அயோக்கியனாக மாற்றும் பௌதிகக் கல்வி

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஸ்ரீல பிரபுபாதர்: மான்ட்ரியலில் ஒரு வங்காள கனவான் கேள்வி எழுப்பினார், “சுவாமிஜி நீங்கள் மிகவும் பலமான வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள்–முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள்.” இதனை வேறு விதங்களில் விளக்க இயலாதா?”

நான் பதிலளித்தேன், “இல்லை. இவையே பொருத்தமான வார்த்தைகள்–நீங்கள் அனைவரும் அயோக்கியர்கள் மற்றும் முட்டாள்கள்.”

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, பௌதிக உடலைப் பெற்றவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று நீங்கள் ஒருமுறை கூறினீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: அயோக்கியர்களாக உள்ள இவர்கள் உடலை நிரந்தரமாக வைக்க இயலாது என்று தெரிந்திருந்தும்கூட அதற்காக முயற்சி செய்கின்றனர். உங்களால் பௌதிக உடலை நிரந்தரமாக வைக்க இயலாது. இதனை உங்களால் நூற்றாண்டுகளுக்கு தக்கவைக்க இயலாது. உங்களுக்கு அதற்கான அனுமதி கிடைக்காது. இருப்பினும், புன: புன: சர்வித சர்வனானாம், நீங்கள் ஏற்கனவே மென்றதையே மென்றுகொண்டுள்ளீர்கள். சாத்தியமில்லாத காரியத்திற்காக இந்த முட்டாள்கள் மீண்டும்மீண்டும் முயற்சி செய்கின்றனர். எது சாத்தியமில்லையோ எது அனுமதிக்கப்படாததோ அதற்காக அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

சீடர்: உடலை நிரந்தரமாக வைப்பதற்கான தங்களுடைய முயற்சிகள் தோற்கடிக்கப்படும் என்பதை மக்களால் ஏற்க முடிவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அவர்கள் பார்க்கிறார்கள், அவர்கள் அனுபவிக்கின்றார்கள், அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும். எந்த ஒரு மனிதனும் மரணம் அற்றவனாக வாழ்ந்ததாக வரலாற்றில் நாம் காண்பதில்லை. ஹிரண்யகக்ஷிபுவை போன்ற மாபெரும் அசுரனால்கூட மரணமற்றவனாக இருக்க முடியவில்லை. அவ்வாறு இருக்கையில் இந்த சின்ன அசுரர்களைப் பற்றி என்ன சொல்வது? இவர்கள் அனைவரையும் கொல்வதற்கு ஒரே ஓர் உதை போதும்.

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, அயோக்கியத்தனமான கருத்துகளிலும் அயோக்கியத்தனமான கலாச்சாரத்திலும் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்தளவிற்கு மூழ்கியது எப்படி?

ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில், இவர்கள் ரார்கள், மாமிசத்தை உண்பவர்கள். இவர்கள் மாமிசத்தை உண்டு, மது அருந்தி, தகாத பாலுறவில் ஈடுபடுகின்றனர். இது ராட்சச பண்பாடாகும், ஹிரண்யகசிபுவின் பண்பாடாகும். ஹிரண்ய என்றால் “தங்கம்” என்றும், கஷிபு என்றால் “மென்மையான படுக்கை” என்றும் பொருள்படும். இந்த விஷயங்களை எவ்வாறு அடைவது என்பதை மட்டுமே கற்றுக் கொள்ளக்கூடியது ராட்சச பண்பாடாகும். இந்த மக்கள் மென்மையான படுக்கைகள், தங்கம், பாலுறவு மற்றும் பணத்தை மட்டுமே தேடி அலைகின்றனர். ஆனால் அவர்கள் எதைத் தேடுகிறார்களோ அதை அடைவது அசாத்தியமானதாகும். அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. இருந்தும்கூட அவர்கள் அதன் பின்னர் அலைகின்றனர். எப்படிப்பார்த்தாலும் இந்த ஜடவுடலை எவ்வாறு நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியும்? ஆனால் இந்த முட்டாள்கள் சொல்கின்றனர், “நாங்கள் முயற்சி செய்கிறோம். தற்போது நோய்கள் குறைக்கப்பட்டுவிட்டன. நாங்கள் சற்று அதிகமான வருடங்கள் வசிக்கின்றோம்.” இவையெல்லாம் அவர்களின் முட்டாள்தனமான வார்த்தைகள். தங்களுடைய செயல் அசாத்தியமானது என்பதை அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்களுடைய அயோக்கியத்தனமான முயற்சிகளை தொடர்ந்து புகழ்ந்து கொண்டிருப்பர். இந்த நவீன விஞ்ஞானத்தினால் ஏதேனும் உண்மையான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதா? நாம் அந்த விஷயத்தைப் பற்றிதான் பேசுகிறோம். இந்த பெயரளவு விஞ்ஞானிகளும் தலைவர்களும் மக்களை வெறுமனே தவறாக வழிநடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஓர் அருமையான பாடலை இயற்றியுள்ளார். அவர் கூறுகிறார், ஜட வித்ய ஜதோ மாயார் வைபவ. ஜட வித்யா என்றால் “பௌதிகக் கல்வி” என்று பொருள், இது பெயரளவு பௌதிக விஞ்ஞானத்தைக் குறிப்பிடுகிறது. இந்த அறிவினை விருத்தி செய்துகொள்வது என்பது மாயை, அல்லது அறியாமையை விருத்தி செய்வதாகும்.

இதனுடைய விளைவு, தோமார் பஜனே பாதா, மக்கள் கடவுளை மறந்து விடுவர். பெயரளவு பௌதிக விஞ்ஞானம் அல்லது பௌதிகக் கல்வியின் முன்னேற்றத்தினால், மக்கள் கடவுளை மறந்துவிடுகின்றனர். அடுத்ததாக, மோக ஜனமீயா அநித்ய ஸம்ஸாரே, “நான் ஏற்கனவே பௌதிக உலகில் பந்தப்பட்டுள்ளேன், இது தற்காலிகமான உலகம். இங்கு என்னால் தங்க இயலாது–ஆனால் பௌதிக அறிவின் முன்னேற்றமானது என்னை மேன்மேலும் பந்தப்படுத்துகிறது, நான் ஒரு கழுதையைப் போல உழைக்கின்றேன்.” இதுவே நிலைமை. இப்போது கூறுங்கள், பக்திவினோத தாகூர் கூறுவது சரியா தவறா? பௌதிகக் கல்வியின் முன்னேற்றம் என்பது பௌதிக சக்தியின் தாக்கத்தை அதிகரிக்கின்றது என்பது அவரது குற்றச்சாட்டாகும். “இதில் என்ன தவறு?” என்று நீங்கள் கேட்கலாம். “நீங்கள் ஏற்கனவே அயோக்கியர்களாக உள்ளீர்கள், இந்தக் கல்வி உங்களை மேன்மேலும் அயோக்கியர்களாக மாற்றும்,” என்பதே இதிலிருக்கும் தவறாகும். மோக ஜனமீயா அநித்ய ஸம்ஸாரே, “நான் ஏற்கனவே தற்காலிகமான பௌதிக உலகினால் பந்தப்பட்டுள்ளேன், இந்த விஷயங்கள் என்னை மேன் மேலும் முழுமையாக பந்தப்பட வைக்கின்றது.” இது பக்திவினோத தாகூரின் தீர்ப்பாகும். உங்களுக்கு இது பிடிக்காவிடில், இதற்கான காரணத்தை என்னிடம் விளக்குவீராக. பௌதிகக் கல்வியை பொறுத்தவரையில், நீங்கள் ஏற்கனவே இயற்கையின் சட்டங்களினால் பந்தப்பட்டுள்ளீர்கள், நீங்கள் பௌதிகக் கல்வியில் மேலும் முன்னேற்றம் பெறும்பொழுது, உங்களுடைய பந்தமானது மேலும் பலமடையும். இதுவே பக்திவினோத தாகூரின் தீர்ப்பாகும். உங்களுடைய பதில் என்ன? பக்திவினோத தாகூரை தோற்கடித்து, அவர் தவறு என்பதை உங்களால் நிரூபிக்க இயலுமா?

சீடர்: பௌதிகக் கல்வி இல்லாவிடில் பக்திவினோத தாகூர் என்ன எழுதியிருக்கிறார் என்பதைக் கூட நம்மால் படிக்க முடியாது என்று யாரேனும் பதிலளிக்கலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் படிப்பதற்கு எதிரானவர்கள் என்று யார் கூறியது? நாம் எதைப் படிக்க வேண்டும் என்பதே கேள்வியாகும். நீங்கள் உங்களை பக்திவினோத தாகூரைப் படிப்பதற்காக அர்ப்பணிப்பீர்களேயானால், அஃது உண்மையான கல்வியாகும்.

நீங்கள் பக்திவினோத தாகூரிடமிருந்து, வியாஸ தேவரிடமிருந்து, நாரதரிடமிருந்து அறிவைப் பெற வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நீங்கள் ஏன் டார்வின், ஃப்ராய்டு மற்றும் இதர அயோக்கியர்களிடமிருந்து கல்வி கற்கிறீர்கள்? கல்வி என்றால், யாரொருவர் தெய்வீக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளாரோ யாரொருவர் தவறுதலுக்கும் மாயைக்கும் அப்பாற்பட்டவரோ யாரொருவர் ஏமாற்ற மாட்டாரோ, அவரிடமிருந்து கற்பதாகும். உதாரணமாக, நாங்கள் கிருஷ்ணரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். இதுவே கல்வியாகும். நீங்கள் அயோக்கியர்களிடமிருந்தும் முட்டாள்களிடமிருந்தும் கற்பீர்களேயானால், அஃது எத்தகைய கல்வி? கல்வி என்பது கற்றறிந்த நபரிடமிருந்து கற்பதாகும். கல்வி அவசியமே, ஆனால் உண்மையான கல்வி எதுவோ நம்மை ஏமாற்றாத கல்வி எதுவோ, அதுவே நமது தேவையாகும். நவீன கல்வியில் நாம் அனைவரும் ஏமாற்றப்பட்டு வருகிறோம். நாம் இந்த உடல் அல்ல என்றபோதிலும், நாம் இந்த உடலுக்காக உழைக்கும்படி கற்றுத் தரப்படுகிறோம். இது கல்வியா ஏமாற்றுத்தனமா?

நீங்கள் கூறலாம், “நான் என்னுடைய தனிப்பட்ட தேவைகளைப் பார்த்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் நீரை எடுத்து என்னுடைய சட்டையையும் கோட்டையும் முழுமையாக துவைக்கின்றேன்.”

ஆனால் அதுவா அறிவு? “ஐயா நீங்கள் உங்களைப் பற்றி என்ன பார்த்துக்கொள்கிறீர்கள்? உங்களுடைய உணவைப் பற்றி யோசிப்பதில்லையா?”

“நான்? என்னுடைய உணவு? நான் அதைப் பற்றி பொருட்படுத்துவதில்லை. நான் தினமும் என்னுடைய சட்டையையும் கோட்டையும் துவைத்து வருகிறேன்.”

இதுவா கல்வி? நீங்கள் உங்களைப் பட்டினி போட்டுவிட்டு உங்களது சட்டையையும் கோட்டையும் மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்கள். இதுவா கல்வி? இதுவே நடந்து கொண்டுள்ளது. இதனால்தான், மக்கள் அமைதியின்றி உள்ளனர். அவர்கள் பசியுடன் பஞ்சத்தில் துன்பப்பட்டு வருகின்றனர். ஆனால் உங்களுடைய கார்களும் பெரிய கட்டிடங்களும் அவர்களுக்காக என்ன செய்ய முடியும்? அவர்கள் ஏன் தற்கொலை செய்கின்றனர்? ஏனெனில், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. ஆன்மீக ஆத்மாவிற்கு, உண்மையான நபருக்கு எந்தவோர் உணவும் வழங்கப்படுவதில்லை. இதுவா கல்வி?

