குருவினால் புறக்கணிக்கப்பட்டவன் கிருஷ்ணராலும் புறக்கணிக்கப்படுகிறான். கிருஷ்ணர் பக்தர்களைக் காப்பவர், துஷ்டர்களை அழிப்பவர். ஏகலைவன் குரு பக்தனாக இருந்திருந்தால், கிருஷ்ணர் ஏகலைவனைக் கொன்றிருக்க மாட்டார். அவன் துஷ்டனாக இருந்த காரணத்தினால்தான், கிருஷ்ணர் தனது கரங்களாலேயே அவனைக் கொன்றார். கிருஷ்ணர் அசுரர்களை மட்டுமே கொல்வார், பக்தர்களை என்றும் பாதுகாப்பார். ஏகலைவன் அசுரத் தன்மை கொண்டவன் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.
வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
அன்புள்ள இறைவனை உண்மையாகத் தேடும் ஆன்மீக அன்பர்களுக்கு, இன்றைய காலக் கட்டத்தில் மட்டுமின்றி நம் முன்னோர்கள் காலம் தொட்டும், இனி வரும் காலங்களிலும் நாம் அனைவரும் சந்திக்கின்ற முக்கியமான...
சாது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சொந்தக் கருத்துகளை உருவாக்குகின்றனர்: நன்றாகப் பழகுபவர், புன்சிரிப்புடன் திகழ்பவர், ஆசி வழங்குபவர், நல்லவர்களாக வாழச் சொல்பவர், தான் நல்லவனே என்று உங்களை நினைக்கச் செய்பவர்–இதுவே சாதுவின் அடையாளமாக அவர்கள் நினைக்கின்றனர். அத்தகு எண்ணத்திற்குத் தகுந்தாற்போல வாழ்ந்து, அவர்களை ஏமாற்றும் சாதுக்கள் ஏராளம். அதுதான் ஆன்மீகம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது. கீதை பேசப்பட்ட இடமான ஜோதிஸரில் இது மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இச்சமயத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கானின்) பக்தர்கள், பிரபுபாதர் புத்தக மாரதான் (தொடர் விநியோகம்) என்னும் பெயரில் வருடந்தோறும் பிரபுபாதரின் புத்தகங்களை பெருமளவில் விநியோகிக்கின்றனர். குறிப்பாக, “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் புத்தகத்தினை இலட்சக்கணக்கில் இந்தியாவிலும் உலகின் மற்ற பாகங்களிலும் விநியோகிக்கின்றனர்.