பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட, வைகுண்ட நாதருக்கு பிரியமான தூய பக்தர்களின் சகவாசத்தை அரிதாகவே பெறுகின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.2.29)
பற்பல பிறவிகளைக் கடந்தபின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத்கீதை 7.19)
பெறுதல், அளித்தல் போன்றவற்றிற்கு மேலாக, பக்தித் தொண்டாற்றுகையில் ஒருவன் தனக்குள்ள அந்தரங்கமான பிரச்சனைகளையும் துன்பங்களையும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒப்படைக்க வேண்டும். “கிருஷ்ணரே, நான் இவ்விதமாகக் கஷ்டப்படுகின்றேன். அலைமோதும் இந்த ஜட மயக்கக் கடலில் நான் விழுந்து விட்டேன். அன்புடன் என்னைக் காப்பீராக.
பிறப்பு இறப்பைப் பற்றியும், அவற்றிற்கு அப்பால் இருக்கக்கூடிய உண்மையைப் பற்றியும் தற்போது ஆராய உள்ளோம். குழந்தைகள் பிறக்கின்றன, விலங்குகளும் பிறக்கின்றன, செடி கொடிகள்கூட பிறக்கத்தான் செய்கின்றன; இதனால் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர். அதுபோன்றே மரணமும் அனைவரும் அறிந்ததே. மரணமடைந்த பின், இந்தியாவில் உடலை எரித்து விடுவர், மற்ற இடங்களில் புதைத்து விடுவர், வேறுசில இடங்களில் கழுகுகள் சாப்பிடத் தூக்கியெறிந்து விடுவர். இத்தகு பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வாழ்க்கை அமைந்துள்ளது. பிறப்பு என்றால் என்ன என்பதையும், இறப்பு என்றால் என்ன என்பதையும் நாம் அறிவோம். ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாமலேயே உள்ளோம்.