- Advertisement -spot_img

TAG

conversations

கிருஷ்ணரை திருப்தி செய்வதற்கான வழி

கிருஷ்ணரை திருப்தி செய்ய விரும்புவோர் அவரை அவரது பிரதிநிதியின் மூலமாக அணுக வேண்டும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது இந்த உரையாடலில் தெரியப்படுத்துகிறார்.

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?

மோஸீ: இந்தியாவோடு ஒப்பிடும்போது இங்கு குற்ற நிலை எப்படியுள்ளது, உங்கள் கருத்தென்ன? ஸ்ரீல பிரபுபாதர்: குற்றம் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? மோஸீ: ஒருவர் உரிமையை மற்றவர் பறிக்கும்போது அது குற்றமாகிறது. ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். எங்கள் விளக்கமும் அதுவே. உபநிஷத்தில் ........

டார்வின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி

ஸ்ரீல பிரபுபாதர்: இந்த ஜடவுலகம் ஸத்வ, ரஜோ, தமோ (நற்குணம், தீவிர குணம், அறியாமை குணம்) ஆகிய மூன்று தன்மைகளைக் கொண்டது. இவை எல்லா இடங்களிலும் செயல்படுகின்றன. இம்மூன்று தன்மைகளும் எல்லா உயிரினங்களிலும் வெவ்வேறு அளவு விகிதங்களில் காணப்படுகின்றன. உதாரணமாக, சில மரங்கள் நேர்த்தியான பழங்களைத் தருகின்றன, மற்றவை எரிப்பதற்கு மட்டுமே பயன்படுகின்றன. மிருகங்களிலும் இந்த மூன்று குணங்கள் காணப்படுகின்றன. பசு நற்குணத்தையும், சிங்கம் தீவிர குணத்தையும், குரங்கு அறியாமை குணத்தையும் சார்ந்தது. டார்வினின் கொள்கைப்படி, டார்வின் தந்தை ஒரு குரங்கு (சிரிக்கின்றார்), எவ்வளவு முட்டாள்தனமான கொள்கையை உருவாக்கியிருக்கிறார்!

பக்தனுக்கும் பக்தனல்லாதவனுக்கும் உள்ள வேற்றுமை

சீடர்: ஆசைப்படக் கூடாது என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் எதனைக் குறிப்பிடுகிறார்? ஸ்ரீல பிரபுபாதர்: அவருக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே நாம் ஆசைப்பட வேண்டும் என்பதையே அவர் அங்கு குறிப்பிடுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே, "தனம் வேண்டேன், ஜனம் வேண்டேன், அழகிய பெண்களும் வேண்டேன்" என்று கூறினார். அப்படியெனில், அவர் வேண்டுவது என்ன? "நான் வேண்டுவதெல்லாம் கிருஷ்ண சேவை மட்டுமே" என்கிறாரே தவிர, "எனக்கு இது வேண்டாம், அது வேண்டாம். நான் சூன்யமாகிவிடுகிறேன்," என்று அவர் கூறவில்லை.

எல்லா கிரகங்களிலும் உயிர்வாழிகள்

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தைப் பற்றிப் பேசுவதால் அவர்கள் “பெரிய மனிதர்கள்" என்று கருதப்படுகிறார்கள். டாக்டர் சிங்: இன்னும் பத்து ஆண்டுகளில் அது நடக்கும் என்கிறார்கள்.

Latest news

- Advertisement -spot_img