ஓட்டம், ஓட்டம், ஓட்டம்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)

ஓட்டம், ஓட்டம், ஓட்டம் என்று ஓடும் வாழ்க்கையில், சற்று நின்று யோசித்துப் பார்ப்போம். எதை நோக்கி நாம் ஓடிக் கொண்டுள்ளோம்? வாழ்வில் முன்னோக்கி ஓடுகிறோமா? இல்லை, பின்னோக்கி ஓடுகிறோமா?

நூற்றுக்கணக்கான நண்பர்கள் ஃபேஸ்புக்கில் உள்ளனர்; நிஜ வாழ்வில் டஜன் கணக்கில்கூட இல்லை. காதல், அன்பு, பாசம் முதலியவற்றைப் பற்றி நிறைய பேசுகிறோம்; நிஜ வாழ்வில் எத்தனையோ விவாகரத்துகள், எத்தனையோ பங்காளி சண்டைகள் நிகழ்கின்றன. மருத்துவத்தில் முன்னேறிவிட்டதாகக் கூறுகிறோம்; நிஜ வாழ்வில் நோயாளிகளும் மருத்துவமனைகளும்தான் பெருகியுள்ளன. பெரிய வீடுகளைக் கட்டுகிறோம்; குடும்பம்தான் சிறியதாகிக் கொண்டே போகிறது. தொலைதூர மக்களுடன் பேச அலைபேசி உள்ளது, அருகில் இருப்பவர்

களுடன் பேசவே முடியவில்லை. இன்னும் எத்தனையோ கூறலாம்!

தெளிவு யாதெனில், இந்த உலகில் இன்பமாக வாழ்வதற்கு நாம் எவ்வளவு திட்டங்களைத் தீட்டினாலும், அவை இறுதியில் பயன் தருவதில்லை. நம்முடைய இன்பத்திற்காக நாம் எத்தனையோ பொருட்களை தொடர்ந்து தயாரித்துக் கொண்டுள்ளோம், கண்டுபிடித்துக் கொண்டுள்ளோம். ஆனால் இன்பமோ எட்டாக்கனியாகவே உள்ளது. உண்மையைச் சொன்னால், ஓரடி முன்னே சென்றால், ஈரடி பின்னே செல்கிறோம்; இன்பத்திற்காக எவ்வளவு முயல்கின்றோமோ, அந்த அளவிற்கு சிக்கல்களைத்தான் அதிகமாகப் பெறுகிறோம். நாம் ஓடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம், நின்று யோசிக்க மறுக்கின்றோம்.

கலி யுகத்தில் தர்மம், தூய்மை, வாய்மை, கருணை, ஆயுள், நினைவாற்றல், பலம், ஆரோக்கியம் முதலியவை ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போகும் என்று ஸ்ரீமத் பாகவதம் (12.2.1) ஏற்கனவே கூறியுள்ளது. இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். என்ன செய்யலாம்?

முன்னேற்ற வாழ்க்கை என்ற பெயரில் நம்மை நாம் ஏமாற்றிக்கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த உலக வாழ்வின் உண்மை தன்மையை உணர வேண்டும். அப்போது கலி யுகத்தின் மோசமான நிலையிலும் நமக்குக் கிடைத்துள்ள அருமருந்தாகிய ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை அதிக நம்பிக்கையுடன் ஏற்று, வாழ்வைப் பக்குவப்படுத்த முடியும்.

கலி யுகம் என்னும் தீய யுகத்தின் மூலமாக ஒரு பக்கம் கிருஷ்ணர் துயரங்களை வழங்கியுள்ளபோதிலும், மறுபக்கம் ஹரி நாம ஸங்கீர்த்தனம் என்னும் மிகமிக எளிய வழிமுறையின் மூலமாக மிகப்பெரிய கருணையை வழங்கியுள்ளார். இதை முறையாகப் பயன்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives