AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில்...

கிருஷ்ணரை அடைய பக்தியே வழி

இப்போது நாம் அந்த முழுமுதற் கடவுளின் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், எவ்வாறு அங்கு செல்வது, எவ்வாறு வீடுபேறு அடைவது என்பதை அறிய வேண்டும். அதுவே மனித வாழ்வின் குறிக்கோள். நாம் ஏன் இந்த பௌதிக உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதை ஆராய வேண்டியதில்லை. வேத இலக்கியங்களின் வழிகாட்டுதல்கள் ஜோதிடரின் அறிவுரையைப் போன்றவை, அவற்றைக் கொண்டு வீடுபேறு அடைவதற்கான வழியைத் தேட வேண்டும். ஜோதிடர் எவ்வாறு ஏழைக்கு குறிப்புகளைத் தருகிறாரோ, அவ்வாறே வேத நூல்கள் நமக்கு குறிப்புகளைத் தருகின்றன. அதன் மூலமாக நமது தந்தையுடனான இழந்த உறவைப் புதுப்பித்து நாம் பெரும் செல்வந்தர்களாக முடியும்.

உங்களைவிட அதிகமாக இயேசுவை மதிக்கிறேன்

இயேசு மரணத்திற்கு உட்பட்டார் என்று நினைத்தல் அவரை அவமதிப்பதைப் போன்றது என்பதை தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், கிறிஸ்துவ மத குருமார்களிடம் விளக்குகிறார். மேடம் சியாட்: இயேசு கிறிஸ்து கடவுளின் மைந்தன் என்றால்,...

ஆன்மீக கலாச்சாரத்தை மறவாதீர்

இன்று பண்பாட்டையும் வணிகத்தையும் பற்றிப் பேச இருக்கிறேன். வணிகம் என்பது ஒரு தொழிற்கடமை. நமது வேதப் பண்பாட்டில் பலவிதமான தொழிற்கடமைகள் உள்ளன. பகவத் கீதை (4.13) கூறுகிறது, சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண–கர்ம–விபாகஷ:, மக்களின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப சமுதாயத்தில் நால்வகைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன—பிராமணர் (புத்திசாலிகள் மற்றும் ஆசிரியர்கள்), சத்திரியர் (இராணுவ வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள்), வைசியர் (விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்), மற்றும் சூத்திரர் (தொழிலாளிகள்). இவ்வாறாக, பல்வேறு திறமைகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்கள் உள்ளன.

ஆணாதிக்கத்திற்கு அப்பால்

“பெண் விடுதலை” என்பது ஆண்களின் ஒரு தந்திரமே. இதன் மூலம் ஆண்களால் பெண்களை இலவசமாகப் பெற முடிகிறது. அவன் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, பிரிந்து செல்கிறான். அவளோ அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கிறாள் அல்லது கருவை கலைத்து விடுகிறாள். இது கேட்பதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், பெண் விடுதலை என்றால், ஆண்கள் பெண்களைத் தந்திரமாக ஏமாற்றி விட்டனர் என்பதே பொருள். எனவே, ஆன்மீக உணர்வை அடைவதற்கான பாதையில் முன்னேற வேண்டுமெனில், நாம் சில பெளதிக வேறுபாடுகளைப் பின்பற்றுதல் அவசியம். அதன்படி, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

Latest