கடவுளும்குருட்டு விஞ்ஞானிகளும்
அமெரிக்காவின்லாஸ்ஏஞ்சல்ஸ்நகரிலுள்ள வெனிஸ்கடற்கரையில்,தனது சிஷ்யர்களுடன்நிகழ்ந்த கீழ்காணும்உரையாடலில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமிபிரபுபாதர், குருடர்களாக இருந்து கொண்டு கடவுளைப்பார்க்க விரும்பும்விஞ்ஞானிகளைப்பற்றிபற்றிவிளக்குகிறார்.
சீடர் 1: தங்களது விவேகம் ‘கடவுள் இல்லை’ என்று கூறுவதாகவும், கடவுள் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமே என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: இது நம்பிக்கையைப் பற்றியது அல்ல. இஃது ஓர் உண்மை.
சீடர் 1: உண்மை என்பது புலன்களால் உணரக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அந்த விஞ்ஞானிகள் வாதிட்டால்…
ஸ்ரீல பிரபுபாதர்: உணரலாமே. கிருஷ்ண உணர்வில் நாங்கள் கடவுளை புலன்களால் உணர்கிறோம். பக்தித் தொண்டில் நாம் எந்த அளவிற்கு அதிகமாக ஈடுபடுகிறோமோ, அந்த அளவிற்கு நாம் கடவுளை அதிகமாக உணர இயலும்.
ரிஷிகேண ரிஷிகேஷ ஸேவனம் பக்திர் உச்யதே, புலன்களை புலன்களின் அதிபதியின் தொண்டில் ஈடுபடுத்தினால், அந்த உறவே பக்தி எனப்படுகிறது. உதாரணமாக, நாம் நமது கால்களை கோயிலுக்குச் செல்ல பயன்படுத்துகிறோம், நாக்கினை கடவுளைப் போற்றுவதற்கும் அவரது பிரசாதத்தை சுவைப்பதற்கும் பயன்படுத்துகிறோம்.
சீடர் 1: ஆனால் விஞ்ஞானிகள் இதனை நம்பிக்கையால் விளையும் செயல்கள் என்கிறார்கள். கடவுளுக்கு உணவு படைத்தல் என்பது கடவுள் அதனை ஏற்றுக் கொள்கிறார் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்டது என்றும், கடவுள் சாப்பிடுவதை தங்களால் காண முடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களால் காண முடியாது, ஆனால் என்னால் காண முடியும். அவர்களைப் போல் நான் முட்டாள் அல்ல. ஆன்மீகத்தில் அவர்கள் குருடர்கள். கண்புரை நோய் என்னும் அறியாமையால் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் என்னிடம் வந்தால், நான் தேவையான அறுவை சிகிச்சையைச் செய்வேன். பின்னர் அவர்களும் கடவுளைப் பார்க்கலாம்.
சீடர் 1: நல்லது. ஆனால் விஞ்ஞானிகள் கடவுளை இப்பொழுதே பார்க்க விரும்புகின்றனரே!
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் கிருஷ்ணர் இப்போது தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். ஏனெனில், அவர்கள் அயோக்கியர்கள், மிகப்பெரிய மிருகங்கள். ஸ்வ-விட்-வராஹோஷ்ட்ர கரை: ஸம்ஸ்துத: புருஷ: பஷு:, எவனொருவன் கடவுளின் பக்தன் இல்லையோ, அவன் மிருகமே. பெரியதொரு ஒட்டகம், நாய், பன்றி அவ்வளவுதான். மேலும், அப்பேர்ப்பட்டவர்களை புகழ்பவர்களும் அவ்வகையைச் சார்ந்தவர்களே.
சீடர் 1: அவர்கள் நம்மை கனவு காண்பவர்கள் என்கிறார்கள். கடவுளைப் பற்றியும் ஆன்மீக உலகைப் பற்றியும் நாம் அற்புதமாக கற்பனை செய்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு இதனைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு இல்லாததால், இதனை கற்பனை என்கிறார்கள்.
சீடர் 2: ஒரு விஷயத்தை உண்மை என்று ஏற்பதற்கு, புலன்களால் உணர்வதையே அவர்கள் ஆதாரமாகக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கடவுளை புலன்களால் உணர முடியும். அவர்கள் தங்களது புலன்களால் மணலை உணரும்போது அதனை யார் உருவாக்கியதாக நினைக்கிறார்கள்? சமுத்திரத்தை உணரும்போது அதனை யார் உருவாக்கியதாக நினைக்கிறார்கள்? அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இதனைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு ஏன் அவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்?
சீடர் 1: கடவுள் இவையனைத்தையும் படைத்தார் என்றால், சமுத்திரத்தைக் காண்பதுபோல கடவுளையும் காண வேண்டுமே?
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது: “ஆம், நீங்கள் கடவுளைப் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு அதற்குரிய பார்வை இல்லை. கண்புரை நோய் ஏற்பட்டுள்ளதுபோல் இருக்கிறீர்கள். என்னிடம் வாருங்கள், நான் அறுவை சிகிச்சை செய்கிறேன். பின்னர், நீங்கள் கடவுளைப் பார்க்கலாம்.” இதனால்தான் வேத நூல்கள், தத் விக்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத், “கடவுளைக் காண தகுதி வாய்ந்த ஆன்மீக குருவை அணுக வேண்டும்” என்கின்றன. அப்படியிருக்க, அவர்களால் தற்போதைய குருட்டுப் பார்வையுடன் கடவுளை எவ்வாறு காண முடியும்?
