AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

227 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

மனிதன் மனிதனாக வாழ

ஜடவுலகிலுள்ள அனைவரும் அறியாமை என்னும் இருளில் பிறக்கின்றனர். இருள் சூழ்ந்த இந்த ஜடவுலகானது சில நேரங்களில் சூரியன், நிலா, நெருப்பு அல்லது மின்சாரத்தால் ஒளியூட்டப்படுகிறது. ஆனால், அதன் இயற்கை தன்மை இருளே. மிகவுயர்ந்த நபரான பிரம்மாவிலிருந்து கடைநிலையிலுள்ள எறும்பு வரை ஜடவுலகிலுள்ள அனைவரும் அறியாமை என்னும் இருளில்தான் பிறக்கின்றனர்.

மேலை நாட்டின் துச்சமான இன்பம்

ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவர்களது சீடர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நிகழ்ந்த உரையாடல். சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, “வேத பண்பாடு இந்தியாவில் மிகவும் வலுவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியா மேற்கத்திய நாடுகளைவிட ஏழ்மையானதாகவும் அதிர்ஷ்டமற்றதாகவும் கருதப்படுகிறது. எனவே, வேத...

ஆத்மா ஏன் வீழ்ச்சியடைந்தான்?

கிருஷ்ணருடன் இருந்த ஜீவன், இந்த பெளதிக உலகில் எவ்வாறு வீழ்ச்சியடைந்தான் என்னும் வினாவினை பலரும் வினவுகின்றனர். அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஜீவனின் நிலையானது ஜட சக்தியில் அவன் மயக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது; உண்மையில், அவன் வீழ்ச்சியடையவில்லை. மேகக் கூட்டம் நகரும்போது அதற்குப் பின்னால் உள்ள நிலாவும் சேர்ந்து நகருவதைப் போன்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நிலா நகருவதே இல்லை. அதுபோலவே, பரமனின் ஆன்மீகப் பொறியாகிய ஜீவன் வீழ்ச்சியடைவதே இல்லை. ஆயினும், “நான் வீழ்ச்சியடைந்துள்ளேன், நான் பெளதிகமானவன், நான் இந்த உடல்,” என்று அவன் நினைத்துக் கொண்டுள்ளான்.

நீங்கள் உடலுக்கு அப்பாற்பட்டவர்

சீடர்: பகவத் கீதை 15.7இல் கிருஷ்ணர் கூறுகிறார், “இந்தக் கட்டுண்ட உலகிலுள்ள அனைத்து ஜீவன்களும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தினால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடுமையாக சிரமப்படுகின்றனர்.”

திருநாமத்தை ஏற்போம்!

பெரியோர்களே, தாய்மார்களே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கு பெற வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கும் பரம புருஷ பகவானுக்கும் நித்தியமான உறவு உள்ளது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் போன்றது. இந்த உறவை எந்நிலையிலும் முறிக்க இயலாது. எனினும், மகன் சில சமயங்களில் தனது பாசமிகு தந்தையைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதுபோலவே பகவானுடைய அம்சங்களாகிய நாமும் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பகவானை விட்டு பிரிந்துள்ளோம்.

Latest