வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும்...
பகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் விதுரர் கூப்பிய கரங்களுடன் பகவானின் உன்னத செயல்களை மேலும் கூறியருளும்படி வேண்டினார். குறிப்பாக, பூமியைக் கடலிலிருந்து தூக்கி வந்து அற்புத திருவிளையாடல் புரிந்த பகவான் வராஹருக்கும் அசுர மன்னனான ஹிரண்யாக்ஷனுக்கும் நடந்த போருக்கான காரணத்தை விளக்கும்படி வேண்டினார்.
ஜீவன்கள், தங்களது உண்மையான அடையாளத்தை மறந்தாலொழிய அவர்களால் இந்த ஜடவுலகில் வாழ முடியாது. ஆகவே, பிரம்மா முதலில் ஒருவரது உண்மை அடையாளத்தைப் பற்றிய மறதி அல்லது தேக அபிமானம், மரண உணர்ச்சி, சுய வஞ்சனை, விரக்தி, பொய்யான உரிமை உணர்வு ஆகியவற்றை படைத்ததன் மூலமாக, உயிர்கள் இந்த பௌதிக உலகில் வாழ்வதற்குத் தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கினார்.இவை போன்ற ஐவகை அஞ்ஞானங்களைப் படைத்ததால் பிரம்மா மகிழ்ச்சியடையவில்லை.