நாம் மிருகம் போல் வாழக் கூடாது

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

நாம் மிருகம் போல் வாழக் கூடாது

மனிதப் பிறவி என்னும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள் மாமிச உணவுகளை உண்டு மிருகங்களைப் போல வாழக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.

விருந்தினர்: மிருகங்களை மனிதர்கள் உண்ணவில்லை எனில், அவை பசியாலோ வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ வாடி இறக்கக் கூடும்.

ஸ்ரீல பிரபுபாதர்: மிருகங்கள் வாடி இறப்பது குறித்து நீங்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற பித்தலாட்டக்காரராக இருக்காதீர்கள். “அவை பசியால் வாடும். ஆகவே நாம் அவற்றை உண்போம்” என்கிறீர்களே. இது என்ன பித்தலாட்டம்? கிருஷ்ணர் உணவைத் தருகிறார். ஆகவே ஒரு மிருகம் பசியால் வாடினால், அது கிருஷ்ணரின் பொறுப்பாகும். யாருமே பசியால் இறப்பதில்லை. அது பொய்யான தத்துவம். எந்த மிருகமாவது பசியால் வாடி இறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கடவுளின் அரசாட்சியில் ‘பசி’ என்ற கேள்வியே இல்லை. நமது புலன்களின் திருப்திக்காக இந்த பொய்த் தத்துவங்களை தயாரிக்கிறோம். ஆப்பிரிக்க மற்றும் இந்திய காடுகளில் லட்சக்கணக்கான யானைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும், ஒரு வேளைக்கு 100 பவுண்டு உணவு தேவை. அவற்றிற்கு உணவு யார் தருகிறார்கள்? எனவே கடவுளின் சாம்ராஜ்யத்தில் ‘பசி என்ற கேள்விக்கு இடமே இல்லை. ‘பசி என்பது நாகரிகம் அடைந்துவிட்டதாக பெயரளவில் கருதும் மனிதர்களுக்கே சொந்தமானதாகும்.

விருந்தினர்: மனிதன் மாமிசத்தை உண்ணக் கூடாது என்கிறீர்கள்; அப்படியெனில் இயற்கையின் படைப்பில் பல்வேறு மிருகங்கள் மற்ற மிருகங்களை கொன்று உண்பது ஏன்?

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மற்றொரு வகை மிருகமா?

விருந்தினர்: ஆம். நாம் அனைவரும் மிருகங்கள் தான்.

ஸ்ரீல பிரபுபாதர்: மிருகங்களில் ஒன்றாக உங்களைக் கருதிக் கொள்கிறீர்களா? நீங்கள் உங்களை மிருகமாக வகைப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா?

விருந்தினர்: நல்லது. நாம் மிருகங்கள்தான்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இல்லை. உங்களை மிருகமாக வகைப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா?

விருந்தினர்: நான் என்னை மிருகங்களை விட உயர்ந்த வனாகக் கருதவில்லை. கடவுளின் எல்லா படைப்புகளிடத்தும் எனக்கு மரியாதை உண்டு.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்கு எல்லாவற்றின் மீதும் மரியாதை உண்டு என்கிறீர்கள். ஆனால் மிருகங்களைக் கொல்கிறீர்கள்.

விருந்தினர்: இருக்கலாம். ஆனால் ஏன் அப்படி? மனிதன் மாமிசத்தை உண்ண வேண்டியதில்லை என்றாலும், மிருகங்கள் ஒன்றையொன்று சாப்பிட்டுக் கொள்கின்றனவே?

ஸ்ரீல பிரபுபாதர்: மாமிசத்தை சாப்பிடும்பொழுது மிருகங்கள் இயற்கையின் விதிகளை கடைப்பிடிக்கின்றன. ஆனால் நீங்கள் மாமிசத்தை சாப்பிட்டால் அஃது இயற்கையின் சட்டத்தை மீறுவதாகும்.

