படகுக்குப் பாதுகாப்பான இடம் எது?

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

ஆறு, கடல்களில் பயணிக்கும் படகு எப்போதும் அலைகளைக் கடந்து சிரமங்களைச் சமாளித்தாக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம், விழிப்புடன் இருத்தல் மிகவும் அவசியம். அப்படியெனில், படகிற்குப் பாதுகாப்பான இடம் எது?

கரையில் நங்கூரம் போட்டு நிறுத்திவிட்டால், படகு பாதுகாப்பாக இருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், படகின் பயன் அவ்வாறு நின்று கொண்டிருப்பதா? நிச்சயமாக இல்லை. கரையில் நிற்பதே படகிற்குப் பாதுகாப்பு என்றாலும், ஒருவேளை படகு கரையிலேயே நிறுத்தி வைக்கப்படுமெனில், உருவாக்கப்பட்டதன் பயனை அஃது இழந்து விடுகிறது.

அதுபோல, கிருஷ்ண பக்தர்கள் (அதிலும் குறிப்பாக, ஸ்ரீ சைதன்யரின் வழியில் ஸ்ரீல பிரபுபாதரின் சேவகர்களாக இருக்கும் இஸ்கான் பக்தர்கள்) தங்களது சொந்த பக்தி அனுஷ்டானங்களை மட்டும் பின்பற்றிக் கொண்டு, வீட்டிலேயே பாதுகாப்பாக இருத்தல் கூடாது. ஸ்ரீ சைதன்யரின் ஸங்கீர்த்தனப் படைவீரர்கள் ஒவ்வொருவரும் களத்தில் நின்று போராட வேண்டியவர்கள், ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் அல்லர்.

கிருஷ்ண பக்தியை எப்போது மற்றவர்களுக்கும் வழங்குகின்றோமோ, அப்போதுதான் நாம் நம்மை ஸ்ரீல பிரபுபாதரின் வம்சமாகக் கூறிக்கொள்ள முடியும். கவனம் அவசியம், ஆபத்துகள் உண்டு, நிச்சயமாக; ஆயினும், ஆபத்தை மட்டுமே நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்காவிடில், நாம் பிரபுபாதரின் வம்சத்தில் வந்து என்ன பயன்?

ஆற்றில் சில நேரம் வெள்ளம் கரை புரண்டு ஓடலாம். அதுபோல, சில சமயங்களில், மக்களிடையே தொற்றுநோய் பரவல் இருக்குமெனில், பக்தர்கள் கரையில் நிற்க வேண்டியது அவசியமாகிறது. ஆயினும், வெள்ளம் சற்று குறைந்தவுடன், போதிய பாதுகாப்புடன் படகோட்டி மீண்டும் தனது படகை இயக்குவதைப் போல, கிருஷ்ண பக்தர்களும் போதிய பாதுகாப்புடன் மீண்டும் தங்களது பிரச்சாரப் பணிகளைத் தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அரசியல் பிரச்சாரம் சூடுபிடிக்கிறது, சினிமா தியேட்டர்கள் நிரம்புகின்றன, விளையாட்டுப் போட்டிகள் மும்முரமாகி விட்டன—நம்மில் சிலர் இன்னும் முடங்கிக் கிடத்தல் தகுமோ?

பௌதிக வாழ்வின் துன்பங்களைப் பற்றியும், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் இயலாமையைப் பற்றியும், செல்வந்தர்களும் செல்லாக்காசாக மாற முடியும் என்பதைப் பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்து ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தற்போதைய நேரம் மிகவும் உகந்த தருணம். ஹரி நாம ஸங்கீர்த்தனம் மற்றும் பிரபுபாதரின் புத்தகங்களுடன் மீண்டும் (கவனமாக) களத்தில் இறங்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives