இயற்கையின் நோக்கத்தையும், அதன் சட்டங்களையும் நாம் புரிந்து கொண்டால், அமைதியும் முன்னேற்றமும் கொண்ட உலகத்தில் இயற்கையோடு இணைந்து சுலபமான முறையில் நம்மால் வாழ இயலும். ஆனால் இயற்கையின் சட்டங்களையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ளாத மூடர்களாக நாம் இருந்தால், வெறும் குழப்பங்களைத்தான் நாம் உண்டாக்குவோம். நவீன நாகரிகம் உலகம் முழுவதிலும் குழப்பங்களை உண்டாக்கியிருப்பதற்கு, இயற்கையின் சட்டங்கள் அல்லது கடவுளின் சட்டங்களைப் பற்றிய அறியாமையே காரணம். அச்சட்டங்கள் மிகவும் எளிமையானவை என்றாலும், முறையான ஆன்மீக மூலத்திடமிருந்து நியாயமான விதத்தில் விவேகத்துடன் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. கடவுள் உன்னதமானவர், நாம் அனைவரும் அவரின் தொண்டர்கள், இயற்கை வளங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை–இக்கருத்துகள் எல்லா மதப்பிரிவினராலும் ஒப்புக்கொள்ளப்படுபவை. மிகவும் எளிமையான இக்கருத்துகள் மிகவும் தெளிவானவையுமாகும்.
சாது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சொந்தக் கருத்துகளை உருவாக்குகின்றனர்: நன்றாகப் பழகுபவர், புன்சிரிப்புடன் திகழ்பவர், ஆசி வழங்குபவர், நல்லவர்களாக வாழச் சொல்பவர், தான் நல்லவனே என்று உங்களை நினைக்கச் செய்பவர்–இதுவே சாதுவின் அடையாளமாக அவர்கள் நினைக்கின்றனர். அத்தகு எண்ணத்திற்குத் தகுந்தாற்போல வாழ்ந்து, அவர்களை ஏமாற்றும் சாதுக்கள் ஏராளம். அதுதான் ஆன்மீகம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
அரசியல் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமெனில், ஓர் இடத்தில் பிறந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்த பல்வேறு நபர்கள், அந்த நகரத்தில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வசதிகளையும் பறித்துக் கொள்ள, அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வசதிகளும் குறைந்துவிட்டன என்பதே இப்பிரச்சனையின் அடிப்படைக் காரணமாகத் தோன்றுகின்றது. பல்வேறு மக்கள் இடம் பெயர்ந்ததற்கு என்ன காரணம்?