பெட்ரோல் சில கருத்துகள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

சமீபத்திய பெட்ரோல் விலை உயர்வு இந்தியாவை பலமாக பாதித்துள்ள இச்சூழ்நிலையில், பெட்ரோல் குறித்து சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீல பிரபுபாதர் உரைத்த பல்வேறு கருத்துகளிலிருந்து சிலவற்றைக் காண்போம்.

இந்த நாகரிகம் முடிந்துவிடும்

மோட்டார் காரை மையமாகக் கொண்ட இந்த நாகரிகம் இன்னும் நூறு ஆண்டுகளில் முடிந்துவிடும். இது சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, இன்னும் நூறு ஆண்டுகளில் முடிந்துவிடும். பெட்ரோல் இன்னும் ஐம்பது அல்லது நூறு வருடங்களில் முடிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர், அதன் பின்னர் இந்த மோட்டார் நாகரிகம் முடிந்துவிடும். (ஸ்ரீமத் பாகவத உரை, லாஸ் ஏஞ்சல்ஸ், ஆகஸ்ட் 18, 1972)

தேவையற்ற பிரச்சனைகள்

பெட்ரோல் பிரச்சனை என்னும் மற்றொரு பிரச்சனையை உருவாக்கி யுள்ளனர். நாகரிகம் என்ற பெயரில் இந்த பிரச்சனையை உருவாகியுள்ளது. இந்த மோட்டார் கார்கள் வருவதற்கு முன்பு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவர்களும் பயணம் செய்து வந்தனர். ஆனால் தங்கள் வருமானத்திற்காக வீட்டிலிருந்து நூறு மைல்கள் பயணம் செய்து வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. இப்போது அத்தேவை இருப்பதால் உங்களுக்கு வாகனம் தேவைப்படுகிறது, பெட்ரோல் தேவைப்படுகிறது, நல்ல சாலைகள் தேவைப்படுகின்றன; இன்னும் பல தேவைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் முந்தைய காலக் கட்டத்தில் கிராமங்கள் இருந்தன. இன்றைய மக்கள் அன்றைய வாழ்க்கையை நாகரிகமற்ற வாழ்க்கை என்கின்றனர். ஆனால் இன்றைய வாழ்வை விட அன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். நவீன நாகரிகம் தேவையற்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. (ஸ்ரீமத் பாகவத உரை, ஹவாய், ஜனவரி 17,1974)

அறியாத மூடர்கள்

ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் புதிய மோட்டார் கார்கள் புதிய பிரச்சனைகளை உருவாக்குகின்றன. பெட்ரோல் இல்லையெனில், இந்த மொத்த தொழிலும் முடிந்துவிடும். ஆனால் அவர்கள் இதனை அறிவதில்லை. இதனால் கழுதைகள், மூடர்கள் என்று அவர்கள் அழைக்கப்படுகின்றனர். (ஸ்ரீமத் பாகவத உரை, லாஸ் ஏஞ்சல்ஸ், ஜனவரி 2, 1974)

பெட்ரோல் தேவையா?

இந்த பெரிய பெரிய பேருந்துகள் தேவையா? பெட்ரோல், இயந்திரங்கள், தொழிற்சாலைகள்–இவையெல்லாம் தேவையா? இயற்கையின் ஏற்பாட்டில் ஏற்கனவே போக்குவரத்து சாதனங்கள் உள்ளன: குதிரைகளும் எருதுகளும் உள்ளன. ஆனால் இவர்களோ அவற்றை சாப்பிட்டு விட்டு, பெரிய பெரிய மோட்டார் பேருந்துகளை உருவாக்குகின்றனர். அதன் பின்னர், பெட்ரோலுக்காக சண்டையிடுகின்றனர். (காலை நடைப்பயணம், மொரீஷியஸ், 2 அக்டோபர், 1975)

விஞ்ஞானிகளின் தவறு

டாக்டர் சிங்: பெட்ரோல் தட்டுப்பாடு என்னும் பிரச்சனை தற்போது பெரிதாக உள்ளதே.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். இப்பிரச்சனைக்கு காரணம் விஞ்ஞானிகளே. பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட நாகரிகத்தை அவர்கள் உருவாக்கி யுள்ளனர். இது இயற்கையின் விதிகளுக்கு முரணானது; எனவே, தற்போது தட்டுப்பாடு வந்துள்ளது. பெட்ரோல் முற்றிலுமாக நின்றுவிட்ட பின்னர், இந்த அயோக்கிய விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள்? அதுகுறித்து அவர்களால் ஏதும் செய்ய முடியாது. (காலை நடைப்பயணம், லாஸ் ஏஞ்சல்ஸ், 1973)

தீர்வு: பயணங்கள் வேண்டாம்

பேருந்துகள் சில நேரங்களில் மூன்று பேரை ஏற்றிக் கொண்டு செல்கின்றன, பெட்ரோல் வீண்தானே! அதுபோல இலட்சக்கணக்கான கார்களும் பேருந்துகளும் பெட்ரோலை விரயமாக்குகின்றன. நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து உங்களது உணவை உற்பத்தி செய்தல் தீர்வாக அமையும். பயணம் செய்வதற்கான தேவைகள் ஏதுமில்லை. சிறிய பயணங்கள் தேவைப்படலாம், அதற்கு மாட்டு வண்டியை உபயோகித்துக் கொள்ளலாம். பெட்ரோலினால் எந்தப் பயனும் இல்லை. மாடுகளை உபயோகித்தால் போதும். (காலை நடைப் பயணம், ரோம், மே 25, 1974)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives