ஹரே கிருஷ்ண இயக்கம் என்ற பெயரில் உலகெங்கிலும் பிரபலமாக விளங்கும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (The International Society for Krishna Consciousness, ISKCON), 1966ஆம் ஆண்டில் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் தொடங்கப்பட்டது. முறையான குரு சீடப் பரம்பரையில் வந்த ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் கிருஷ்ண பக்தியினை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
அவரது தெளிவான கருத்துகள் அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் இதயத்தில் உட்புகுந்து பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தின. அதனைத் தொடர்ந்து, இவ்வியக்கம் மிகவும் குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சி பெற்று உலகின் ஆறு கண்டங்களுக்கும் பரவியது. ஜாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து, கல்வியறிவு போன்ற எந்த பேதங்களும் இன்றி மனித குலத்தின் மேன்மைக்காக ஆன்மீக ஞானத்தைப் பரப்பி வரும் இவ்வியக்கம், தற்போது நூற்றுக்கணக்கான நாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றது.
இயக்கத்தின் செயல்பாடுகள்
-
ஹரி நாம ஸங்கீர்த்தனம்
-
பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களை விநியோகிப்பதன் மூலம் மக்களுக்கு ஆன்மீக அறிவினைப் புகட்டுதல்
-
நவீன காலத்திற்கு உகந்த யோகப் பயிற்சியைக் கற்றுத் தருதல்
-
அனைத்து மக்களுக்கும் பிரசாத விநியோகம்
-
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்மீகப் பயிற்சி
-
அற்புதமான கோவில்களும் விக்ரஹ வழிபாடும்
-
பண்ணை நிலங்கள், பசு பராமரிப்பு
-
இல்லங்களில் ஆன்மீக நிகழ்ச்சிகள்