- Advertisement -spot_img

TAG

dwaraka

கிருஷ்ணர் துவாரகைக்கு புறப்படுதல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும்...

துவாரகை

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பூமியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபோது, தன்னுடைய லீலையின் பெரும்பாலான காலத்தை துவாரகை என்ற நகரத்தில்தான் கழித்தார். 16,108 உருவங்களாக தன்னை விரிவாக்கம் செய்தது, 16,108 அரண்மனைகளை தன்னுடைய 16,108 இராணியர்களுக்காக உண்டாக் கியது போன்றவை உட்பட பல்வேறு அற்புதமான லீலைகளை அவர் நிகழ்த்தினார். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் ஓர் எளிய இடையர் குலச் சிறுவனாக வாழ்ந்தார்; ஆனால், துவாரகையில் செல்வச் செழிப்புமிக்க இளவரசராக வாழ்ந்தார். துவாரகை என்றால் “பரமனை அடைவதற்கான வாயில்,” அல்லது “வாயில்கள் நிறைந்த நகரம்” என்பது பொருள். செல்வச் செழிப்புமிக்க நகரத் திற்கு பல வாயில்கள் இருப்பது பாரம்பரிய வழக்கம், இஃது அந்நகரத்தைப் பாதுகாப்பதில் அரசருக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்துவதாகும். ஆனால் இன்றைய துவாரகையில், இஸ்கானின் பாதயாத்திரையின் நினை வாகவும் ஸ்ரீல பிரபுபாதரின் நூற்றாண்டு விழாவின் நினைவாகவும் 1988ஆம் ஆண்டு அந்நகரத்தின் முகப்பில், ஸ்ரீல பிரபுபாதர் நுழைவாயில் நிறுவப்படும் வரை, வேறு வாயில்கள் ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

Latest news

- Advertisement -spot_img