ஸ்ரீமத் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தத்தில் ஸ்வாயம்புவ மனுவின் புதல்வியான தேவஹூதியின் சரித்திரம் விவரிக்கப்பட்டுள்ளது. அவள் பேரழகு வாய்ந்த இளம்பெண். ஒருமுறை அவள் தனது அரண்மனையின் மாடத்தில் பந்து விளையாடியதைப் பார்த்த விஸ்வாவஸு என்ற கந்தர்வன் அவளது அழகில் மயங்கி விமானத்திலிருந்து கீழே விழுந்தான். கந்தர்வனையே மயக்கும் அழகுடையவள் அவள்.
அதே சமயத்தில், அவள் கற்பில் மிகச்சிறந்தவளாக இருந்தாள். அவள் நாரத முனிவருடைய ஆலோசனையின்படி, பக்தியில் சிறந்த கர்தம முனிவருக்கு தன் மனதைக் கொடுத்தாள்.
Back to Godhead பத்திரிகையின் (பகவத் தரிசனத்தின் ஆங்கில மூலம்) நவம்பர் 20, 1958 இதழில் வெளியான இந்த சிந்திக்கத் தூண்டும் சுவாரஸ்யமான கட்டுரையில், ‘திரவ அழகு’ என்ற அற்புதமான கதையை ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார். உண்மையின் இயல்பையும் அழகின் இயல்பையும் அவர் தெளிவாக விளக்குகிறார். இந்த விளக்கம் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில், உள்ளுறையும் ஆத்மாவை அறிய முற்படுபவர்களுக்கு வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.