நீங்கள் எனது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், நான் உங்களது மதத்தை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் அனைவரது மதமும் சரியானதே” என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். அவ்வாறு அனைவரது மதமும் சரியாக இருக்கும்பட்சத்தில், கிருஷ்ணர் இங்கு தோன்றி அதர்மத்தை அழிக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? இதனைப் புரிந்துகொள்ள முயலுங்கள். தர்மம் என்பது ஒருவரது விருப்பத்தைச் சார்ந்தது எனில், அதர்மம் என்பதற்கே இடமிருக்காது.
லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான் எனது ஆன்மீக குருவினால் கட்டளையிடப்பட்டேன், அதன்படி நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இங்கு தனியாக வந்தேன், எந்த உதவியும் பணமும் என்னிடம் இருக்கவில்லை. எப்படியோ நான் இங்கு தொடர்ந்து தங்கிவிட்டேன்
மயங்கியுள்ள நமது உணர்வுகிருஷ்ண பக்தி இயக்கம் என்னும் இந்த முக்கியமான இயக்கம், எல்லா உயிர்வாழிகளையும் தன்னுடைய மூல உணர்விற்கு கொண்டு வருவதற்கானதாகும். பல்வேறு மனநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை உண்மை...
கடவுளைப் பற்றி நவீன நாகரிக மனிதனிடம் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கலாம். குழந்தைகள் ஒரு வயதான மனிதரை தாடியுடன் இருப்பதாகக் கற்பனை செய்கின்றனர், பல இளைஞர்கள் கடவுளை கண்களுக்குப் புலப்படாத சக்தி என்றோ மனக் கற்பனை என்றோ நினைக்கலாம். இந்த உரையில், ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண உணர்வைப் பற்றிய தத்துவத்தை மிகவும் விளக்கமாக ஆச்சரியப்படத்தக்க வகையில் விளக்குகிறார்.