இந்த மாதம்: கிருஷ்ண லீலை
(1) குபேரனுக்கு அளவிட முடியாத செல்வத்தை அருளியவர் யார்?
(2) கிருஷ்ணர் எந்த வகை மரங்களுக்கு இடையில் உரலை இழுத்துச் சென்றார்?
(3) அன்னை யசோதை கிருஷ்ணரின் பிறந்த நாளை எவ்வாறு வீட்டில் கொண்டாடினாள்?
(4) நந்த மஹாராஜரின் மூத்த சகோதரரின் பெயர் என்ன?
(5) நீண்ட அலகுடன் கொக்கைப் போல காட்சியளித்த அசுரனின் பெயர் என்ன?
(6) கன்றின் வடிவில் வந்த அசுரன் யார்?
(7) கிருஷ்ணரும் பலராமரும் எந்த மரங்களின் பழங்களைக் கொண்டு நண்பர்களுடன் விளையாடினர்?
(8) கிருஷ்ணர் மாடு மேய்க்கும் தமது நண்பர்களை எவ்வாறு ஒன்று கூட்டினார்?
(9) அகாசுரன் எந்த வடிவில் தோன்றினான்?
(10) எந்த யோக சித்தியினால் ஒருவனால் விருப்பம்போல விரிவடைய முடியும்?

(விடைகள்)
(1) சிவபெருமான்
(2) யமள-அர்ஜுன மரம் (மருத மரம்)
(3) பசுக்களை பிராமணர்களுக்கு தானமாக வழங்கி
(4) உபநந்தர்
(5) பகாசுரன்
(6) வத்ஸாசுரன்
(7) நெல்லி, வில்வம்
(8) எருமைக் கொம்பை ஊதுவதன் மூலமாக.
(9) மலைப் பாம்பின் வடிவில்.
(10) மஹிமா சித்தி
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…