஸ்: நாம் வியாபாரத்தையும் கற்றுத் தரலாமா?

ஸ்ரீல பிரபுபாதர்: நவீன கால வியாபாரம் வேண்டாம். அஃது அயோக்கியத்தனம். வியாபாரம் என்றால், போதிய அளவு தானியம் மற்றும் பயிறு வகைகளை உற்பத்தி செய்து, தேவையான அளவு உண்டு, அதில் மிகுந்ததை மனிதர்கள், மிருகங்கள் (குறிப்பாக பசுக்கள்) என அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாகும். அவ்வாறு வழங்குவதால் பசுக்களும் பருத்து வளமையுடன் இருக்கும், நன்றாக பால் தர முடியும், மனித சமுதாயம் நோய் நொடியின்றி வேலை செய்யவும் முடியும். நமது கிருஷ்ண உணர்வு கல்லூரிகளில், நாம் தொழிற்கூடங்களையும் தொழிற்சாலைகளையும் திறக்கப் போவதில்லை. நிச்சயமாக இல்லை.

யதுபர தாஸ்: ஸ்ரீல பிரபுபாதரே, கலை மற்றும் கைத்தொழில் புரிபவர்கள் எந்தப் பிரிவைச் சேர்வர்? நவீன சமூகத்தில் கலைஞர்களும் இசைக் கலைஞர்களும் தத்துவவாதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. கலைஞனும் பணிபுரியும் மனிதன்

தான். உங்களது தற்போதைய கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் கலை மற்றும் கைத்தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. அதனால் மொத்த மக்கள்தொகையும் பணிபுரிபவர்களாக உள்ளது. உண்மையான தத்துவவாதிகள் இங்கு இல்லை, பகுத்தறிவும் இல்லை. இதுவே பிரச்சனை. அனைவரும் அதிக சம்பளம் பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் ஈர்க்கப்படுகின்றனர். இதனால், தொழில்நுட்பம் அல்லது விஞ்ஞானக் கல்வியினை கற்றுவிட்டு, இறுதியில் தொழிற்சாலைகளில் பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். ஆயினும் பயிர்களை விளைவிக்க நிலங்களில் வேலை செய்ய மாட்டார்கள். இப்படிப்பட்ட மக்கள் தத்துவவாதிகள் அல்ல. பூரண உண்மையினை கண்டறிய முயல்பவர்தான் தத்துவவாதி எனப்படுகிறார்.

உங்களது மேற்கத்திய நாடுகளில், அயோக்கியர்கள் உடலுறவைப் பற்றி புத்தகங்கள் எழுதுகின்றனர், உடலுறவு என்பது நாய்களுக்கும் தெரிந்த ஒன்று. இத்தகைய தத்துவங்கள் அயோக்கியர்களால் வேண்டுமானால் பாராட்டப்படலாம், ஆனால் நாங்கள் அவற்றை பாராட்டுவதில்லை. எவனொருவன் பூரண உண்மையை தேடுகிறானோ, அவனே தத்துவவாதி. எவ்வாறு உடலுறவு கொள்ள வேண்டும் என்பதை விரிவாக எழுதும் ஃபிராய்டு போன்றவர்கள் தத்துவவாதிகள் அல்ல. மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் அனைவருமே தரம் தாழ்ந்துவிட்டனர், அதனால், ஃபிராய்டு அவர்களது தத்துவவாதி ஆகி விட்டார். “காட்டில் குள்ளநரி அரசனாகிவிட்டது.” அவ்வளவுதான்.

பெயரளவிலான இந்த மேற்கத்திய தத்துவத்தினால் பெறப்படும் உண்மையான அறிவு என்ன? மேற்கத்திய உலகம் முழுவதும் தொழிற்சாலைகளினால் பணம் சம்பாதிக்க அல்லல்படுகிறது. “சாப்பிடு, குடி, மங்கையுடன் இரு.” மதுவும் மங்கையுமே இவர்களின் வாழ்க்கை. இவர்கள் கீழ்த்தரத்திலும் கீழ்த்தரமானவர்கள். இவர்களை மனிதர்களாக மாற்றுவதற்கு தற்போது முதல் தடவையாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கவலைப்பட வேண்டாம். இதுவே உண்மை. அவர்கள் மிருகங்களே, இரு கால்கள் கொண்ட மிருகங்கள். நிராகரிக்கப்பட்ட மனிதர்கள். வேத நாகரிகம் அவர்களை தாழ்ந்த மக்களிலும் தாழ்ந்தவர்களாக நிராகரிக்கிறது. ஆயினும் அவர்களைத் திருத்த முடியும்.

மேற்கத்தியர்களைத் திருத்துவது சாத்தியமே. என்னுடைய சீடர்களான நீங்கள் திருந்தியுள்ளீர்களே. நீங்கள் மிகத்தாழ்ந்த நிலையிலிருந்து வந்தபோதிலும், பயிற்சியினால் பிராமணர்களைவிட மேலானவர்களாக மாறி வருகின்றீர்கள். யாருக்கும் எந்த தடையும் கிடையாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த அயோக்கியர்கள் வாய்ப்பினை ஏற்க மறுக்கின்றனர். “தகாத உடலுறவு கூடாது, மாமிசம் கூடாது” என்று சொன்னவுடன், அவர்கள் கோபமடைகிறார்கள். முட்டாள்கள், அயோக்கியர்கள். நீங்கள் நல்ல பாடத்தினை (கல்வியை) தந்தால், அவர்கள் கோபமடைகிறார்கள். பாம்பிடம் நல்ல பாலையும் வாழைப்பழத்தையும் கொடுத்தால், அஃது அதன் விஷத்தன்மையை அதிகரிக்கவே செய்கிறது.

ஆயினும், எப்படியோ கிருஷ்ணரின் கருணையால் நீங்கள் பயிற்சி பெற்று வருகிறீர்கள். நீங்கள் நன்கு பயிற்சி பெற்று, மேற்கத்திய நாகரிகத்தின் அமைப்பை, குறிப்பாக அமெரிக்காவின் அமைப்பை மாற்றி அமைக்க முயலுங்கள். பிறகு புதியதொரு அத்தியாயம் உருவாகும். இதுவே எங்களது திட்டம். ஆகவே, கிருஷ்ண உணர்வு கல்லூரிகள் நிச்சயம் தேவைப்படுகின்றன.

வியாபாரம் என்பது தானிய உற்பத்தியையும் பசு பராமரிப்பையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives