முன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். பிரஜாபதிகளின் தலைவரான தக்ஷன் வேள்விச் சாலைக்குள் பிரவேசித்தபோது, அவரது தேஜஸினால் அவையே பிரகாசமானது. அச்சமயம் சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவையில் உள்ளவர்களது மரியாதையை ஏற்று, தனது தந்தையாகிய பிரம்மதேவரை பணிந்து வணங்கி அவரின் அனுமதி பெற்று இருக்கையில் அமர்ந்தார் தக்ஷன். அச்சமயம் தனக்கு எவ்வித மரியாதையும் செலுத்தாது அமைதியாக அமர்ந்திருந்த சிவபெருமானைக் கண்டு தக்ஷனுக்கு கோபம் அதிகரிக்க, அவர் சிவனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைக் கூறலானார்.
எம்பெருமானே, இழிந்த குலத்தில் பிறந்தவன், உமது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பதால் வேள்விகளை இயற்றும் தகுதியுடையவனாகிறான் எனும்போது தங்களை தரிசித்தவரின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? நாயை உண்ணும் இழிகுலத்தில் பிறந்தவனாயினும் தங்களது திருநாமத்தை உச்சரிப்பவன் வழிபாட்டிற்குரிய வனாவான். அவன் புனித யாகங்கள், தவங்கள், தீர்த்த யாத்திரை, வேதங்கள் பயிலுதல் ஆகியவற்றை ஏற்கனவே நிறைவேற்றியிருக்க வேண்டும்.
தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விரும்பி பலன்நோக்கு கர்மங்களில் ஈடுபடும் குடும்பஸ்தன் அவற்றை அடைவதற்காக மீண்டும்மீண்டும் அத்தகைய பலன்நோக்கு கர்மங்களைச் செய்கிறான். அதற்கான ஆசைகளால் மயக்கமுற்று முன்னோர்களையும் தேவர்களையும் மிகுந்த சிரத்தையுடன் வழிபடுகிறான், அவன் கிருஷ்ண உணர்விலோ பக்தித் தொண்டிலோ ஆர்வம்கொள்வதில்லை.
முதல் மாதத்தில் தலையும், இரு மாதங்களின் முடிவில் கை, கால் மற்றும் பிற உறுப்புகளும் வடிவம் பெறுகின்றன. மூன்று மாதங்களில் நகங்கள், எலும்பு, தோல், உரோமம், பிறப்புறுப்பு, கண்கள், காதுகள், மூக்குத் துவாரம், வாய், மலவாய் ஆகியவை தோன்றுகின்றன. கருவுற்ற நான்கு மாதங்களில் ஏழு தாதுக்களும் (வெள்ளை நிணநீர், குருதி, சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் அல்லது சோணிதம்), ஐந்தாம் மாதத்தில் பசி-தாகம் முதலியவையும் தோன்றுகின்றன. ஆறு மாதங்களில் கருவானது அதைச் சுற்றியுள்ள சவ்வினால் மூடப்படுகிறது. ஆணாக இருந்தால் வலப்பக்கமாகவும், பெண்ணாக இருந்தால் இடப்பக்கமாகவும் அசையத் தொடங்குகிறது.
உடல், வீடு, நிலம், செல்வம் ஆகிய நிலையற்ற பொருட்களை நிலையானவை என எண்ணி மக்கள் அறியாமையில் உள்ளனர். எந்த உயிரினத்தில் பிறந்தாலும் அந்த உயிரினத்தில் அதற்கென்று நியமிக்கப்பட்ட இன்பத்தை ஒருவர் அடைகிறார். அவர் அந்நிலை அடைந்ததற்காக ஒருபோதும் வருந்துவதில்லை. உதாரணமாக, பன்றி மலத்தை உண்டு அருவருக்கத்தக்க இடங்களில் வாழ்ந்தாலும், அந்த உயிரினத்திற்கான மகிழ்ச்சியில் அது திருப்தியடைகிறது.