பகவான் ஸ்ரீ இராமர் தன் பத்தினி சீதாதேவியுடனும் தம்பி இலட்சுமணருடனும் சித்திரகூட வனத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர்கள் இங்கு எவ்வாறு வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் போன்ற தகவல்கள் இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன.
பகவான் ஸ்ரீ இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யிருந்தது. அவர் இலட்சுமணருடனும் சீதாதேவியுடனும் வனத்தில் நுழைந்தபோது, எங்கே தங்க வேண்டும் என்பதை பரத்வாஜ முனிவரிடம் வினவினார். பரத்வாஜ முனிவர் தன்னுடைய ஆஷ்ரமத்தில் இருந்து பத்து மைல் தொலைவிலுள்ள சித்திரகூடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.