வழங்கியர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். "வேத இலக்கியம் எனும்...
பரம புருஷ பகவான் முக்குணங்களைப் படைக்கிறார், ஆனால் அவற்றால் அவர் பாதிக்கப்படுவதில்லை. இம்மூன்று குணங்களிலிருந்து பொருள், அறிவு, செயல் ஆகியவை உருவாகின்றன. இக்குணங்களின் காரணத்தால், ஜீவராசிகள் தங்களின் நித்திய தன்மையை மறக்கின்றனர்.
பகவானின் திவ்ய லீலைகளும் அவருடைய அருட் பார்வையும் அவரது அணுகிரகத்தின் அறிகுறிகளாகும். எனவே, அத்தகைய உன்னத திருவுருவத்தின் மீது மனதை முடிந்தவரை நிலைநிறுத்த வேண்டும்.
மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு வயதே நிரம்பியவராக இருந்தார். அவரது பாதங்கள், கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி, மற்றும் உடலின் எல்லா பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும், மூக்கு எடுப்பாகவும், கழுத்து சங்கு போலவும், முகம் மிகவும் கவர்ச்சியாகவும் விளங்கியது.