விருந்தினர்: என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: உதாரணமாக, புலி என்றும் தானியத்தை கேட்டு வருவதில்லை. ‘உங்களிடம் அதிக அளவு தானியம் உள்ளது. எனக்கு சிறிது தாருங்கள்’ எனக் கோருவதில்லை. நூற்றுக்கணக்கான தானிய மூட்டைகள் இருந்தாலும் அஃது அக்கறை காட்டுவதில்லை. ஆனால் ஒரு மிருகத்தைக் கண்டவுடன் பாய்கிறது. அது புலியின் இயற்கைத் தன்மை. ஆனால் நீங்கள் ஏன் தானியம், பழம், பால், இறைச்சி என்று கிடைத்தவற்றை எல்லாம் சாப்பிடுகிறீர்கள்? என்ன இது? நீங்கள் மிருகமுமில்லை. மனிதருமில்லை. உங்கள் மனிதப் பிறவியை தவறாக பயன்படுத்துகிறீர்கள்! ‘நாம் உண்ணத் தகுந்தது எது’ என நீங்கள் சிந்திக்க வேண்டும். புலி மாமிசத்தை சாப்பிடலாம். ஏனெனில், அது புலி. ஆனால் நாம் மனிதர்கள். நமக்கு கடவுள் அளித்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் முதலியன போதிய அளவு இருக்கும்பொழுது நாம் ஏன் அப்பாவி மிருகங்களைக் கொல்ல வேண்டும்? இதுவே மனிதத் தன்மை.

நீங்கள் ஒரு மனித மிருகம். உங்கள் மனிதத் தன்மையை மறந்தால் மிருகமாக கருதப்படுவீர்கள். (சிறிது நேர மௌனம்) எனவே, நாம் சாதாரணமான மிருகமல்ல. நாம் மிருக குணங்களைப் பெற்ற மனிதர்கள். நாம் நமது மனிதத் தன்மையின் தரத்தை உயர்த்தினால், நமது வாழ்க்கை குறைவற்றதாக அமையும். ஆனால் நாம் மிருகமாகவே நடந்தால், நமது வாழ்க்கை குறைகளை உடையதாக அமையும். அதனால் நாம் நமது மனித உணர்வினை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வாகும். கிருஷ்ணரால் தரப்பட்ட பல்வேறு உணவு வகைகளை உண்டு, நீங்கள் நல்ல முறையில், அமைதியாக, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்னும் பொழுது ஏன் மிருகங்களைக் கொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், விஞ்ஞான பூர்வமாகவும்கூட உங்கள் உடல் காய்கறிகளை சாப்பிடக் கூடிய வகையில் பற்களைப் பெற்றுள்ளது. இயற்கை அவ்வாறு படைத்துள்ளது. புலி வேறு ஒரு மிருகத்தை அடித்துக் கொலை செய்ய வேண்டும். அதனால், அதற்கேற்ற நகங்களும், பற்களும், வலிமையும் பெற்றுள்ளது. ஆனால் உங்களுக்கு இதுபோன்ற வலிமை எதுவுமில்லை. புலி போன்று நீங்கள் பசுவின் மீது பாய்ந்து கொல்ல முடியாது. எனவே நீங்கள் மாமிசக் கிடங்கு தயாரித்து, வீட்டில் உட்கார்ந்திருக்க வேறு யாராவது பசுவதை செய்தால், நீங்கள் அருமையாக உண்ணலாம். இது என்ன செயல்? உங்களால் புலியைப் போன்று பசுவின் மீது பாய்ந்து அதைக் கொன்று உண்ண முடியுமா? உங்களால் முடியாது.

விருந்தினர்: அப்படியானால், உங்களுக்கு இயற்கையின் விதிகளில் நம்பிக்கை கிடையாது. நான் இயற்கையின் நியதி எல்லோருக்கும் சரி சமமாக பொருந்தும் என நினைக்கின்றேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: இயற்கையின் விதியால் புலி அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளதால், அது அவ்வாறு செய்யலாம். ஆனால் நீங்கள் அதை செய்ய முடியாது. ஏனெனில், உங்கள் இயற்கைத் தன்மை வேறு விதமானது. உங்களுக்கு சிந்திக்கக் கூடிய சக்தி இருக்கிறது. உங்களுக்கு மனசாட்சி உண்டு. நீங்கள் நாகரிகமான மனிதர் என சொல்லிக் கொள்கிறீர்கள். எனவே, நீங்கள் இவை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வு. இது குறையற்ற உணர்வாகும். மனித வாழ்க்கை, உணர்வினை மேன்மைப்படுத்திக் கொள்வதற் கானதாகும். அம்மேலான உணர்வே கிருஷ்ண உணர் வாகும். நாம் புலி உணர்வுடன் இருக்கக் கூடாது. ஏனெனில், அது மனிதத் தன்மையாகாது.

