இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் “ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தல்” எனும் எளிய வழிமுறையின் மூலம் மக்கள் மீண்டும் ஆன்மீக நிலைக்கு வர உதவி செய்கிறது. பெளதிக வாழ்வின் துயரங்களை முடிவிற்குக் கொண்டு வருவதே மனித வாழ்வின் நோக்கமாகும். தற்போதைய சமுதாயம் பெளதிக முன்னேற்றத்தின் மூலமாக இத்தகு பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டு வர முயல்கிறது. ஆயினும், இந்த பெளதிக முன்னேற்றத்தினால் மனித சமுதாயம் மகிழ்ச்சியாக இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஸ்ரீல பிரபுபாதர்: தற்போதைய தருணத்தில் பெரும்பாலான மக்கள் இருளில் (அறியாமையில்) மூழ்கியுள்ளனர். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், விஷ்ணு அல்லது கிருஷ்ணரை அறிவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அறியாமையினால் இந்த பெளதிக வாழ்க்கையே எல்லாம் என்று அவர்கள் ஏற்கின்றனர். பற்பல பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் திட்டமிடுகின்றனர்; ஆயினும், பிறப்பு, இறப்பு முதலிய வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை
பரம்பொருளின் மூன்று தோற்றங்களை சூரியனை உதாரணமாக வைத்து புரிந்துகொள்ளலாம். சூரியக் கதிர்களைக் கொண்டு சூரியனை எளிதில் உணரலாம், இது முதல் நிலை. சூரிய கிரகத்தை உணர்வது இரண்டாவது நிலை. சூரிய கிரகத்திற்கு நம்மால் செல்ல இயலாது. நவீன விஞ்ஞான கணக்கின்படி சூரியன் பூமியிலிருந்து 930 இலட்சம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியன் இவ்வளவு தொலைவில் உள்ளபோதிலும், அதன் வெப்பத்தை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆகவே, சூரிய கிரகத்திற்கு சென்றால் நமது நிலை என்னவாகும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். சூரிய கிரகத்திலிருந்து பல இலட்சம் மைல்களுக்கு முன்பாகவே நாம் சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்டுவிடுவோம்.
தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே அத்தளத்தை அடைய முடியும். சேவை செய்யும் நிலையை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும். தூய பக்தி என்பது வெறும் மனதளவில் உள்ள உணர்ச்சி அல்ல; மாறாக, நமது அன்பிற்கு பாத்திரமான பகவான் கிருஷ்ணருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்வதாகும். தூய பக்தி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.