உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று கண்ணணின் கழலினையே நன்னும் மனமுடையவளின் தெய்வீகத்தையும், அவள் அருளிய பகவத் விஷய ஞானத்தையும், அவளின் பக்தியையும் தூக்கியெறிந்து விட்டு, அதிலுள்ள தமிழின் ஆட்சிமையையும் கவிதை நயத்தையும் மட்டும் பிரித்தெடுத்து கொண்டாட நினைக்கும் மக்களின் அணுகுமுறை உயிரைக் கொன்று விட்டு வெறும் எலும்புக்கூட்டைக் கொண்டாடுவதைப் போன்றதாகும். ஆண்டாளை பக்தியுடன் அணுகும் விதத்தை இக்கட்டுரையில் அறிய முயல்வோம்.
பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட, வைகுண்ட நாதருக்கு பிரியமான தூய பக்தர்களின் சகவாசத்தை அரிதாகவே பெறுகின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.2.29)
பற்பல பிறவிகளைக் கடந்தபின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத்கீதை 7.19)
உண்மையான பொதுநலத் தொண்டு என்பது தற்காலிகமான விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாகும், அது மனிதனை அடுத்த பிறவிக்கு தயார் செய்வதாகும், மேலும், அவனுக்கும் கிருஷ்ணருக்குமான ஆதியந்தமற்ற உறவைப் பற்றி நினைவுபடுத்துவதாகும். அந்த பொதுநலத் தொண்டில் கிருஷ்ண பக்தியைப் பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் முதலிடம் வகிக்கின்றன.
ஒருமுறை ஓர் இந்து அமைப்பின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது, அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இந்து மதத்தில் அனைத்து விஷயங்களும் விஞ்ஞானபூர்வமானவை, ஆனாலும் ஒரு விஷயத்தால் அதன் புகழ் மங்கி வருகிறது, அது வர்ணாஷ்ரம தர்மம், அதை மட்டும் தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என கூறினார்.
ஆம். உண்மையே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய நாமத்தை உச்சரித்ததாலும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்டதாலும் இலட்சக்கணக்கான பேர் எந்தவொரு சிரமமும் இன்றி அசைவத்தை வென்றுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்திலும் பிரசாதத்திலும் எண்ணற்ற சக்திகள் அடங்கியிருக்கின்றன. எனவேதான், கருட புராணம், "சிங்கம் கர்ஜிக்கும்போது சிறு விலங்குகள் பயந்து ஒடுவதுபோல், பாவங்கள் அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கும்போது நம்மை விட்டு விரைவில் நீங்குகின்றன" என்று குறிப்பிடுகிறது. கிருஷ்ண பக்தி, கிருஷ்ண பிரசாதம் என்னும் உயர்ந்த சுவையை அனுபவிப்பதால், தாழ்ந்த சுவைகள் தானாக விலகிவிடும் என்று பகவத் கீதையும் (2.59) குறிப்பிடுகிறது.