குற்றமற்ற, பக்குவமான அறிவைப் பெற விரும்பும் மக்கள் மன அனுமானத்தினால் உருவான டார்வின் போன்ற விஞ்ஞானிகளை ஏற்பதற்கு பதிலாக, குற்றமற்ற நபரிடமிருந்து குற்றமற்ற அறிவைப் பெற வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் மானுடவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கேரோல் கெமெரோனுடன் உரையாடுகிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: நமது வாழ்நாள் எழுபது அல்லது எண்பது வருடங்களே. இருந்தும்கூட டார்வினுடைய கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கணக்கிடுகின்றனர்.
உண்மையான மகிழ்ச்சியை அடைதல்
கலிபோர்னியாவின் வெனிஸ் கடற்கரையில், தனது சிஷ்யர்களுடன் நிகழ்ந்த கீழ்காணும் உரையாடலில், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் உடலுறவு வாழ்வின் உண்மை நிலையினையும் துன்பமயமான வாழ்விலிருந்து இன்பமான வாழ்விற்கு வருவதைப்...