சீடர் 2: ஆனால் நீங்கள் சொல்லும் முறையினால் கடவுளைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு இல்லை. அவர்கள் நம்புவது கண்களால் பார்ப்பவற்றையும், தொலை நோக்கி மற்றும் நுண்நோக்கியால் பார்ப்பவற்றையும் மட்டுமே!
ஸ்ரீல பிரபுபாதர்: ஏன்? நீங்கள் இப்பொழுது வானத்தை அண்ணாந்து பார்த்தால், அதை வெற்றிடமாக நினைக்கலாம். ஆனால் அது வெற்றிடமல்ல. உங்கள் கண்கள் குறைகள் உடையவை. எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் வானத்தில் உள்ளன. ஆனால் உங்களால் பார்க்க முடியாது. பார்த்து உணர முடியாத குருடராகி விடுகிறீர்கள். நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க இயலாததால், அவை இல்லையென பொருள்படுமா?
சீடர் 1: விஞ்ஞானிகள் தங்களுக்கு சில விஷயங்கள் தெரியாது என ஒப்புக் கொண்டாலும், அவர்களது சொந்த கண்களால் காண முடியாதவை குறித்து நீங்கள் அளிக்கும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஏன் ஏற்கக் கூடாது?
சீடர் 1: ஏனெனில், நீங்கள் சொல்வது தவறாக இருக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: அஃது அவர்களது துரதிர்ஷ்டம். புலன்களைக் கொண்டு அறிய முடியாத விஷயங்களை தகுதி வாய்ந்த அங்கீகாரம் பெற்ற நபரிடமிருந்து கேட்டறிய வேண்டும். அதுவே மேன்மையான அறிவைப் பெறுவதற்கான வழிமுறை. நீங்கள் நேர்மையான நபரை அணுகாமல், ஓர் ஏமாற்றுக்காரனை அணுகினால், அஃது உங்களின் துரதிர்ஷ்டம்.
சீடர் 1: அந்த நிலையை மேற்கொள்ள குருவின் மீது நம்பிக்கை தேவைப்படுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: நம்பிக்கை அல்ல. பொது அறிவுதான் தேவை. நீங்கள் மருத்துவத்தைக் கற்க விரும்பினால், சிறந்த மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். அதை நீங்களாக கற்க முடியாது.
சீடர் 1: நம்மால் எடுத்துரைக்கப்படும் தத்துவம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே உள்ளது, ஆனால் சமூகத்தை ஆள்பவர்கள் அவர்கள்தானே! அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆதிக்கம்? (சிரிக்கின்றார்) மாயை ஓர் உதை விட்டால் போதும், இவர்களது ஆதிக்கம் அனைத்தும் ஒரே நொடியில் தீர்ந்து விடும். அவர்கள் மாயையால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், இருந்தும் தங்களை சுதந்திரமானவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள், அதுவே முட்டாள்தனம். அவர்கள் பெரியபெரிய திட்டங்களைத் தீட்டும்போதிலும், அவையனைத்தும் விரக்தியில் முடிகின்றன; இருந்தும் அவர்களால் இதனை உணர முடிவதில்லை.
சீடர் 2: அவர்கள் சுய உணர்விற்கு வர விரும்புவதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆகையால், அவர்கள் அயோக்கியர்கள். வாழ்வில் எவ்வளவுதான் உதை வாங்கினாலும், தன்னுடைய எண்ணங்கள் சரியே என்று வாதம் செய்பவர்கள் அயோக்கியர்கள் எனப்படுகின்றனர். அவர்கள் நல்ல பாடத்தை என்றும் ஏற்க மாட்டார்கள். ஏன் அவர்கள் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்? ஏனெனில், அவர்கள் துஷ்க்ருதினர்கள், மிகப்பெரிய பாவிகளாக உள்ளனர். அவர்கள் கசாப்புக் கூடங்களை உருவாக்குகிறார்கள், விபச்சார விடுதிகளை உருவாக்குகிறார்கள்—புலனின்பங்களைக் கொண்டு மக்களின் வாழ்வை இவர்கள் சீரழிக்கின்றனர். இதனை நீங்கள் பார்க்கவில்லையா. இவையனைத்தும் பாவச் செயல்களே. மேலும், இந்த விஞ்ஞானிகள் பாவம் மிகுந்தவர்களாக இருப்பதால், நரகத்தின் இருண்ட பகுதிகளில் துன்பப்பட வேண்டிவரும். அடுத்த பிறவியில் இவர்கள் மலத்திலுள்ள சாதாரண புழுவாகப் பிறப்பார்கள். ஆயினும், அறியாமையின் காரணமாக தாங்கள் நலமுடன் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இதுவே அவர்களின் முட்டாள்தனம், அயோக்கியத்தனம்.