நிலையற்ற பௌதிக உலகம்

July, 2016|பகவத் கீதை|

ஜடவுலகம், இதன் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை, நிலையற்றவை என்று வேத இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன. நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார், நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு “நேற்று இருந்தவன் இன்றில்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையை மட்டுமே பெருமையாக உடையது இவ்வுலகம்." (திருக்குறள் 336) எனில், உயிர்வாழியான மனிதனுக்கு என்ன பெருமை?

திருக்குறளின் வழியாக பகவத்கீதையின் ஞானம்

June, 2016|பகவத் கீதை|

செம்மொழி இலக்கியமாகிய திருக்குறளை இயற்றிய வள்ளுவர் முழுமுதற் கடவுளையே ஆதிபகவன் என்று குறிப்பிடுகிறார். குறைந்த கண்ணோட்டமுடைய சிலர் ஆதியை நூலாசிரியரின் தாயென்றும் பகவனைத் தந்தையென்றும் கூறுவர்.

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

May, 2016|பகவத் கீதை|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும். வாழும் வழிமுறை, அறநெறி ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும்

குறளின் குரல், ஆத்ம ஞானம் – திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

April, 2016|பகவத் கீதை|

தமிழ் மொழியின் முக்கியமான நூல்களில் ஒன்று: திருக்குறள். திருக்குறளின் நோக்கம் மனிதர்களை நன்னெறியிலே செலுத்தி இறையருள் பெற வைக்க வேண்டும் என்பதே. திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தின் மூன்று குறள்களில் (1, 5, 6) இறைவனின் சிறப்பான நிலையையும் அவரை நாடும் சிறப்பையும் சொல்லி, மீதி ஏழு குறள்களிலே சரணாகதி தத்துவத்தைக் கூறுகிறார் வள்ளுவர்.

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே

July, 2015|ஞான வாள், பகவத் கீதை|

கர்ம யோகத்தை நிறைவேற்றுவதற்கு, கடமை என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுதல் அவசியம். இவ்வுலகில் பெரும்பாலான மக்கள் கடமைகுறித்து தத்தமது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, கசாப்புக் கடை வைத்திருப்பவன்கூட, மிருகங்களை வெட்டுவது தன்னுடைய கடமை என்றும் அதன் மூலமாகவே தான் முக்தியடையலாம் என்றும் ஏமாற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளான்.

தேசிய நூலாக பகவத் கீதை

January, 2015|ஞான வாள், பகவத் கீதை|

கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் நாளன்று, பகவத் கீதை பேசப்பட்டதன் 5,151வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள், பகவத் கீதையில் அனைவரின் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் உரிய பதில் உள்ளது என்றும், இதனை பிரதமர் மோடி பாரதத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பகவத் கீதை

December, 2014|பகவத் கீதை, ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

இக்கலி யுகத்தில் மக்கள் குறுகிய காலமே வாழ்கின்றனர். வாழ்நாளின் கால அளவு குறைந்து கொண்டே போகிறது. நமது பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் நூறு வருடங்கள் வாழ்ந்தனர், தந்தை எண்பது வருடங்கள் வரை வாழ்ந்திருப்பார், நாம் அதை விடக் குறுகிய வருடமே வாழ்வோம் என்பதை அனைவரும் அறிவர். இவ்வாறு காலப்போக்கில் வாழ்நாள் இருபது வருடங்களாகக் குறைந்துவிடும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன், இருபது அல்லது முப்பது வருடங்கள் வாழ்ந்தாலே மிகவும் வயோதிகனாகக் கருதப்படுவான், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

பகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா?

December, 2013|ஞான வாள், பகவத் கீதை|

வேத ஞானத்தின் சாரமான பகவத் கீதை எல்லா ஆச்சாரியர்களாலும் போற்றப்பட்டு வந்துள்ளது. நான் யார், கடவுள் யார், கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் ஏன் இந்த உலகில் துன்பப்படுகிறேன், எனது துன்பத்திற்கு நிரந்தர தீர்வு உண்டா, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது போன்றவற்றை அறிய விரும்புவோர் கீதையைப் படிக்கலாம். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் குருக்ஷேத்திர போர்க்களத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல், உலக வாழ்க்கை என்னும் நிரந்தர போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் எல்லா ஜீவன்களுக்கும் உரியதாகும். இதைப் படிப்பதால், உலக வாழ்வின் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தர விடுதலையைப் பெற முடியும்.

பகவத் கீதை வயதானவர்களுக்கா?

June, 2013|ஞான வாள்|

பகவத் கீதை என்ற பெயரைக் கேட்டதும் பெரும்பாலானோர் கூறும் பொதுவான பதில்: இதெல்லாம் எங்களுக்கு இப்போதைக்கு வேண்டாம், வயதான பிறகு பார்க்கலாம் என்பதே. ஆனால் வயதானவர்களால் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியுமா? கீதைக்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? காலந்தாழ்த்துவதால் வரும் விளைவுகள் யாவை? இவற்றை இங்கே சற்று அலசிப் பார்ப்போம்.

கீதாசாரம் போஸ்டரும் கீதாசாரமும்

January, 2013|பகவத் கீதை, பொது|

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது" என்று தொடங்கி, சுமார் ஒரு டஜன் வரிகளில் கீதாசாரம் என்ற தலைப்பில் வெளியிடப்படும் போஸ்டர் குறித்து சென்ற இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி. சென்ற இதழின் சுருக்கம் வேதங்களின் சாரம் உபநிஷத்துகள், உபநிஷத்துகளின் சாரம் பகவத் கீதை. இந்த பகவத் கீதைக்கு ஆச்சாரியர்கள் பலரும் விளக்கமளித்துள்ளனரே தவிர, சுருக்கமாக டஜன் வரியில் கவிதை [...]