குசேலருக்கு மறைமுகமாக செல்வம் வழங்கியது ஏன்?

கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலர் தனது ஏழ்மையை போக்குவதற்காக, கிருஷ்ணர் துவாரகையிலிருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றார் என்பதையும், கிருஷ்ணரைச் சந்தித்த மகிழ்ச்சியில் எதையும் கேட்காமல் திரும்பி வந்தார் என்பதையும், கிருஷ்ணர் அவருக்கு இந்திர லோகத்து செல்வத்தைக் காட்டிலும் அதிக செல்வத்தை வழங்கினார் என்பதையும் பெரும்பாலான மக்கள் அறிவர். குசேலர் எதற்காக வந்தார் என்பதை நன்கு அறிந்திருந்த கிருஷ்ணர் தான் கொடுக்க விரும்பியதை அவர் வந்த சமயத்தில் நேரில் கொடுத்திருக்கலாமே? ஏன் முதுகிற்கு பின்னால் கொடுக்க வேண்டும்?

யார் தன்னிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல தானும் நடந்துகொள்வது கிருஷ்ணருடைய இயற்கை. (பகவத் கீதை 4.11) கிருஷ்ணருக்கு அவல் கொண்டு வந்த குசேலர் அதனை தனது சக்திக்கு மீறி எடுத்து வந்தார். அதாவது, குசேலரிடம் இருந்த வசதிகளைக் கொண்டு அவரால் கிருஷ்ணருக்கு அவல்கூட கொடுக்க முடியவில்லை, அவர் அதனை மற்றவர்களிடமிருந்து யாசித்து கிருஷ்ணருக்காக அன்புடன் எடுத்து வந்தார். “எனது நண்பன் எனக்காக தனது சக்தியை மீறி அவல் கொண்டு வந்துள்ளான். எனக்கு வழங்குவதற்கு தனது வீட்டில் ஏதுமில்லாதபோதிலும், அவன் மிகுந்த சிரமத்துடன் யாசித்து கொண்டுவந்துள்ளான். எனவே, நானும் எனது சக்தியை மீறி குசேலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்,” என்று கிருஷ்ணர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணருடைய சக்திக்கு மீறியது என்று எதுவும் கிடையாது. அனைத்திற்கும் அவரே அதிபதி என்பதால், குசேலர் செய்ததைப் போன்று வெளியிலிருந்து யாசித்து அவரால் எதையும் பெற முடியாது. எனவே, தனது இயலாமையை எண்ணி வருந்திய கிருஷ்ணர் அந்த வெட்கத்தினால், குசேலருக்கு நேரில் எதையும் வழங்காமல் மறைமுகமாக இந்திரனைக் காட்டிலும் உயர்ந்த செல்வத்தினை வழங்கினார்.

ஆதாரம்: ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் ஸ்ரீமத் பாகவத உரை. (ஸ்ரீமத் பாகவதம் 10.81.34)

பின்குறிப்பு: குசேலர் தனது சக்தியை மீறி அவல் வழங்கினார் என்பதை மறந்த முட்டாள் மக்கள் பலர், இலட்சங்களுக்கு அதிபதியாக உள்ளபோதிலும் சிறிதளவு அவலை கிருஷ்ணருக்கு வழங்குவது நியாயமா? யோசித்துப் பாருங்கள். நமது சக்தியை மீறி நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்தால் (அதாவது நம்மையே நாம் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தால்) கிருஷ்ணரும் தன்னையே நமக்கு அர்ப்பணிப்பார்.

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment