சித்திரகேது தமது மகனிடம் அதிக பாசம் கொண்டிருந்ததால், பிள்ளைப்பேறு கிடைக்காத இதர மனைவியர் அனைவரும் இணைந்து அம்மகனை விஷம் கொடுத்து கொன்றனர்.
குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டதை அறியாத இராணி க்ருதத்யுதி, அவன் நீண்ட நேரம் உறங்குவதாக எண்ணி, அவனை எழுப்புவதற்காக தனது தாதியை அனுப்பினாள். அந்த தாதி, தூங்கியிருந்த குழந்தையை அணுகியபோது,