வைகுண்ட பிராப்தி அடைந்தார் என்று ஈமக்கிரியை பத்திரிகையில் அச்சடித்துக்கொள்ளும் நாம் வைகுண்டம் என்றால் என்ன என்றோ, அங்குள்ள சூழ்நிலை என்ன என்றோ, அங்குள்ள மக்களின் உடலமைப்பு, செயல்பாடுகள், இறைவனின் செயல்பாடுகள் என எதுவுமே தெரியாது இருப்பர். இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஒருவன் அங்குள்ள சூழ்நிலையினை உணராது சென்றால், அவன் குளிரிலும், நமது உணவின்றியும் துன்பப்படுவது உறுதி. எங்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவின்றி இருப்பவர்கள் பலர். தெளிவான சித்தாந்தங்களைப் படிக்காமல், குழப்பத்திலேயே இருந்தால் யாருக்கு என்ன பயன்? நமக்கே என்ன பயன்? இவ்வளவு சொல்லிய பிறகும் பகவான் கிருஷ்ணரே புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது இருப்போமானால் நமது இலக்குதான் என்ன? வருடத்திற்கு ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று மட்டும் 1008 முறை காயத்ரி மந்திரம் கூறுபவர்கள்