- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்   பிரபுபாதர்: சமுதாயத்தைத் தலைமை தாங்கிச் செல்லும் தலைவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளைப் புரிந்து கொண்டு, அவற்றை மனித சமுதாயத்தின் நன்மைக்காக...

அமைதிக்கான உண்மையான வழி

ஒவ்வோர் உயிரினமும் அமைதியை நாடுகிறது. எறும்பு முதல் பிரபஞ்சத்தில் முதன்முதலில் படைக்கப்பட்ட பிரம்மா வரை அனைவரும் அமைதியைத் தேடுகிறார்கள். அதுவே முக்கியமான நோக்கம். பூரண கிருஷ்ண உணர்வில் இருப்பவன் மட்டுமே அமைதியானவனாக இருக்க முடியும் என்று சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார்; ஏனெனில், அவனுக்கென்று எந்த தேவைகளும் இல்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் இருப்பவனின் விசேஷ தகுதியாகும். அவன் அகாம எனப்படுகிறான். அகாம என்னும் வார்த்தை தன்னில் திருப்தியடைந்த, ஆசைகள் அற்ற, முழு அமைதி பெற்ற ஒருவனைக் குறிப்பதாகும். யார் அப்படி இருக்கிறார்கள்? கிருஷ்ண உணர்வில் நிலைபெற்ற பக்தர்களே அவர்கள் ஆவார்கள்.

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி? குற்றங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் உலகில் பெருமளவிலான பணம் செலவு செய்யப்படுகிறது. எனினும், இம்முயற்சிகளையும் மீறி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....

கிருஷ்ணரின் மூலமாக அறிவைப் பெறுவோம்

அநேக பல்கலைக் கழகங்களும் கல்வி நிலையங்களும் உள்ளன. ஆனால் அங்கே இத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்படுவதில்லை. பகவத் கீதையில் கிருஷ்ணர் கொடுக்கும் அறிவு, வேறு எங்கேனும் உள்ளதா? ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் நான் உரையாற்றியபோது, சில அறிவுள்ள மாணவர்கள், “இறந்த மனிதனுக்கும் உயிருள்ள மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை ஆராய்கின்ற தொழில்நுட்பம் எங்கே?” என்று கேட்டார்கள். ஒரு மனிதன் இறக்கும்போது ஏதோ ஒன்று இழக்கப்படுகிறது. அதனை மறுபடியும் பழைய இடத்திலேயே வைக்கும் தொழில் நுட்பம் எங்கே? விஞ்ஞானிகள் ஏன் இந்த பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்யக் கூடாது? ஏனெனில், இது அவர்களுக்கு மாபெரும் தலை வலியைத் தருகின்ற விஷயம். ஆகையால், அவர்கள் இதை விட்டுவிட்டு, சாப்பிடுவது, தூங்குவது, பாதுகாப்பது, உடலுறவு போன்ற தொழில்நுட்பத்தில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?

மோஸீ: இந்தியாவோடு ஒப்பிடும்போது இங்கு குற்ற நிலை எப்படியுள்ளது, உங்கள் கருத்தென்ன? ஸ்ரீல பிரபுபாதர்: குற்றம் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? மோஸீ: ஒருவர் உரிமையை மற்றவர் பறிக்கும்போது அது குற்றமாகிறது. ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். எங்கள் விளக்கமும் அதுவே. உபநிஷத்தில் ........

Latest

- Advertisement -spot_img