பகவத் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், ஸாங்கிய யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என பல்வேறு யோக முறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த யோக முறைகளில் பக்தி யோகமே உன்னதமானது என்றும், மற்ற யோகங்கள் பக்தி யோகத்திற்கான படிக்கட்டுகள் என்றும் கீதை விளக்குகின்றது.
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
பிரபுபாதர்: சமுதாயத்தைத் தலைமை தாங்கிச் செல்லும் தலைவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளைப் புரிந்து கொண்டு, அவற்றை மனித சமுதாயத்தின் நன்மைக்காக அறிமுகப்படுத்த வேண்டும். சமுதாயத்தின் தற்போதைய குழப்பமான...