வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்
இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும் திருத்தலம். பகவத் கீதையின் பிறப்பிடமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீ...
கர்ம யோகத்தை நிறைவேற்றுவதற்கு, கடமை என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுதல் அவசியம். இவ்வுலகில் பெரும்பாலான மக்கள் கடமைகுறித்து தத்தமது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, கசாப்புக் கடை வைத்திருப்பவன்கூட, மிருகங்களை வெட்டுவது தன்னுடைய கடமை என்றும் அதன் மூலமாகவே தான் முக்தியடையலாம் என்றும் ஏமாற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளான்.
கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் நாளன்று, பகவத் கீதை பேசப்பட்டதன் 5,151வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள், பகவத் கீதையில் அனைவரின் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் உரிய பதில் உள்ளது என்றும், இதனை பிரதமர் மோடி பாரதத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இக்கலி யுகத்தில் மக்கள் குறுகிய காலமே வாழ்கின்றனர். வாழ்நாளின் கால அளவு குறைந்து கொண்டே போகிறது. நமது பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் நூறு வருடங்கள் வாழ்ந்தனர், தந்தை எண்பது வருடங்கள் வரை வாழ்ந்திருப்பார், நாம் அதை விடக் குறுகிய வருடமே வாழ்வோம் என்பதை அனைவரும் அறிவர். இவ்வாறு காலப்போக்கில் வாழ்நாள் இருபது வருடங்களாகக் குறைந்துவிடும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன், இருபது அல்லது முப்பது வருடங்கள் வாழ்ந்தாலே மிகவும் வயோதிகனாகக் கருதப்படுவான், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
வேத ஞானத்தின் சாரமான பகவத் கீதை எல்லா ஆச்சாரியர்களாலும் போற்றப்பட்டு வந்துள்ளது. நான் யார், கடவுள் யார், கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் ஏன் இந்த உலகில் துன்பப்படுகிறேன், எனது துன்பத்திற்கு நிரந்தர தீர்வு உண்டா, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது போன்றவற்றை அறிய விரும்புவோர் கீதையைப் படிக்கலாம். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் குருக்ஷேத்திர போர்க்களத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல், உலக வாழ்க்கை என்னும் நிரந்தர போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் எல்லா ஜீவன்களுக்கும் உரியதாகும். இதைப் படிப்பதால், உலக வாழ்வின் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தர விடுதலையைப் பெற முடியும்.