மற்றொருவர்: நாம் உயர் தரத்திலிருந்து தாழ்த்தப்பட்டுள் ளோமா? அல்லது தாவரங்கள் மற்றும் மிருகங்களாக இருந்து முன்னேறி உள்ளோமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நீங்கள் இயற்கையின் உயர் தரத்திலிருந்து தாழ்த்தப்பட்டுள் ளீர்கள். ஆன்மீக உலகிலிருந்து பௌதிக உலகிற்கும், பின்னர் அதனிலும் தாழ்ந்த நிலையில் உள்ள சிறிய உயிரினங்களின் உடலுக்கும் வருகிறீர்கள். இங்கிருந்து முன்னேற்றம் கண்டு மறுபடியும் மனிதப் பிறவியைப் பெறுகிறீர்கள். உங்களது மேன்மையான உணர்வை உபயோகப்படுத்தினால், நீங்கள் மேலும் உயர்ந்து கடவுளைச் சென்று அடைவீர்கள். ஆனால் நீங்கள் உங்களது மேன்மையான உணர்வினை உபயோகப்படுத்தவில்லை எனில், மீண்டும் தாழ்ந்த நிலையைப் பெறுவீர்கள். அதனால் தவறாக வழிகாட்டப்படாதீர்கள். கடவுள் உணர்வினை, கிருஷ்ண உணர்வினைப் பின்பற்றுங்கள். அதுவே இம்மானிடப் பிறவியைப் பயன்படுத்திக் கொள்ள உகந்த வழியாகும். அதை விட்டுவிட்டு, நாம் புலியைப் போன்று, மாமிசம் உண்ணுவதில் ஈடுபட்டால் நமக்கு அடுத்த பிறவியில் புலியின் உடல் கிடைக்கும். இதனால் என்ன பயன்? நாம் அடுத்த பிறவியில் வலிமையான புலியாகி விட்டால், அது நல்ல உயர்வாகுமா? புலியின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை தினசரி உண்ண முடியாது. அவை ஒரு மிருகத்தின் மீது பாய்ந்து கொன்று, அந்த மாமிசத்தை பாதுகாக்கும். சுமார் ஒரு மாத காலம் வரை அந்த மாமிசத்தை உண்டு வாழும். ஏனெனில் அவற்றிற்கு மிருகத்தைக் கொல்ல அடிக்கடி வாய்ப்புக் கிடைக்காது. கடவுள் அதற்கான வாய்ப்பைத் தரமாட்டார். இஃது இயற்கை. காட்டில் எங்கெல்லாம் புலி இருக்கிறதோ, அங்கிருந்தெல்லாம் மற்ற மிருகங்கள் ஓடிவிடும். இது தற்காப்புதான். எப்பொழுதாவது புலி மிகவும் பசியுடன் இருக்கும்பொழுதுதான் கடவுள் அதற்கு ஒரு மிருகத்தின் மீது பாய்ந்து கொல்லும் வாய்ப்பளிக்கிறார். புலிக்கு உண்ண தினசரி அதிக சுவையான உணவுப் பண்டங்கள் கிடைப்பதில்லை. இந்த மாதிரி வசதிகள் எல்லாம் நமது மனிதப் பிறவிக்கே உரியதாகும். ஆனால் நாம் அவ்வசதிகளை தவறாகப் பயன்படுத்தினால், பின்னர் வலிமையாக, பாய்ந்து கொல்லும் திறமையைப் பெற்ற புலியின் வாழ்க்கைக்கு தாழ்த்தப்படுவோம்.

புலியைப் போன்று மாமிசத்தை உண்டு வந்தால், அடுத்த பிறவியில் புலியாக பிறக்க வேண்டி வரும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives