குறைவில்லா இயற்கை

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

குறைவில்லா இயற்கை

கிருஷ்ணரால் படைக்கப்பட்ட இயற்கையில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்பதை

ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். தௌடம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி)

அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.

 

டாக்டர்.     சிங்: வயதானவர்களுக்கு வரும் நோய்கள் குறித்து ஆராய, தற்போது, விஞ்ஞானிகள் மூப்பியல் என்னும் துறையை ஏற்படுத்தி வாழ்நாளை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: துன்பங்களை நிறுத்துவதே அவர்களது முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரு முதியவர் பலத்த வலியுடனும் பல்வேறு வியாதிகளுடனும் அவதிப்படுகிறார் என்னும்போது, திடீரென்று மருத்துவர்கள் அவரது வாழ்நாளை நீட்டிப்பதில் என்ன பிரயோஜனம்?

டாக்டர். சிங்: அதைத்தான் அவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சையில் செய்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இஃது அபத்தமானது. அவர்கள் இறப்பை நிறுத்தட்டும்; அதுவே உண்மையான சாதனை. அனைத்து வியாதிகளையும் தடுக்கட்டும். அவர்களால் இதையெல்லாம் செய்ய இயலாது. ஆகவே, அவர்களின் ஆராய்ச்சிகள் அனைத்தும் போராட்டத்துடன் வாழ்வதற்காகவே செய்யப்படுகின்றன. கிருஷ்ணர் பகவத் கீதையில் (15.7) கூறகிறார், கட்டுண்ட உலகிலிருக்கும் எனது நித்திய அம்சங்களான ஜீவன்கள், கட்டுண்ட வாழ்வின் காரணமாக மனம் உட்பட ஆறு புலன்களுடன் மிக கடினமாக சிரமப்படுகின்றனர்.”

சீடர்: தற்போது கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், நீங்கள் எண்ணெய் சார்ந்த நாகரிகத்தை வடிவமைத்துள்ளீர்கள். இஃது இயற்கைக்கு எதிரானது என்பதால், தற்போது எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இயற்கை நியதியின்படி குளிர்காலம் வரவிருக்கிறது. விஞ்ஞானிகளால் இதை நிறுத்தி கோடைகாலமாக மாற்றவியலாது. தாங்கள் இயற்கையை கட்டுப்படுத்துவதாக அவர்கள் தவறாக எண்ணுகின்றனர். இயற்கையில் நடைபெறும் செயல்களுக்கு தங்களையே கர்த்தாவாக உயிர்வாழிகள் எண்ணுகின்றனர் என்று பகவத் கீதையில் (3.27) கிருஷ்ணர் கூறுகிறார். சூரியன் தற்போது உதயமாகிறது. அவர்களால் தற்போது இரவை வரவழைக்க இயலுமா? இரவில் சூரியனை உதயமாவாயாக” என்று கட்டளை இடத்தான் இயலுமா?

உண்மையிலேயே இயற்கையை வெல்ல விரும்பினால், பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. கீதையில் (7.14) கிருஷ்ணர் கூறுகிறார், பௌதிக இயற்கையின் முக்குணங்களாலான எனது தெய்வீக இயற்கை வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்த வர்கள் இதனை எளிதில் கடக்க இயலும்.”

டாக்டர். சிங்: அப்படியெனில், இயற்கையை வெல்வது மிகவும் கடினமானதா?

ஸ்ரீல பிரபுபாதர்: பௌதிகவாதிகளுக்கு அது சாத்தியமற்றது. ஆனால் கிருஷ்ணரிடம் ஒருவன் சரணடைந்தால் அது மிகவும் எளிதாகிவிடுகிறது.

டாக்டர். சிங்: உயிரினங்களில் ஏன் பலவகைகள் உள்ளன என்பதற்கு விஞ்ஞானிகள் ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அதன்படி, பரிணாம வளர்ச்சியின் ஏதோவொரு காலக்கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் அடுத்த தலைமுறையினை உருவாக்கும் உயிரணுக்களில் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து, புதிதாக ஓர் உயிரினம் தோன்றியுள்ளது. அச்சகப் பணியில் ஒரே மாதிரியான தகவல்களை அச்சிடுவதில் சில நேரம் பிழை ஏற்படுவதுபோல, மரபணு நகலாக்கத்தில் பல காரணங்களினால் பிழைகள் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். இப்பிழைகள் உயிரணு மரபுப்பிறழ்வு எனப்படுகின்றன. இப்பிறழ்வின் காரணமாக மரபணுவின் பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, உலகில் பல உயிரினங்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் அந்த தவறு” நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து தொடர்ந்து வந்துள்ளது. பலவகையான உயிரினங்கள் உலகில் எப்போதும் இருந்து வந்துள்ளதை நம்மால் காண முடிகின்றது. எனவே, அந்த தவறு” நித்தியமாக இருப்பதைக் காண்கிறோம். ஒரு தவறு நித்தியமாக இருக்கும்போது, அது தவறு அல்ல; அது புத்திசாலித்தனமான படைப்பாகும்.

டாக்டர். சிங்: மரபணுவில் மாற்றங்கள் ஏற்படாமல் இருந்திருந்தால், உலகில் ஒரே வகையான உயிரினங்கள் மட்டுமே இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. ஒவ்வோர் உயிர்வாழியும் வேறுபட்ட மனங்களை கொண்டிருப்பதால், அத்தகைய வேறுபட்ட மனங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான உயிரினங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, நாம் இங்கே நடந்து செல்கிறோம், ஆனால் பெரும்பாலான மக்கள் நம்முடன் இதில் கலந்துகொள்வதில்லை. ஏனெனில், அவர்கள் வேறுபட்ட மனோபாவத்தைக் கொண்டுள்ளனர். இதுபோன்ற வேறுபாடுகள் இருக்க காரணமென்ன?

டாக்டர். சிங்: அது மரபணுவின் தவறாக இருக்கலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: அது தவறல்ல, அவரவர்களின் விருப்பம். மரண நேரத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப வேறு உடல் வழங்கப்படுகிறது. கிருஷ்ணர் கீதையில் (8.6), ஒருவன் உடலை விடும்போது எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன் அடைகிறான்.” என்கிறார். இறப்பின்போது இருக்கக்கூடிய உங்களது உணர்வே அடுத்த உடலைத் தீர்மானிக்கின்றது. இயற்கை உங்களது அடுத்த உடலை வழங்குகின்றது; அந்த முடிவு உங்கள் கையில் இல்லை, கடவுளின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் இயற்கையின் கரங்களில் இருக்கிறது.

டாக்டர். சிங்: தவறுதலால் பலவகையான உயிரினங்கள் ஏற்பட்டுள்ளன என்பதற்கு விஞ்ஞானி களிடம் சில ஆதாரங்கள் இருப்பதுபோலத் தெரிகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: அஃது அவர்களது தவறு. இயற்கையின் விதிகளில் எந்தத் தவறுமில்லை. இரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு உள்ளது. நீங்கள் மூன்றாம் வகுப்பிற்கான டிக்கெட்டைப் பெற்றுவிட்டு தவறுதலாக முதல் வகுப்பிற்குச் சென்றால், அங்கு இருப்பதற்கு நீங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தவறான வகுப்பிற்குச் சென்றது உங்களது தவறு. தவறுகள் ஏற்படும் என்று கடவுளுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே நீங்கள் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப இயற்கை உங்களுக்கு அழைப்பு விடுகின்றது, இங்கே வாருங்கள், உங்களுக்கான உடல் தயாராக உள்ளது.” இவ்வாறாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான உடலைப் பெறுகிறீர். 84,00,000 வகையான உடல்கள் உள்ளன. இயற்கை இதனைக் கச்சிதமாகச் செய்கிறது. அரசாங்கம் ஒரு நகரத்தை நிர்மாணிக்கும்போது அதனுடன் இணைந்து சிறைச்சாலையையும் நிர்மாணிக்கின்றது. ஏனெனில், பல குற்றவாளிகள் வருவார்கள் என்பதும் அதற்கு சிறைச்சாலை அவசியம் என்பதும் அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும். இஃது அரசாங்கத்தின் தவறல்ல; குற்றவாளிகளின் தவறு. அவர்கள் குற்றவாளிகள் ஆனதால், அங்கு செல்ல வேண்டியுள்ளது. இஃது அவர்களுடைய தவறு.

இயற்கையில் எந்த தவறும் இல்லை. கிருஷ்ணர், குந்தியின் மகனே, இந்த பௌதிக இயற்கை எனது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைகின்ற, அசையாதவற்றை எல்லாம் உண்டாக்குகிறது,” என்று கீதையில் (9.10) கூறுகிறார். பகவான் கிருஷ்ணரின் மேற்பார்வையில் இயங்கும்போது, இயற்கை எவ்வாறு தவறிழைக்க முடியும்? தவறிழைத்தல், மாயையின் வசப்படுதல், குறைபாடுடைய புலன்கள், ஏமாற்றும் குணம் ஆகியவை நம்மிடம் இருக்கக்கூடிய பிழைகள். இதுவே நமக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள வேறுபாடாகும். கடவுளின் புலன்களில் குறைபாடுகள் இல்லை; அவரது புலன்கள் பக்குவமானவை.

டாக்டர். வோல்ஃப்: நாம் குறைபாடுடைய புலன்களைக் கொண்டிருப்பதால், நுண்ணோக்கி, தொலைநோக்கி முதலிய நமது கருவிகளும் குறைபாடுகள் உடையவையே.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். பௌதிக உலகம் குறைபாடுகளைக் கொண்டது. குறையுள்ள அறிவு, குறைபாடுடைய புலன்கள் ஆகியவற்றைக் கொண்டு நீங்கள் உருவாக்குபவையும் குறைபாடுகளுடனேயே இருக்கும். ஆகவே, விஞ்ஞானிகள் கூறும் அனைத்தும் குறைபாடுகள் உடையதே என்று நாம் இறுதியாகத் தீர்மானிக்கலாம்.

டாக்டர். சிங்: ஆனால் அவர்கள் திருப்தியுடன் இருப்பதாகத் தெரிகின்றதே?

ஸ்ரீல பிரபுபாதர்: கழுதைகூட சலவைத் தொழிலாளியின் பொதியைச் சுமப்பதில் திருப்தியுடன் உள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம், பசியால் வாடிக் கொண்டிருக்கும் நாய்கூட ஒரு பெண் நாயைப் பார்த்த மாத்திரத்தில், அதனுடன் உறவு கொண்டு திருப்தியடைகிறது. அது திருப்தியா? நாய் பசியால் தவிக்கிறது, ஆனாலும் உடலுறவினால் திருப்தியடைகிறது. மலத்திலுள்ள புழு உட்பட அனைத்தும் திருப்தியுடன் உள்ளன, இதுவே இயற்கையின் நியதி.

இறக்கும் தருவாயில் இயற்கை நமது உணர்விற்கேற்ப மற்றோர் உடலை வழங்குகிறது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives