பகவானின் மாயா சக்தியால் தூண்டப்பட்டு பிரஜாபதி தக்ஷன், அஸிக்னி என்ற பாஞ்சஜனீயின் மூலம் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அந்த மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணத்தில் சாந்தமானவர்களாகவும் பணிவுமிக்கவர்களாகவும் இருந்தனர். தந்தையின் கட்டளையை ஏற்று, மேற்கில் சிந்து நதி கடலுடன் சங்கமிக்கும் நாராயண சரஸ் என்னும் புனித தீர்த்தத்திற்குச் சென்றனர்.