குறைபாடுகளுடைய புலன்களால் குறைபாடுடைய அறிவையே தர முடியும். விஞ்ஞான அறிவு என்று நீங்கள் கூறுவது போலியாகும். ஏனெனில், அந்த அறிவினை உண்டாக்கிய மனிதர்கள் குறையுடையவர்கள். குறையுள்ள மனிதர்களிடமிருந்து குறையற்ற அறிவை எவ்வாறு பெற முடியும்?
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஒரே வழி. மற்றவர்களிடம் அன்பு செலுத்த முயற்சித்தால், இறுதியில் நீங்கள் விரக்தியை அடைவீர். ஏனெனில், நமது அன்பிற்குரியவர் கடவுள் ஒருவரே. அவரை நாம் நேசிக்கும்போது, இயற்கையாகவே நம்மால் அனைவரையும் நேசிக்க இயலும். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றினால் அது கிளைகள், இலைகள், பூக்கள் என அனைத்திற்கும் செல்கிறது.
வேதம் தொடங்கிய காலத்தை அறிய முயற்சித்தல்
இந்த உரையாடல் ஸ்ரீல பிரபுபாதருக்கும் பிரிட்டிஷ் மாணவனுக்கும் இடையே காலை நடைப் பயிற்சியின்போது நிகழ்ந்ததாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண பக்தியின் செய்தி...
உலகின் தோற்றம்குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் இதற்கான ஆதிமூலத்தை ஆராயாமல் காலத்தைக் கழிக்கின்றனர் என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். கௌதம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.