நல்லுணர்வுடன் அயராது உழைத்து இச்சை, கர்வம், பொறாமை, பேராசை, பாவச் செயல்கள், வீண் தற்பெருமை போன்றவற்றை விடுத்து, ஆற்றல்மிக்க தன் கணவரை அவள் மகிழ்வித்தாள். அவரை பகவானைவிடவும் சிறந்தவராகப் பார்த்த தேவஹூதி அவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள். நீண்ட காலமாக மதச் சடங்குகளைக் கடைப்பிடித்துப் பணிவிடை செய்ததால் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவளைப் பார்த்த கர்தமர் அன்பு மேலிட தடுமாறும் குரலில் பேசலானார்.
கர்தம முனிவரிடம் மனு பின்வருமாறு பேசலானார், "வேதத்தின் உருவமாகிய பிரம்மதேவர் வேத அறிவை பரப்புவதற்காக தம் முகத்திலிருந்து பிராமணர்களாகிய தங்களைப் படைத்தார், பொதுவாக பிராமணர்கள் தவம், புத்திசாலித்தனம், புலனின்பத்தில் பற்றின்மை, மற்றும் யோக சித்திகள் நிறைந்தவர்கள். பிராமணர்களின் பாதுகாப்பிற்காக, தம் கரங்களிலிருந்து சத்திரியர்களான எங்களைப் படைத்தார். இப்பொழுது உங்களைச் சந்தித்தால் எனது கடமைகளைப் பற்றி சந்தேகமின்றி தெளிவாக நான் புரிந்து கொண்டேன். உங்களைக் காண முடிந்தது எனது நல்லதிர்ஷ்டம். உங்களின் பாததூளி என் தலையில் படுவது என் பெரும்பாக்கியமாகும். உங்களின் நேரடி அறிவுரையை பெறமுடிந்தமைக்காக பகவானுக்கு நன்றி செலுத்துகிறேன்."
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்."வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்"...
வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும்...