பகவத் தரிசனம்” என்னும் இப்பத்திரிகையின் மகிமையைச் சற்று உணர்வதற்காக, இதோ இங்கு சில தகவல்கள்: 65 ஆண்டு கால பாரம்பரியமிக்க பத்திரிகை.
1944ல் Back to Godhead என்ற பெயரில் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் தொடங்கப்பட்ட ஆங்கில பத்திரிகையைத் தழுவி தமிழில் வெளிவருகின்றது.
ஸ்ரீ ஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்களின் கட்டளையைத் தாங்கி, பிற்காலத்தில் உலக ஆச்சாரியராக விளங்கிய தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், 1944ல் தனிநபராக, தானே எழுதி, திருத்தம் செய்து, அச்சடித்து, தெருத் தெருவாகச் சென்று விநியோகமும் செய்த பெருமையைத் தாங்கிய பத்திரிகை.
சண்டையும் சச்சரவும் குழப்பமும் நிறைந்து தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் தற்கால சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளிவரும் ஆன்மீக பத்திரிகை. நான் யார்? கடவுள் யார்? கடவுளுக்கும் எனக்கும் என்ன உறவு? நான் ஏன் துன்பப்படுகிறேன்? மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? உலக அமைதிக்கான வழி என்ன? எல்லோரும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ முடியும்? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான அதிகாரப்பூர்வமான விடையை வழங்கும் பத்திரிகை. ஆன்மீக விஷயங்களை விஞ்ஞானப்பூர்வமான முறையில் வழங்கும் ஒரே பத்திரிகை.
உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான மையங்களையும் இலட்சக்கணக்கான பக்தர்களையும் கொண்ட ஹரே கிருஷ்ண (இஸ்கான்) இயக்கத்தின் பத்திரிகை.
முறையான குரு சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியர்கள் வழங்கிய தத்துவங்களை உள்ளது உள்ளபடி வழங்கும் பத்திரிகை. இப்பத்திரிகையில் வெளியிடப்படும் கருத்துக்கள் கடவுளால் வழங்கப்பட்ட பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
பர்மா, ரஷ்யன், குஜராத்தி, ஹிந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டு உலகிலேயே அதிகம் விற்பனையாகும் ஆன்மீகப் பத்திரிகை.
இப்பத்திரிகையின் மூலம் தாங்கள் பெறும் நன்மைகள்:
-
வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு
-
மகிழ்ச்சியான ஆனந்தமயமான வாழ்க்கை.
-
ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி நரகத்திற்கு கொண்டு செல்லும் போலிகளிடமிருந்து விடுதலை.
-
உலகளாவிய கிருஷ்ண பக்தர்களின் சங்கம்.
-
ஹரே கிருஷ்ண இயக்கத்தில் உலகெங்கும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்.
-
பக்தித் தொண்டை முறையாக அறிந்துகொள்ள ஓர் ஈடுஇணையற்ற வழிகாட்டுதல்.