எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது: இதுவா கீதாசாரம்?

December, 2012|ஞான வாள்|

உண்மையில் சொல்லப்போனால், கீதாசாரம் போன்ற சுருக்கங்களுக்கான தேவை மக்களின் சோம்பேறித்தனத்தினால் மட்டுமே எழுகின்றது. தற்போதைய உலக மக்களில் பெரும்பாலானோர் எதிலும் எப்போதும் பெரும் சோம்பேறிகளாக உள்ளனர்; சோம்பேறிகளால் எதையும் அறிந்துகொள்ள இயலாது. அவர்களுக்கு எல்லா விஷயங்களும் சுருக்கமாகவும் உடனடியாகவும் தேவைப்படுகின்றன.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

June, 2012|பகவத் கீதை, பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட மறுப்பவர்கள், குணங்களினால் வழிநடத்தப்படுவர். அர்ஜுனன் போர் புரிய வேண்டும் என்பது கிருஷ்ணரின் விருப்பம்; அதை அவன் ஏற்க மறுத்தால்கூட அவனது சத்திரிய சுபாவத்தினால் போர் செய்யும்படி தூண்டப்படுவான். இயற்கையினால் தூண்டப்பட்டு செயல்படுவதைக் காட்டிலும், கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் செயல்படுதல் சாலச் சிறந்தது அப்போது அவன் பந்தப்பட மாட்டான்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

May, 2012|பகவத் கீதை, பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

ஆத்மா தனது தூய நிலையில் ஜட இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக உள்ளான், அந்த நிலையில் அவன் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை வழிபடுகிறான். ஜட இயற்கையின் ஸத்வ குணத்தில் இருப்பவர்கள் தேவர்களையும், ரஜோ குணத்தில் இருப்பவர்கள் அசுரர்களையும், தமோ குணத்தில் இருப்பவர்கள் பேய்களையும் பூதகணங்களையும் வழிபடுகின்றனர்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

April, 2012|பகவத் கீதை, பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

காமம், கோபம், பேராசை ஆகியவை ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கதவுகள். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும் என்று கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். நரகத்தின் இந்த மூன்று கதவுகளிலிருந்து தப்பியவன் தன்னுணர்வைப் பெறுவதற்கு அனுகூலமான செயல்களைச் செய்து படிப்படியாக பரம இலக்கை அடையலாம்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

March, 2012|பகவத் கீதை, பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

கிருஷ்ணரின் உலகம் இந்த ஜடவுலகத்தைப் போன்று சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அந்த உலகம் தானாகவே பிரகாசமாக உள்ளது. இந்த ஜடவுலகில் சூரிய கிரகம் மட்டுமே சுயப் பிரகாசம் கொண்டுள்ளது. வைகுண்டம் என்று அழைக்கப்படும் அந்த ஆன்மீக உலகிலோ அனைத்து கிரகங்களும் சுயப் பிரகாசமுடையவை. அவற்றின் பிரகாசமே பிரம்மஜோதி.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

February, 2012|பகவத் கீதை, பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

இன்ப துன்பத்தை சமமாகக் கருதுதல், மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காணுதல், பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை கொள்ளுதல், திடமாக இருத்தல், புகழ்ச்சி இகழ்ச்சி மற்றும் மான அவமானத்தில் சமமாக இருத்தல், நண்பனையும் எதிரியையும் சமமாக நடத்துதல் ஆகியவை முக்குணங்களைக் கடந்தவர்களின் நடத்தையாகும்.

ரஷ்ய பகவத் கீதை வழக்கும் விளக்கமும்

February, 2012|சமுதாய பார்வை, பொது|

சமீபத்திய வருடங்களில் ரஷ்ய மக்களில் பலர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் (இஸ்கானில்) இணைந்து பக்தர்களாக மாறி வருகின்றனர். இத்தகைய மாற்றங்களுக்கு ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதை உண்மையுருவில் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனைச் சகித்துக்கொள்ள இயலாத சில அமைப்பினர், பகவத் கீதை உண்மையுருவில் புத்தகத்தினை வன்முறையைப் பரப்பும் புத்தகமாக அறிவித்து தடை செய்ய வேண்டுமென்று ரஷ்யாவின் டோம்ஸ்க் மாகாணத்தின் நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்தனர்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

January, 2012|பகவத் கீதை, பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

பரமாத்மா, எல்லா இடங்களிலும் எல்லா உயிர்வாழிகளிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. ஜட இயற்கையே எல்லாச் செயல்களையும் செய்கின்றது என்பதையும் ஆத்மா எதையும் செய்வதில்லை என்பதையும் காண்பவனே உண்மையில் காண்கிறான். நித்தியத்தின் பார்வையை உடையவர்கள், ஆத்மா தெய்வீகமானது, நித்தியமானது, குணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைக் காண முடியும்.

பகவத் கீதையும் ஜாதியும்

December, 2011|பகவத் கீதை|

ஜாதி–தமிழகத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை. ஏன் இத்தனை ஜாதிகள்? எங்கிருந்து வந்தன? என்ன பயன்?–பலரிடம் பதில் இல்லை; மக்கள் இவற்றைக் கேட்பதும் இல்லை. “என்னுடைய ஜாதியே உயர்ந்தது” என்று சிலர் நினைக்க, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஜாதிகளால்தான் வந்தன என்றும் ஜாதிகளே வேண்டாம் என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

December, 2011|பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

பக்தி யோகத்தின் விதிகளை ஒருவனால் பயிற்சி செய்ய முடியாவிடில், கிருஷ்ணருக்காக மட்டும் வேலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய நிலையில் இருப்பவன், கிருஷ்ண பக்தியின் செயல்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யலாம்; அவ்வாறு செயல்படுபவனும் படிப்படியாக பக்குவநிலையை அடைய முடியும்.