மக்கள் தங்களது பிரச்சனைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் பிரச்சனை என்று எதுவுமே இல்லை. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், கடவுள் அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். அவர் அனைத்தையும் குறைவற்றதாக, முழுமையானதாக படைத்துள்ளார். பறவைகளுக்காக பற்பல பழங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்--தேவைக்கு அதிகமாகவே கொடுத்துள்ளார். பூர்ணம் இதம், கிருஷ்ணர் ஏற்கனவே எல்லாவற்றையும் போதிய அளவில் தந்துள்ளார்.
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அனுபவிக்கலாம், ஆனால் அவ்வாறு அனுபவிப்பதால், நீங்கள் வாழ்வின் உண்மையான குறிக்கோளை மறந்துவிடுகிறீர்கள். இதுவா புத்திசாலித்தனம்? உங்களது அடுத்த பிறவியை முன்னேற்றிக் கொள்வதற்காக இந்த மனித உடல் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் உங்களது மறுபிறவியில் நாயாகப் பிறக்க நேர்ந்தால், அது வெற்றியா? கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது, நாயாக (Dog) மாறுவதற்குப் பதிலாக, கடவுளைப் (God) போன்று மாறுவீர்கள்.