வழங்கியவர்: இராம நரசிங்க தாஸ்
பௌதிக உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் இயக்கத்திலும் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாம் பல பழமொழிகளைச் செவியுறுகின்றோம்: “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,” “மனமே...
சந்தன மரம் எங்கு வேண்டுமானாலும் வளரலாம், ஆனால் முன்பு மலேசியாவில் அதிக அளவில் சந்தன மரம் வளர்ந்தமையால் அது மலய சந்தனம் என்று அறியப்பட்டது. அதுபோல, பகவான் கிருஷ்ணரால் எங்கு வேண்டுமானாலும் அவதரிக்க இயலும் என்றபோதிலும், அவர் விருஷ்ணி குலத்தில் அவதரித்தார். முதலில் பலராமரும், பின்னர் கிருஷ்ணரும் தோன்றினர். விருஷ்ணி குலத்தில் தோன்றியதால் கிருஷ்ணருக்கு வார்ஷ்ணேய என்ற நாமமும் வழங்கப்படுகிறது.
நாம் அனைவரும் ஜட இயற்கையின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமது நிலையினை கயிற்றினால் கட்டப்பட்ட குதிரை அல்லது காளையைப் போன்றதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஓட்டுநர் கயிற்றை இழுப்பதற்கு தகுந்தாற்போல அந்த விலங்கு செல்லும். அதற்கு சுதந்திரம் என்பதே கிடையாது. நாம் சுதந்திரமானவர்கள் என்று கருதி, “கடவுள் இல்லை. கட்டுப்படுத்துபவரும் இல்லை. நாம் விரும்பியதைச் செய்யலாம்” என்று கூறுவதெல்லாம் அறியாமையே. அறியாமையினால் நாம் பல பாவ காரியங்களைச் செய்கின்றோம்.