இது கல்வி அல்ல. எனவே, பக்திவினோத தாகூர் கூறுகிறார், ஜீபாகே கரயே காதா, “பௌதிகக் கல்வியானது ஒருவரை மேன்மேலும் கழுதையாக மாற்றுகிறது.” ஒவ்வொருவரும் ஏற்கனவே கழுதையாக உள்ளனர்; ஏனெனில், அவன் பௌதிக உலகில் உள்ளான், பௌதிக உலகில் உள்ள பெயரளவு கல்வியானது அவனுடைய நிலையை மேன்மேலும் ஆழப்படுத்துகின்றது.

சீடர்: அப்படியெனில், ஸ்ரீல பிரபுபாதரே, ஒரு மனிதன் தன்னுடைய குறிப்பிட்ட உடலைக் கைவிட்டு மற்றொன்றை ஏற்ற பின்னர், அவன் அனைத்தையும் மீண்டும் துவங்குகின்றானா?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. அவன் தான் பெற்றுள்ள உடல் எத்தகையதோ அதற்கு தகுந்தாற்போல பணிபுரிகிறான். அவனுக்கு நாயின் உடல் கிடைக்குமெனில், அவன் நாயைப் போல வேலை செய்வான். அவனுக்கு மரத்தின் உடல் கிடைக்குமெனில், மரத்தைப் போல வேலை செய்வான். “இதற்கு முன்பு நீ எந்தவொரு வெட்கமும் இல்லாமல் நிர்வாணமாக இருப்பதற்கு விரும்பினாய். தற்போது தகிக்கும் வெயிலிலும் உறையும் பனியிலும் ஐயாயிரம் வருடங்களுக்கு நிர்வாணமாக நிற்பாயாக. உன்னுடைய அங்கங்களை யாரேனும் வெட்டினால்கூட உன்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.”

இயற்கையின் இந்த விதிகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்த விஞ்ஞானத்தைப் பற்றி நவீன காலத்தின் பெயரளவு கல்வியாளர்களுக்கு என்ன தெரியும்? கிருஷ்ணர் கூறுகிறார், ததா தேஹாந்தர ப்ராப்தி, “இந்த வாழ்கையின் இறுதியில் நீங்கள் மற்றொரு உடலை அடைய வேண்டும்.” உங்களுடைய அடுத்த உடல் என்னவாக இருக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. உங்களுடைய செயல்களே அவற்றை தீர்மானிக்கின்றன.

நீங்கள் உங்களுடைய நடைமுறை அனுபவத்திலும் இலட்சக்கணக்கான உயிரினங்கள் இருப்பதைக் காண முடியும். உண்மையில் 84 இலட்சம் வகையான உடல்கள் உள்ளன. நீங்கள் அவற்றில் ஏதேனும் ஒன்றினுள் நுழைய வேண்டி வரும். உங்களால் என்ன செய்ய முடியும்? “இந்த உடலினுள் நுழைவாயாக” என்று இயற்கை உங்களை பலவந்தப்படுத்தும்.

அந்த உடலானது சிறப்பானதாகவும் இருக்கலாம், வெறுக்கத்தக்கதாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் மற்றோர் உடலை ஏற்றே ஆக வேண்டும். “நான் மரணத்திற்குப் பின்னர் மற்றோர் உடலை ஏற்றாக வேண்டும், எத்தகைய உடலில் வைக்கப்படுவேன் என்பதில் நான் கவனத்துடன் இருப்பதாகட்டும்,” என்று நினைவூட்டக்கூடிய கல்வி நிறுவனம் எங்கே? அத்தகைய கல்வி நிறுவனம் எங்கே? இந்த கல்வியாளர்கள் அனைவரும் குருடர்களே.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives