அர்ஜுனன் நிராகரித்த யோகம்

2017-02-20T12:30:39+00:00October, 2014|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

பகவத் கீதையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது! அது மட்டுமல்ல; சொந்த உறவினர்களோடு போர் புரியத் தயாராக நின்ற ஒரு போர் வீரனுக்கு, அதாவது அர்ஜுனனுக்கு அது கற்பிக்கப்பட்டது. வெறும் பாச உணர்வினால் உந்தப்பட்டு, “நான் ஏன் என் சொந்த உறவினர்களுடன் போர் புரிய வேண்டும்” என்று அர்ஜுனன் எண்ணமிட்டு நின்ற சமயம் அது.

எல்லா பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

2017-01-24T15:02:35+00:00August, 2014|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

பக்தித் தொண்டு எல்லாருக்கும் கிடைப்பதில்லை; புத்திசாலிகள் மற்றும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் மட்டுமே இதனை ஏற்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் கிருஷ்ணருக்கு சேவை செய்வதாகும். விடியற் காலையிலிருந்து இரவு நெடு நேரம் வரை அவர்கள் கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேவலயா பக்தி, அதாவது தூய்மையான பக்தி என்று அழைக்கப்படுகிறது.

கடவுளை நேருக்கு நேராக பார்த்தல்

2017-01-24T11:29:50+00:00July, 2014|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

தியானம் என்றால் இடைவிடாது நினைத்துக் கொண்டிருத்தல் என்று பொருள். பாண்டவர்கள் கிருஷ்ணரை எப்பொழுதும், உண்ணும்போதும் உறங்கும்போதும் பேசும்போதும் போரிடும்போதும் நினைத்துக் கொண்டிருந்தனர். இதுவே கிருஷ்ண உணர்வு. அர்ஜுனன் போரிட்டபோது கிருஷ்ணர் அங்கு இருந்தார், பாண்டவர்கள் துரியோதனனுடன் அரசியலில் ஈடுபட்டபோதும் கிருஷ்ணர் அங்கு இருந்தார்.

சீடப் பரம்பரையின் மூலமாக பெறப்படும் அறிவு

2017-01-23T13:15:44+00:00June, 2014|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

பகவத் கீதையில் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பல யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எனவேதான், இங்கு (4.1) யோகம் என்னும் சொல் உபயோகிக்கப்படுகிறது. ’யோகம்’ என்ற சொல்லுக்கு இணைப்பது என்று பொருள். ’யோகம்’ என்றால் நாம் நமது உணர்வை இறைவனுடன் இணைக்கின்றோம் என்று பொருள்.

யோகம்

2017-01-20T15:38:45+00:00May, 2014|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

கிருஷ்ணருக்காக உழைப்பது நம் எல்லோருடைய கடமையாகும். இதனை உண்மை என்று உணர்ந்தவர் மஹாத்மாவாகின்றார். கோடானு கோடி ஜன்மங்களுக்குப் பிறகு, இந்த உண்மையை உணரும்போது, அவன் தன்னிடம் சரணடைவதாக பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார். வாஸுதேவம் ஸர்வம் இதி. உண்மையிலேயே அறிவாளி என்பவர், வாஸுதேவரே (கிருஷ்ணர்) எல்லாம் என உணருகின்றார்.

பிறப்பு இறப்பைக் கடப்பதற்கான அறிவு

2017-01-20T12:56:28+00:00April, 2014|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

பெறுதல், அளித்தல் போன்றவற்றிற்கு மேலாக, பக்தித் தொண்டாற்றுகையில் ஒருவன் தனக்குள்ள அந்தரங்கமான பிரச்சனைகளையும் துன்பங்களையும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒப்படைக்க வேண்டும். “கிருஷ்ணரே, நான் இவ்விதமாகக் கஷ்டப்படுகின்றேன். அலைமோதும் இந்த ஜட மயக்கக் கடலில் நான் விழுந்து விட்டேன். அன்புடன் என்னைக் காப்பீராக.

இன்ப நிலைக்கான நேர்வழி

2017-01-19T15:35:01+00:00March, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

நாம் ஒவ்வொருவரும் இன்பத்தை நாடுகிறோம்; ஆனால் உண்மையான இன்பம் எப்படியிருக்கும் என்பதை யாரும் அறிவதில்லை. எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதைப் பற்றி பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மிகச் சிலரே என்பதை கண்கூடாகக் காண்கிறோம். இதற்கு காரணம், உண்மையான இன்பத்தின் அடித்தளம் தற்காலிகமான சாதனங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை ஒரு சிலரே அறிவர். அத்தகைய நிலையான இன்பத்தைதான் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விவரித்திருக்கிறார்.

உயர்ந்த உணர்வை அடைதல்

2017-01-18T13:12:42+00:00February, 2014|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

கிருஷ்ண உணர்வு என்பது பயிற்சி பெற்ற பக்தி யோகிகளின் மிகவுயர்ந்த யோக நிலையாகும். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்டதும் பதஞ்சலியால் பரிந்துரைக்கப்பட்டதுமான யோக முறை இன்றைய மக்கள் பயிலக்கூடிய ஹட யோக முறையிலிருந்து வேறுபட்டதாகும்.

கிருஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள், பசுவதையாளர்கள்

2017-01-17T13:51:26+00:00January, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

கிருஸ்துவர்கள், “நாங்கள் எல்லாவிதமான பாவச் செயல்களையும் செய்யலாம், ஆனால் இயேசு எங்களை மன்னித்து அப்பாவங்களை ஏற்றுக் கொள்வார். அவர் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார்,” என்று கூறுகின்றனர். நான் சொல்வது சரி தானே?

விடுபட்டுப்போன தொழில்நுட்பம்

2016-12-08T17:50:44+00:00December, 2013|பொது, ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

இன்றைய உலகில், நாம் தொழில்நுட்பம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றோம். ஆனால் வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை; அவற்றை பகவத் கீதை கோடிட்டுக் காட்டுகின்றது. பகவத் கீதையில் (13.9) ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷானுதர்ஷனம் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்குமே வாழ்க்கையின் உண்மையான பிரச்சனைகள் என்பதைக் காண முடியும். ஜன்ம என்றால் பிறப்பு, ம்ருத்யு என்றால் இறப்பு, ஜரா என்றால் முதுமை, வ்யாதி என்றால் நோய்.