- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீமத் பாகவதம்

துருவ மன்னரின் சந்ததியினர்

மைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர் உன்மத்தனாகவே அமைச்சர்கள் எண்ணினர். அதனால், அவரது இளைய சகோதரனான வத்ஸரனை மன்னராக முடிசூட்டினர். வத்ஸரனின் ஆறு மகன்களில் மூத்தவரான புஷ்பாரனனுக்கு ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான வியுஷ்டனுக்கு ஸர்வதேஜன் என்ற மகன் பிறந்தான். ஸர்வதேஜனின் மகனான சாக்ஷுஷன் ஆறாவது மனுவாவார்.

துருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்

யுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.

துருவனின் சரிதம்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின்...

சிவபெருமான் சாந்தமடைதல்

ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள். இருப்பினும், அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால், அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள். தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார். ஆகவே, அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம். உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில், அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள்.” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார்.

சதி தன் உடலைக் கைவிடுதல்

மாமனாருக்கும் (தக்ஷனுக்கும்) மருமகனுக்கும் (சிவபெருமானுக்கும்) இடையிலான பகைமை தொடர்ந்தது. பிரம்மதேவரால் பிரஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம் மேலும் தலைக்கேறியது. இதனால், வாஜபேய யாகத்தை நடத்திய தக்ஷன் அதில் கலந்துகொள்ள சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும், பிரகஸ்பதி ஸவம் எனும் சிறந்த யாகத்தையும் துவங்கினான். அந்த யாகத்திற்கு பிரம்ம ரிஷிகள், தேவ ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள் முதலியோர் தத்தமது மனைவியருடன் புஷ்பக விமானங்களில் சென்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட தக்ஷனின் மகளான சதி தனது கணவர் சிவபெருமானிடம் கூறலானாள்.

Latest

- Advertisement -spot_img