கிருஸ்துவர்கள், “நாங்கள் எல்லாவிதமான பாவச் செயல்களையும் செய்யலாம், ஆனால் இயேசு எங்களை மன்னித்து அப்பாவங்களை ஏற்றுக் கொள்வார். அவர் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார்,” என்று கூறுகின்றனர். நான் சொல்வது சரி தானே?
இன்றைய உலகில், நாம் தொழில்நுட்பம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றோம். ஆனால் வாழ்வின் உண்மையான பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை; அவற்றை பகவத் கீதை கோடிட்டுக் காட்டுகின்றது. பகவத் கீதையில் (13.9) ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷானுதர்ஷனம் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய நான்குமே வாழ்க்கையின் உண்மையான பிரச்சனைகள் என்பதைக் காண முடியும். ஜன்ம என்றால் பிறப்பு, ம்ருத்யு என்றால் இறப்பு, ஜரா என்றால் முதுமை, வ்யாதி என்றால் நோய்.
https://tamilbtg.com/wp-content/uploads/2016/11/1-11.jpg
சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள்
பின்வரும் உரையாடலில், நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு இயற்கையைச் சார்ந்த சமுதாயத்தை அமைப்பதே தீர்வு என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களிடையே விளக்குகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: இக்காலத்திலுள்ள...
பகல் கனவு, இரவு கனவு
பின்வரும் உரையாடலில், கிருஷ்ண பக்தியில் ஈடுபடாவிடில் நமது செயல்கள் அனைத்தும் பகல் நேரத்தில் காணப்படும் கனவே என்பதை ஸ்ரீல பிரபுபாதர் ஒரு...
ஒருவர் கிருஷ்ணரை எந்த விதத்திலும் நினைவுக் கூறலாம். கோபியர்கள் கிருஷ்ணரின் மீதான காதலின் காரணத்தால் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தனர்; சிசுபாலன் கோபத்தின் காரணத்தால் கிருஷ்ணரையே எண்ணிக் கொண்டிருந்தான்; கம்சன் பயத்தின் காரணத்தால் கிருஷ்ணரை இடைவிடாது எண்ணிக் கொண்டிருந்தான். கம்சனும் சிசுபாலனும் அரக்கர்களாக இருந்தனர்; ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரம புருஷ பகவானை நினைத்திருந்ததோடு அல்லாமல், இறக்கும் தருவாயிலும் பகவானை நினைவு கூர்ந்தபடியால் கிருஷ்ணராலேயே அவர்களுக்கு முக்தி வழங்கப்பட்டது.